கதையாசிரியர் தொகுப்பு: அ.முத்துலிங்கம்

105 கதைகள் கிடைத்துள்ளன.

பூமத்திய ரேகை

 

 என்னுடைய அம்மாக்களுக்கு என்னை பிடித்தது கிடையாது. ஒரு அம்மா என்றால் சமாளித்திருக்கலாம். மூன்று அம்மாக்களிடமும் சரிசமமாக, வஞ்சகம் வைக்காமல் பேச்சு வாங்குவது எவ்வளவு கடினம். ஆனாலும் நான் மிகச் சாமர்த்தியமாக பன்னிரண்டு வயதுவரை சமாளித்து வந்தேன். அந்த வருடம்தான் நான் வீட்டைவிட்டு ஓடினேன். என் தகப்பனார் பேச்சு வார்த்தைகளில் அவ்வளவு நம்பிக்கை வைக்காதவர். அவர் என்னுடன் பேசிய மிக நீண்ட வசனம் ‘டேய்’ என்பதுதான். அப்பாவிற்கு அடிப்பதற்கும், உதைப்பதற்கும் வசதியான ஒரு வயதில் நான் இருந்தேன். மின்னல்போல


அண்ணனின் புகைப்படம்

 

 அமைதியாக இருந்த எங்கள் கிராமத்தைக் கெடுக்கும் விதமாக ஒரு நாள் புகைப்படாக்காரர் ஒருவர் அங்கே நுழைந்தார். எதோ தும்பு மிட்டாய் விற்க வந்தவரைப் போல சிறுவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். மூன்று கால்கள் வைத்த பெட்டியைக் தூக்கிக்கொண்டு, தலையோடு ஒட்டிய ஒரு தொப்பியை அணிந்த அந்த புகைப்படக்காரர், ஒரு பறவை நடப்பது போல மெதுவாக வழி விசாரித்துக்கொண்டு எங்கள் பக்கத்து வீட்டிற்குள் புகுந்தார். எல்லோரும் அவர் பின்னால் போனார்கள். எனக்கு அப்போது மூன்று வயதுகூட நிரம்பவில்லை. ஆனாலும் நான்


அருள்நாயகம் மாஸ்டரும் அயின்ஸ்டீனும்

 

 அம்மா கிணற்றடியில் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு சடக் சடக்கென்று நடந்து வந்தார். தலையை துவட்டிவிட்டு குனிந்தபோது தலை முடி நிலத்தை தொட்டது. கூரையில் இருந்து உருவிய ஒரு கறுப்பு தடியினால் அம்மா முடியை அடிக்கத் தொடங்கினார். அவர் சிக்கெடுப்பது அப்படித்தான். தண்ணீர் துமி பறந்து என்னைத் தொட்டபோது அது சுகமாக இருந்தது. சூரியனும் எனக்கு பின்னால் நின்று அந்தக் காட்சியை பார்த்தான். ஒரு வட்டமான வானவில்லை அம்மா உண்டாக்கியிருந்தார். அந்த நாள் நல்லாக ஞாபகம் இருக்கிறது. என் வாழ்க்கையில்


சுளுக்கெடுப்பவர்

 

 கல்கி எழுதிய ஐந்து பாகம் பொன்னியின் செல்வனில் குந்தவையும், வந்தியத்தேவனும் சந்திக்கும் இடம் மிகவும் சுவாரஸ்யமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். குந்தவை, வந்தியத்தேவனிடம் பேசும்போதெல்லாம் ‘நீர் பழுவூர் ராணியின் ஒற்றன்’ ‘ நீர் எங்கே சென்றீர்?’ என்று ‘நீர், நீர்’ என்றே பேசுவாள். வந்தியதேவனோ ‘தேவி, தங்களுடைய இதய சிம்மாசனம்’, ‘தங்கள் திருக்கரம்’ என்பான். யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவி பேசும்போது கணவன் ‘நீர், உமக்கு’ என்று பேசுவான். மனைவியோ ‘நீங்கள், உங்களுக்கு’ என்று பேசுவாள். சிறுவர்கள் ‘வாடா, போடா’


வேட்டை நாய்

 

 அவனுடைய பிரச்சினை எப்போது ஆரம்பித்தது என்றால் அவன் தனக்கென்று சொந்தமாக ஒரு வேட்டை நாய் வாங்க தீர்மானித்தபோதுதான். கடந்த ஏழு வருடங்களாக அவன் வேட்டைக்கு போகிறான். அவனுக்கு அது இயல்பாக வந்தது. துப்பாக்கியை தூக்கிப் பிடித்து குறிபார்த்து சுடும்போது வேறு எதிலும் கிடைக்காத ஓர் இன்பம் அவனுக்கு கிடைத்தது. அவனுடைய நண்பன் ஒருவன் கொடுத்த ஆலோசனையில் பறவை வேட்டைக்கு தோதான ரெமிங்டன் துப்பாக்கி ஒன்றை 420 டொலர் கொடுத்து வாங்கியிருந்தான். அப்பொழுது அதிர்ஷ்டவசமாக அவனுக்கு நடாஷா பழக்கமாகியிருக்கவில்லை.


