கதையாசிரியர் தொகுப்பு: அலர்மேலு ரிஷி

5 கதைகள் கிடைத்துள்ளன.

மனம் மாறியது

 

  டிரிங் டிரிங்… ரிஷீவரைக் கையில் எடுத்து “ஹலோ” என்றான் ராகவன். அடுத்து ‘அப்பா நீங்களா!! இங்கே வரேளா? நம்ப முடியல்லியே ! ரிஷீவரைக் கையால் பொத்திக்கொண்டே”மாலதி! அப்பா நம்பகூட வந்து இருக்க முடிவு பண்ணிட்டாராம்.” சொல்லியபடி ரிஷீவரை மனைவியிடம் தந்தான். “அப்பா! எப்படியிருக்கேள்? இப்பவாவது மனசு மாறித்தே; ரொம்ப சந்தோஷமாயிருக்கு. சீக்கிரமா புறப்பட்டு வாங்கோ” பேச்சைமுடித்துவிட்டு ஒரு துள்ளலுடன் ராகவனிடம், “இப்பத்தான் எனக்கு நிம்மதியாயிருக்கு. என்ன இருந்தாலும் அம்மா போனப்பறம், உங்கப்பா இந்தியாவிலே தனியா இருக்கிறது


தீபாவளி?

 

  டிரிங்…டிரிங்.. தொலைபேசி அந்த நேரத்தில் சிவாவுக்குத் தொல்லை பேசியாகத் தான் தோன்றியது. மணி எட்டாகப் போகிறது. இன்னும் 15 நிமிடங்களில் அவன் அலுவலகத்தில் இருக்க வேண்டும். 8.30 மணிக்கு conference call. அவன் ரிஸீவரை எடுக்கவேயில்லை. அது அடித்துப் பார்த்துப் பின் நின்று போயிற்று. கார் சாவியை எடுத்துக் கொண்டு பறந்தான். ‘சீ இதென்ன வாழ்க்கை ஒரு நாளைப்போல பறந்து பறந்து…? ஹைவேயில் போய்க் கொண்டிருந்த சிவாவின் மனத்தில் ஓடிய கேள்வி இது. அடுத்த மாதம்


பாவம் பரந்தாமன்

 

  பரந்தாமனின் பைக்குள் இருந்த இரண்டு ரூபாய் அவரைப் பரபரக்க வைத்தது. வெகு நாளாகவே அவருக்குத் தெருமுனை ஐயர் கடையில் சாயங்காலம் விற்கும் வடையைச் சுடச்சுட வாங்கிச் சாப்பிட ஆசை. யாருக்கும் தெரியாமல் கிளம்பிவிட்டார். மருமகளுக்குத் தெரிந்தால் வீடே அமளிதுமளிப்படும். அவள் கிடக்கட்டும், தான் தூக்கி வளர்த்த தன் பையன் நாராயணனுமல்லவா இப்படி மாறிப்போய் விட்டான். எல்லாம் தலையணை மந்திரத்தின் வேலை. உப்புச் சப்பில்லாத விஷயத்துக்கு என்ன பாடு படுத்தினான் அவன்! “வயசான காலத்தில ஏம்பா இப்படிப்


அம்மா!

 

  மணி எட்டு. இன்னும் அரைமணி நேரத்திற்குள் பெருக்கித் துடைத்து முடிக்க வேண்டும். கமலத்தின் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. 9.30 மணிக்கு விழா ஆரம்பம். 8.45க்கெல்லாம் ஸ்வர்ணா வந்து விடுவதாகச் சொல்லியிருந்தாள். லயன்ஸ் கிளப் தலைவி ஸ்வர்ணா. அவளுடைய குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் ஆயாவின் சிபாரிசின் மூலம்தான் இந்த லயன்ஸ் கிளப் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள் கமலம். ஸ்வர்ணாவிற்குக் கமலத்தைப் மற்றபடி எதுவும் தெரியாது. வேகம் வேகமாகப் பெருக்கி முடித்த கமலம், டெட்டால் கலந்த தண்ணீர்


உயிரின் விலை

 

  மணி என்ன? கேசவனிடம் ‘ரிஸ்ட் வாட்ச்’ கிடையாது. சுரீரென்று அடித்த வெயிலும், வயிற்றைக் கிள்ளிய பசியுந்தான் மணி இரண்டிருக்கும் என்று உணர்த்தியது. கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்தான். சாம்பார் சாதத்தை மடமடவென்று சாப்பிட்டு முடித்தான். காலை 9 மணி முதல் ‘ஸைன்போர்டு’ எழுதி, வாடி வதங்கியிருந்த அவனுக்கு வயிறு நிறைந்ததும் கண்கள் தாமாகச் சொக்கின. வழக்கம்போல் எதிர்காலம் பற்றிய பிரகாசமான கனவுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. ‘ஸைன்போர்டு’ எழுதிப் பெற்ற அனுபவம், ஓவியக் கல்லூரியில் இடம்