கதையாசிரியர் தொகுப்பு: அ.எக்பர்ட் சச்சிதானந்தம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மலையின் தனிமை

 

 கருகிய காகித அடுக்குகள் கிணற்றடியில் புரண்டு கொண்டிருந்தன. உடைந்த சில காகிதத்துண்டுகள் காற்றில் நகர்ந்து, காம்பவுண்டு சுவரில் ஏறமுயன்று பின் கீழே விழுந்து சிதறின. ஒரு குச்சியால் பிரிசில்லா காகித அடுக்குகளைப் புரட்டினாள். கறுப்புத் துகள்கள் குபுக்கென்று எழுந்தன தீய்ந்த நாற்றத்தோடு. அடுக்குகளுக்கு அடியில் நீலநிற டைரி ஒன்றும், வேறு இரண்டு நோட்டுகளும் ஓரங்கள் எரிந்த நிலையில் கிடைத்தன. நோட்டுப்புத்தகங்களில் கிரேசுக்கு எழுதிக் காண்பித்தவை இருந்தன தேதி வாரியாக. 2013 டைரியில் திறந்தாள். மார்வெல்ஸ் செல்வநாயகம் என்று


நுகம்

 

 ரவுண்ட் பங்களா எதிர்புறக் கிணற்று மேட்டில் இவள் தேவன்புடன் உட்கார்ந்தாள். வராண்டாவில் அங்கியினுள் ஏரியா சேர்மன் இருந்தார். இடுப்புக் கறுப்புக் கயிற்றின் முனை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அருகில் சபை ஊழியரின் வழுக்கைத் தலை செவ்வகத்தில் மின்னியது மூங்கில் தட்டி வழியே. எதிரே கைகட்டி நின்றவர்கள் யாரென்று தெரியவில்லை இவளுக்கு. வாசலில் சிம்சன், நேசமணி, அருள் இன்னும் மூவர் நின்றிருந்தனர் பயம், பணிவுடன். “விசுவாசத்தோடு லெட்டரை கொண்டு போய் குடுய்யா. கட்டாயம் செய்வாரு.” “தயானந்தம் தட்டமாட்டாருபா சேர்மன்