கதையாசிரியர் தொகுப்பு: ஆதவன்

15 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்

 

 கைலாசம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. அவர் பரபரப்படைந்தார். தாகமில்லாமலிருந்தும்கூட மேஜை மேலிருந்த தம்ளரை எடுத்து ஒரு வாய் நீரைப் பருகி, அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அறையின் மறு பக்கத்தை நோக்கி ஒரு கணம் – ஒரே கணம் – பார்வையை ஓட விட்டார். அகர்வால் மேஜை மீது குனிந்து ஏதோ ஃபைலை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தான். கைலாசம் தம்ளரை மறுபடி மேஜை மேல் வைத்தார். ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். நீலவானம், ஓரிரு மேகங்கள்,


புதுமைப்பித்தனின் துரோகம்

 

 ‘ஜூஸ்?’ என்றான் ராம், மெனுகார்டிலிருந்து தலையைத் தூக்கியவாறு. ’வேண்டாம்’ என்றான் வேணு ‘என்னப்பா. எல்லாத்துக்கும் வேண்டாம், வேண்டாம்கிறே!’ என்று ராம் செல்லமாகக் கடிந்து aathavan கொண்டான். ‘இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வேணுவின் சம்மதத்துக்குக் காத்திராமல் அவனாகவே ஆர்டர் செய்தான். ‘இரண்டு பிளேட் இட்டிலி, ஒரு ஊத்தப்பம், ஒரு பூரி, இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வெயிட்டர் அதுவரை சொல்லப்பட்டவற்றையெல்லாம் ஒரு முறை திருப்பிச் சொன்னான். ‘கரெக்ட். ஜூஸ் முதலில்.’ ’பிற்பாடு’ என்றான் வேணு. ராம் தான்


புகைச்சல்கள்

 

 கல்யாணமாகிய முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே கடும்பூசல்கள் எதுவும் ஏற்படவில்லையானால் அந்தக்கட்டத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் முழுவதும் அந்நியர்களாக இருந்தார்களென்பதுதான் காரணம். அந்நியர்களிடையே அவரவருடைய குறை நிறைகள் பற்றிய ஆழ்ந்த பிரக்ஞையோ உறுத்தல்களோ இருக்காது; அவை சார்ந்த திட்டவட்டமான விமர்சனங்களோ தீர்ப்புகளோ இருக்காது; ஒருவரையொருவர் கண்டிக்க வேண்டும்; திருத்த வேண்டும் என்ற aathavan முனைப்பு இருக்காது. இதெல்லாம் நெருக்கத்தில் விளைபவை. உடைமையுணர்வு அல்லது ஆதிக்க உணர்வை எருவாகக் கொண்டு செழிப்பவை, நமக்குச் சொந்தமான வீட்டில் இடித்துத் திருத்தி மாற்றங்களும்


இறந்தவன்

 

 லஞ்ச் டயத்துக்குச் சரியாகப் பதினைந்து நிமிடங்கள் இருக்கும்போது அவன் அவளுடைய அறைக்கு வந்தான். சுரீரென்று அவளுள் பரவிய சிலிர்ப்பு…ஆம், சந்தேக மில்லை. This is it………Love. அவன் பார்வை அவள் முகத்தின் மேல் விழுந்து, ஆனால் அங்கு தங்காமல் வழுக்கிச் சென்று மிஸஸ். பிள்ளையின் மேல் போய் நிலைத்தது. அவன் அவளருகே சென்றான். அவளைத்தான் பார்க்க வந்தது போல. “ஹலோ!” “ஹலோ!” என்றாள் மிஸஸ். பிள்ளை.”உட்காருங்கள்”. அவன் உட்கார்ந்தான். பார்வை எழும்பத் தயங்கியவாறு மேஜை மேல் புரண்டது.


