கதையாசிரியர் தொகுப்பு: ஆனந்த் சீனிவாசன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

நான் செய்தது சரியா?

 

  அந்த போஸ்டல் டிவிஷனில் சூப்பரின்டெண்டன்ட் ஆகப் பொறுப்பு எடுத்து ஒரு மாதம் ஆகியும் என் வேளை பளு என்னவோ குறையவே இல்லை. எனக்கு முன்பு வேலை செய்தவரின் பெண்டிங் வேலைகள் ஒவ்வொன்றையும் கிளியர் செய்வதற்கு இவ்வளவு நாள் ஆயிற்று. இன்று சனிக்கிழமை. ஏதாவது ஆபீஸ் விசிட் பண்ணிவிட்டு ரிப்போர்ட் கொடுக்கலாம் என்று நினைத்தேன். பொதுவாக வார விடுமுறையாக சனிக்கிழமைகளில் ஸ்டெனோவையோ, ஜீப் டிரைவரையோ அழைத்துப் போகும் பழக்கம் கிடையாது. நான் மட்டும் எந்த ஊர் போக


நண்பேன்டா!

 

  வேலை கிடைக்காத காரணத்தால், மன உளைச்சலில் தவித்த, சுந்தர், அம்மா ராஜம் கொடுத்த காபியை குடித்தவாறே, ”இன்னிக்கு போற இடத்திலேயாவது, ‘இன்டர்வியூ’வில் தேர்ச்சி பெற்று, வேலையில் சேரணும்ன்னு நினைக்கிறேம்மா,” என்றான். ”நிச்சயம் நீ நினைக்கிறது நடக்கும்.” ”கடவுள்கிட்ட வேண்டிக்கோம்மா,” குழந்தை மாதிரி சொன்னான், சுந்தர். ”நான் வேண்டாத தெய்வம் இல்லடா, சுந்தர்… ஆனாலும், கடவுள் இன்னும் கண்ணை திறக்க மாட்டேங்கிறாருடா,” என்றாள், ராஜம். கணவர் வேதாசலத்திற்கு காபியை கொடுத்தவள், ”ஏங்க, ஜெர்மனியிலிருந்து வந்து, ரெண்டு வருஷம்


அந்திம கிரியை!

 

  டாக்டர் ராகவன் வீட்டு அழைப்பு மணியை, தபால்காரன் சிவா அழுத்தியவுடன், வாசலுக்கு வந்தவர், ”என்ன, போஸ்ட்மேன்… ஏதாவது ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கா,” என்றார். ”இல்ல சார்… சன்னிதி தெருவில் உள்ள நாடார் கடையிலே, ‘டெலிவரி’ பண்ணிட்டு இருக்கும்போது, ஒருவர் மயங்கி விழுந்துட்டாரு… நாடார், உங்களை அழைத்து வரச்சொன்னார்,” என்றார், சிவா. அடுத்த ஐந்தாவது நிமிடம், நாடார் கடையில் இருந்தார், டாக்டர். பெரு மூச்சு வாங்கிக் கொண்டிருந்த பெரியவரை பார்த்தவுடன், ‘ஸ்டெதாஸ்கோப்’பை வைத்து, மார்பில் இரண்டு கைகளாலும்