Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: ஆனந்தராஜ்

1 கதை கிடைத்துள்ளன.

பழுப்புக் காலை

 

  ஃப்ராங்க் பாவ்லாஃப் கால்களை ஓய்வாக நீட்டிக்கொண்டு, காப்பியைப் பருகியபடி மனத்தில் தோன்றியதையெல்லாம் சார்லியும் நானும் நிதானமாகப் பகிர்ந்துகொண்டிருந்தோம். மெதுவாக நேரம் கடந்துகொண்டிருக்கச் சில அருமையான கணங்களை அனுபவித்துக்கொண்டிருந்தோம். திடீரென, தனது நாயைத் தான் கொல்ல வேண்டி வரும் என அவன் சொன்னான். எனக்குக் கொஞ்சம் தூக்கிவாரிப்போட்டாலும் வேறு உணர்வு எதுவும் எழவில்லை. என்னைப் பொறுத்தளவில் பதினைந்து வருடங்கள் – இது நீண்ட காலம்தான்- வாழ்ந்துவிட்ட ஒரு நாய், நோயுற்றுச் சிரமப்படுவது பார்க்க வருத்தமளிக்கக்கூடிய ஒரு விஷயம்.