இண்டர்வியூ

 

 சுவாமிநாதன் அப்பாவுடன் கடைத் தெருவில் நடந்து கொண்டிருந்தான். எவ்வளவு கடைகள், எவ்வளவு ஜனங்கள், எவ்வளவு காட்சிகள். ஆனால் சுவாமிநாதன் இதொன்றையும் கவனிக்க வில்லை. அப்பாவுடன் நடக்கிறோம். அப்பாவுடன் நடக்கிறோம் என்ற பெருமையில் அவன் மிதந்து கொண்டிருந்தான். திடீரென்று, ‘ஐஸ்கிரீம் வேணுமாடா?” என்றார் அப்பா. சுவாமிநாதனுக்கு அப்பாவின் கேள்வி வியப்பாகவும் சற்றே ரோஷமாகவும் இருந்தது. “வேண்டாம்பா. நான் குழந்தையா என்ன?” என்றான். அப்பா சிரித்தார்… கிணுகிணுவென்ற சத்தம். அப்பா சிரிக்கும் சத்தமா? சாலையில் போகும் ஏதாவது சைக்கிள் மணிச்


ஒரு தற்கொலை

 

 கதவைத் தட்டும் சத்தத்தில் ரகு சட்டென்று விழித்துக் கொண்டான். பகல் தூக்கம்; முகமெல்லாம் வியர்வை. ‘டொக் டொக், டொக் டொக்’ என்று மறுபடியும் சத்தம். ரகு எழுந்திருக்கவில்லை. வேறு யாராவது போய்த் திறக்கட்டும்; தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தவுடனேயே படுக்கையி லிருந்து எழுந்து விட அவனுக்கு மனம் வருவதில்லை. அப்படியே சற்று நேரம் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டே குருட்டு யோசனைகள் செய்து கொண்டிருக்க வேண்டும். ‘இந்த உலகம், இந்த மனிதர்கள், தலைவிதி தன்னுடைய வாழ்க்கையின் போக்கு…’ தூங்கி


அப்பர் பெர்த்

 

 கடைசியாக ஒரு உறிஞ்சு; கடைசி வாய்ப்புகை – ரயில் ஜன்னலுக்கு வெளியில் அவன் விட்டெறிந்த சிகரெட்டின் சிறு துணுக்கை வேகமான எதிர்க்காற்று கொத்திச் சென்றது. இரவு மணி எட்டேகால். தொடர்ச்சியாக மூன்று சிகரெட்டுகளைக் குடித்தும் பதினைந்து நிமிடங்களைத்தான் தள்ள முடிந்திருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களை எப்படித் தள்ளுவது? – இந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியில், இந்த ஜனங்களுக்கு மத்தியில். சிதம்பரம் அருவருப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டான். டில்லியிலிருந்து அவசரமாகக் கிளம்பியதால் முதல் வகுப்பில் இடம் கிடைக்கவில்லை. அன்று


ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்

 

 டர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை உமிழ்ந்தவாறு அவரை அடித்துத் தள்ளிவிடும் போல சின்னா பின்னமாக்கிவிடும்போல தோன்றியது. ஒரே கணம்தான்; அதோ, அவனும் அவனுடைய‌ வாகனமும் தூரத்தில் சென்று மறைந்துவிட்டன. அவருக்குப் படபடப்பு அடங்குவதற்கு சில விநாடிகள் பிடித்தன. அவர் மனதில் அந்த இளைஞன்பால் மீண்டும் வெறுப்புணர்ச்சி


கால்வலி

 

 மணி ஆறேகால். சித்ராவை இன்னும் காணோம். கணேஷ் பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவனுக்குக் காலை வேறு வலித்தது. உட்கார வேண்டும் போலிருந்தது. வேறு ஏதாவது சினிமாத் தியேட்டருக்கு அவர்கள் – சித்ராவும் அவள் தம்பியும் – போய் நின்றிருக்க மாட்டார்களே? ரிவோலி தியேட்டர் என்று நேற்று நான் தெளிவாகச் சொன்னேனா என்று அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். ஆம்; சொன்னான். நினைவிருக்கிறது. சித்ரா பார்க்க விரும்பியதும் இந்தப் படத்தைத்தான். ஒரு வாரத்திற்கு முன்பு இதைப் பற்றி அவர்கள் பேசிக்


சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்

 

 ‘சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனத்தில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது. வயது இருபத்திரண்டு; பெண் குழந்தை. வீட்டில் வரன் பார்க்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஜாதகம், பூர்வீகம், குலம் கோத்திரம், பதவி, சம்பளம் இத்யாதி இந்த முயற்சிகளும் அதன் பின்னிருந்த பரிவும் கவலையும் அவளுக்கு ஒருவிதத்தில் பிடித்துத்தான் இருந்தது. என்றாலும், இது சம்பந்தமாக அவள் இளம் மனத்திலும் சில அபிப்பிராயங்களும் கொள்கைகளும் இருக்கக்