கதையாசிரியர் தொகுப்பு: ஆதவன் தீட்சண்யா

20 கதைகள் கிடைத்துள்ளன.

பொங்காரம்

 

  நெளியாத்து பரிசலாட்டம் தட்டுவட்டம் போட்டு சுத்தி நவுரும் நெலா இல்லை. அது மூஞ்சி காட்ட மூணு நாளாகும். நெறஞ்ச அமாவாசை. பேயும் பிசாசும் பித்தேறி நாயா நரியா அலையும் ராக்காடு. கிலியேத்தும் இருட்டு கிர்ருனு நாலா திக்கும். இருட்டு பழகுனதும் எதெது எங்கெங்கன்னு நெப்புப்படுது. கூமாச்சியா உச்சி சிலுப்பி நிக்கிது கரடு. குட்டான் பிடிக்காத ஜல்லி குத்தேரியா குமிஞ்சிருக்கு அடிவாரத்துல. அந்தாண்ட, வெள்ளெருக்கஞ்செடியில ஆரம்பிச்சு கிளுவமரம் வரைக்கும் மால் போட்டு அளந்து கட்டுன குட்டான் அச்சுவெல்லமாட்டம்


மார்க்ஸை மருட்டிய ரயில்

 

  ரயிலைப் பற்றிய இவ்விவாதத்தில் நீங்கள் அவசியம் பங்கேற்கவேண்டும். குறைந்தபட்சம் கவனிக்கவாவது முயற்சிக்கவும். இல்லையானால் எட்டாம் அத்தியாயத்தில் இந்த ரயிலை நான் எரிக்கும்போது நீங்கள் தேவையற்ற பதட்டத்திற்கு ஆளாக நேரிடும். அதோ கேட்கும் அந்த ஹாரன் சத்தம் ஒரு ரயிலுக்குரியதான கம்பீரத்தோடும் நளினத்தோடும் ஒலிக்கவில்லை என்பது எனது அபிப்ராயம். காசில்லாத தாயிடம் கம்மர்கட் கேட்டு அடிவாங்கிய சிறுபிள்ளை விசித்து அழுவதுபோல் கூவிக்கொண்டு வருகிறது அந்த ரயில். அந்த அழுகுரலும் கூட மனதை நெகிழ்த்தி இரக்கத்தைத் தூண்டுவதாக இல்லாமல்


பு ற ப் பா டு

 

  நிலா வந்துவிட்டது. எல்லையற்ற பெருவெளியை வெறிகொண்டு தழுவுகையில் தூரிகையில் பிடிபடாத வர்ணவினோதமாய் உருகி வழிகிறது கனவுக்குழம்பு . கவிஞனும் ஓவியனும் கவனப்படுத்திவிட முடியாத நெருக்கத்தில், கோர்த்த விரலிடுக்கில் வியர்வை கசிய விழிமூடி ரசித்து லயிப்பின் முகடுகளில் இருவரும். உறைந்திருந்த மௌனம் மட்டுமே உடையாய் படிந்திருக்க, காலம் மூட்டிய பருவக்கொடுந்தணல் தகித்து ஜ்வாலையடங்கி காற்றின் லிங்கனத்தில் தானே எரிந்துவிட தவித்து கிடந்தது கனன்று. அனுமானங்களை உதிர்த்துவிட்டு மனசை பிழிந்து மனசை நிறைத்துவிட்டுப் போகிற வெற்றியை நிகழ்த்தும் வார்த்தைகளுக்கான


ஓடு மீன் ஓட….

 

  அடர்ந்திறங்கும் பனியில் யாவும் உறைந்து கிடக்கின்றன உருவழிந்து. விரைத்து மொன்னையாய் நிற்கும் கம்பங்களின் உச்சியிலிருந்து கிளம்பும் விளக்கொளி பனியில் நமுத்து பாதியிலேயே விழுகிறது நிழல்போல கறுத்து. ஆங்காரமாய் வீசும் காற்றில் குளிரின் கடுமை கூடி விஷமெனக் கடுக்கிறது. கதகதக்கும் குளிராடைகளுக்குள் தூந்திரபிரதேசவாசிகளைப் போல் பதுங்கி, நிறைந்து மலிகிறது கூட்டம். சொந்த ஊருன்னு சுத்தி சுத்தி வந்தா ஒரு கவளச் சோறு வந்துடுமா என்று வித்தாரம் பேசி இங்கே வந்தேறியவர்கள் ஊர் பார்க்க ஓடுகிறார்கள். அப்பன், ஆத்தாள்,


நமப்பு

 

  எங்கப் போனா இந்தத் திருட்டு முண்ட… செரியான ஓடுகாலியா கீறாளே… கால்ல சக்கரம் கிக்கரம் கட்டினிருப்பாளா… த்தூ… என்னா மனுசி இவ… கம்பம் கண்ட எடத்துல காலத்தூக்கினு ஊரலையற நாயாட்டம்… நாலுவாட்டி ஆள் மேல ஆளா சொல்லியனுப்பிச்சும் இந்நேரங்காட்டியும் வரலேன்னா என்னாங்கறது… தம் போக்குல வாயுட்டு பெனாத்தினிருந்தா ஆராயி. கூத்தப்பாடியா மேல கழுத்தமுட்டுக் கோவம். அஞ்சாறுநாளா தலையில நெருநெருன்னு நமப்பு. அழுக்கு சேந்திருக்கும்னு வடிகஞ்சியும் களிமண்ணும் போட்டு நல்லா அரக்கியரக்கி தலைக்கு ஊத்தியும் நமச்சல் தீரல.