கதையாசிரியர் தொகுப்பு: ஆதவன் தீட்சண்யா

20 கதைகள் கிடைத்துள்ளன.

எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்

 

  எவர் கண்ணுமறியா நுண்ணிழையில் பூக்கும் அரூபச் சுரங்கம் மனசு. அரணும் மதிலுமென வாய் பிளந்து மேயும் முதலைகளின் அகழியுமாகிய தடை சூழ் காவற்கோட்டைகள் எப்புறமும் மாயத்தில். அண்டவொணாத கால வெளியற்று ஓயாப்பறவையின் சிறகுகளாகி சதாவும் இயக்கம். அணுவணுவாய் உள்பொதியும் அனந்தகோடி ரகசியம் படிக்க யாரால் கூடும்… முடிவற்ற ஆயுளே சித்தித்தாலும் முடியா இலக்கு. வாழ்நாளெல்லாம் முயன்று நனைந்தத் துணியாய் துவளும் இக்கணத்தில் ஏதுமற்ற வெறுங்கூடாய் என்னையே வீசிக்கொள்கிறேன் படுக்கையில். சதையிணுக்குகளில் சல்லடையிட்டு, சாரம் குடிக்க நாச்சுழற்றும்


அணா பைசா விவகாரம்

 

  மாநகராட்சியின் குப்பைவண்டிகள் மட்டுமே வந்துபோகும் அவ்விடத்தில், மிகச்சமீபத்தில் சந்தைக்கு இறக்குமதியாகியுள்ள ஒரு வெளிநாட்டுக் கார் வந்து நிற்பது பொருத்தமற்றதாகத் தெரிந்தது. தலைநகரின் புறத்தே நீண்டோடும் தங்க எண்கரச்சாலையின் (என்.ஹெச் 001) ஏழாவது சுங்கச்சாவடியை நெருங்கும் எவரும் இவ்விடத்தை வேகமாக கடந்துவிடவே துடிப்பார்கள். மூர்ச்சையடைய வைக்குமளவு அங்கு துர்நாற்றத்தை விளவிக் கொண்டிருக்கும் அந்த குப்பைகள் யாவும் அவர்களது வீட்டிலிருந்து வந்தவைதான் என்பதை வசதியாக மறந்துவிட்டு மூக்கைப் பிடித்துக்கொள்ளவும் அவர்கள் தயங்குவதேயில்லை. ஆனால் இந்தக் காரில் வந்தவரோ கண்ணாடியை


அழும்பு

 

  கொஞ்சூண்டு வெட்டாப்பு கொடுத்திருந்த வானம் மறுபடியும் பொத்துக் கொண்டு ஊத்தியது. சுதாரிக்க அவகாசமில்லாத தாக்குதல். ஒரு நாள் ரெண்டு நாளுன்னா சமாளிக்கலாம். வாரம், பத்து நாளுன்னா என்ன பண்ண முடியும்… மூச்சு முட்டி திணறி தவிக்குது ஊர் ஜனமே. திடீர்னு மழை நின்னு தூறலா தனிச்சு சிறுத்து பளீர்னு வெளி வாங்கும். கூண்டை திறந்து விட்டதும் குப்பைமேட்டுக்கு ஓடுற கோழிகளாட்டம் ஜனங்க பறக்கும். அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலை. இன்னேரம்வரைக்கும் வயிறுமுட்ட அடக்கிவச்சிருக்கிற மூத்திரம் பேயணும்… கோணப்பன்


அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…

 

  லிபரல்பாளையம் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அயல்நாட்டு அரசியல் ஆர்வலர்களுக்கு அந்த செய்தி நம்ப முடியாததாகத்தான் இருந்தது. மிகுந்த அதிர்ச்சியும் திகைப்புமுற்ற அவர்கள் தாம் பார்த்துக் கொண்டிருப்பது நிஜம்தானா என்று தம்மைத்தாமே உசுப்பிவிட்டுக் கொண்டனர். டிவியில் ஏதேனும் அம்புலிமாமா கதைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமும்கூட எழும்பியது. இந்தத் தேர்தலில் கழுதைகளும் நாய்களும் போட்டியிடப் போவதாக முதலில் செய்தி வந்தபோது, அது சுயேட்சை வேட்பாளர்கள் சிலருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பற்றிய செய்தியாக இருக்கும் என்றுதான்


லிபரல்பாளையத்தில் தேர்தல்

 

  1.கடவுள் வாழ்த்து நற்சிந்தனை நன்மொழியையும், அத்தகு நன்மொழி நல்லெழுத்தையும், அந்த நல்லெழுத்து நல்ல வாசகர்களையும் பெற்றுத்தருமாதலால் யார் மனதையும் தொந்தரவு செய்யாமல் இந்தக் கதையையாவது எழுதுவதற்கான வல்லமையை அல்லது கருணையை எனக்கு கடவுள் வழங்குவாராக. அப்படி வழங்குவதற்கு சத்தும் சாமர்த்தியமும் இல்லாதிருக்கும் பட்சத்தில் கடவுள் என்ற ஸ்தானத்தில் என்ன மயித்துக்கு இருக்கணும் என்று தற்கொலை செய்துகொள்ளும் துணிச்சலாவது அந்த கடவுளுக்கு வந்து தொலைப்பதாகுக. 2.ஜேம்ஸ்பாண்ட்ஸ் 00007777.5 2008 ஏப்ரல் 1 அல்லது மற்றவர்களை முட்டாளாக்கும் நாள்.