ரோறாபோறா சமையல்காரன்

 

 எனக்கு ஒரு சமையல்காரர் தேவை. அப்படி ஒருவர் கிடைத்தால் அவருடைய வேலை மிகவும் சுலபமானதாக இருக்கும் என்று என்னால் உத்திரவாதம் தர முடியும். அவர் சமைக்க வேண்டியது என் ஒருவனுக்கு மட்டுமே. அதுவும் காலை உணவை நானே தயாரிக்கும் வல்லமை பெற்றிருந்தேன். ரோஸ்டரில் அமத்தி துள்ளிவிழும் ரொட்டியில் வெண்ணெய், தடவி உண்பதற்கு நான் சரியாக நாலு நிமிடம் எடுத்துக்கொள்வேன். மதிய உணவும், இரவு உணவும்தான் பிரச்சினை. பாகிஸ்தானின் வடமேற்கு மூலையில் இருக்கும் பெஷாவாரில்தான் நான் அப்போது வசித்தேன்.


அங்கே இப்ப என்ன நேரம்?

 

 சூடானுக்கு நான் மாற்றலாகிப் போனபோது என் மனைவியும் கூடவே வந்தாள். வழக்கமாக நான் முதலில் போய் வீடு வசதிகள் எல்லாம் ஏற்பாடு செய்தபிறகே அவள் வருவாள். ஆனால் அந்த முறை பிடிவாதமாக அவளும் என்னுடனேயே வந்துவிட முடிவு செய்தாள். நாங்கள் போய் இறங்கிய சில வாரங்களிலேயே எங்கள் சாமான்களும் வந்து சேர்ந்தன. பெரிய லொறியொன்றில் நடுச்சாமத்தில் பிரம்மாண்டமான பெட்டிகளில் அவை வந்து இறங்கின. லொறி வேலையாட்கள் நாங்கள் முன்கூட்டியே அடையாளமிட்ட இடங்களில் அந்தப் பாரமான பெட்டிகளை இறக்கி


மஹாராஜாவின் ரயில் வண்டி

 

 ஒரு விபத்து போலதான் அது நடந்தது. செல்வநாயகம் மாஸ்ரர் வீட்டில் தங்க வேண்டிய நான் ஒரு சிறு அசொகரியம் காரணமாக இப்படி ஜோர்ஜ் மாஸ்ரர் வீட்டில் தங்க நேரிட்டது. எனக்கு அவரை முன்பின் தெரியாது. அந்த இரண்டு இரவுகளும் ஒரு பகலும் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவையாக மாறும். எனது பதினாலு வயது வாழ்க்கையில் நான் கண்டிராத கேட்டிராத சில விஷயங்கள் எனக்குப் புலப்படுத்தப்படும். இன்னும் சில அதிர்ச்சிகளுக்கும் தயாராக நேரிடும். ஜோர்ஜ் மாஸ்ரர் பூர்விகத்தில் கேரளாவில்


எதிரி

 

 கனகாலமாக தனக்கு ஓர் எதிரி இருப்பது அவருக்குத் தெரியாது. இவ்வளவு கால முயற்சிக்குப் பிறகு இப்போதுதான் ஒரு நம்பகமான எதிரி வாய்த்திருந்தது. அந்த எதிரியும் ஒரு பாம்பாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆறுமாத காலமாக இது நடந்து வந்திருக்கிறது. அவருக்குத் தெரியாமல். ஒரு நாள் மாலை கோழிகளை எல்லாம் அடைத்து மூடும் சமயத்தில் தற்செயலாகப் பார்த்தார். இரண்டு முட்டைகள் கேட்பாரற்றுக்கிடந்தன. நாளை காலை பார்க்கலாம் என்று கூட்டை அடைத்து மூடிவிட்டார் ம்வாங்கி. மறுநாள் பார்த்தால்


கொழுத்தாடு பிடிப்பேன்

 

 ஓம் கணபதி துணை The Immigration Officer 94/11/ 22 200, St Catherene Street Ottawa, Ont K2P2K9 ( Please translet Sri Lankan Tamil Language ) [ இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் வசனங்களின் ஓடரை மாற்றாமலும், எனது கருத்துக்கள் சரியாக வரும்படியும் தெட்டத்தெளிவாக எங்கள் கலாச்சார வித்தியாசங்களை விளங்கப்படுத்தியும் மொழிபெயர்க்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.] கனம் ஐயா அவர்களுக்கு, சண்முகலிங்கம் கணேசரட்னம் ஆகிய நான் 90 /03 / 18 அன்று மாலை