கதையாசிரியர் தொகுப்பு: அ.வேளாங்கண்ணி

6 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கேயும் கேட்காத குரல்

 

  அவர்களுக்கு அது ஐந்தாவது விசிட்.. ஐந்து திக் ப்ரண்ட்ஸ்.. ஐடில ரொம்ப பிஸி லைப் வாழ்றவங்க… அப்பப்ப இந்த மர்ம மலைக்காட்டுக்கு ட்ரக்கிங் வருவாங்க.. விஜி, மிதுன், சோபன், ரித்தி அப்பறம் ரமேஷ்.. வேறு வேறு மாநில ஆளுங்கலா இருந்தாலும் எல்லோருடைய தாட்ஸ்ஸும் ஒரே நேர்க்கோட்டுல இருக்கறதால எப்பவுமே ஒரே ஜாலி, கும்மாளமாவே இருக்கும் இவங்க மீட்டீங்ஸ்..ட்ரக்கிங்ஸ்… இவங்க எல்லாத்துக்கும் ஒரே ஒரு விஷயம் ரொம்ப பிடிக்கும்.. அது மர்மம்.. எங்கேயாவது ஏதாவது பேய்வீடு இருக்கு..


வ‌ருவாரா மாட்டாரா?

 

  “கிருஸ்மஸ் கிருஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தச்சாச்சு பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும் மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு நம்ம மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்!” என்ற பாடல் சத்தமாக தனது மகிழ்ச்சியை பீட்டரின் வீட்டிற்குள் ஒலி பரப்பிப்கொண்டிருந்தது. கிருஸ்மஸ்ஸுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தது. பீட்டர் தேவையான புது துணிமணிகளை எல்லாம் வீட்டிலுள்ள அனைவருக்கும் வாங்கிவிட்டார். கிருஸ்மஸ் தினத்திற்காக அனைவரும்


ரசவாதி

 

  “வாங்க சார்.. வாங்க சார்… வாங்க சார்”னு கூப்ட்டு கூப்ட்டு ஓஞ்ச சமயத்துல, “சரி சரி அடுத்த திங்கக்கிழம வரேனு” ஒத்துக்கிட்டாரு எங்க எம்டி.. எதுக்கு எங்க… அப்படீன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி எங்க எம்டியைப்பத்தி சொல்லீட்றேன்… ஒரே சிடு சிடுன்னு இருப்பாரு… யாருக்கிட்ட எப்ப பேசினாலும் கோபமாவே இருப்பாரு.. அது ஏன்னே யாருக்கும் தெரியாது.. ஆனா ஒரே ஒரு நேரத்தில மாத்திரம் ரொம்ப ஹேப்பியா இருப்பாரு.. அது சாப்படர நேரம்…. நல்ல சாப்பாட்டுப்பிரியர்… அதுவும்


பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்

 

  “சார்.. ஒரே காத்தும் மழையுமா இருக்கு… சீக்கிரம் வீட்டுக்கு விடுங்க… பஸ் ஸ்டாண்டு போயி பஸ்ஸ புடிச்சா… ஒரு மணி நேரமாகும் வீட்டுக்கு போறதுக்கு… இப்பவே மணி ஆறாச்சு… இருட்டிக்கிட்டு வேற கெடக்கு…”, என நான் புலம்பியது யார் காதிலும் விழுந்த மாதிரியே தெரியவில்லை… அவரவர் அவரவர் வேலையை முடித்துவிட்டு கிளம்புவதிலேயே குறியாக இருந்தனரே தவிர… எனக்கு உதவி செய்து… என்னை சீக்கிரம் வீட்டிற்கு அனுப்பிவைக்க யாருமே முன்வரவில்லை… இத்தனைக்கும் எல்லாரும் ஆண்கள்..என்னைத்தவிர.. மேலும் எல்லோருக்கும்


1800களின் பிற்பகுதி

 

  1,800 களின் பிற்பகுதி, அன்றைய பேச்சுத்தமிழே, காதில் தேன்வந்து பாய்ந்தது போல் சுவைக்கும். மண்மணக்கும் அந்த அழகிய கிராமத்தின் சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டே புதிதாய் பூத்த மஞ்சள் ரோஜாவை ரசித்து நின்றவள் காதில், உரக்கக்கேட்டது… “பூ… எங்கம்மா இருக்க….?” ஆனால் பூங்குழலி அக்குரலை சட்டை செய்யவில்லை. மஞ்சள் ரோஜாவை விட்டுவிட்டு அதனருகிலிருந்த சிகப்பு ரோஜாவை ரசிக்கச் சென்றுவிட்டாள். அடுத்து சமீபமாயிருந்த வேப்பமரத்திற்குச் சென்று, தன் கரங்களுக்கு எட்டிய தொலைவிலிருந்த ஒரு குச்சியை உடைத்து, பற்களைத் துலக்க