கதையாசிரியர் தொகுப்பு: அருண் காந்தி

8 கதைகள் கிடைத்துள்ளன.

கலங்கரை

 

  வெயில் தணிந்து கடல் காற்று மேற்கு வாக்கில் லேசாக வீசத் தொடங்கிய மாலை அது.ஜகுபர் அலியின் கடையில் வியாபாரம் நன்றாக சூடு பிடித்திருந்தது.கடைக்கு நேரே மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோவிலின் மைக் செட் அலறலில் கடைக்கு வந்தவர்கள் கத்தி கத்தி சாமான்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.ஜகுபர் அலியும் அவரது தம்பி கனியும் பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.சரக்கு கொண்டுவந்த கலைமான் புகையிலைக் காரரும் குளிர்பான ஏஜெண்டும் கம்புக் கூட்டில் பையும் காதில் சொருகிய பேனாவுமாக காத்திருந்தனர். ரெண்டு கிலோ


அறுபடாத வேர்கள்

 

  நாம் நம் பள்ளி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு பருவ காலங்களிலும் ஒவ்வொரு பழங்களைப் பறித்துச் சாபிடுவதிலும் வாங்கிச் சாப்பிடுவதிலும் அனுபவித்த சந்தோசத்தை கண்டிப்பாக யாராலும் மறக்கமுடியாது. மாங்காய்,மாம்பழம்,நாகப்பழம்,கொடுக்காபுளி,நெல்லிக்காய்,விளாம்பழம்,சீதாப்பழம்,நுங்கு,கிழங்கு,முந்திரிப் பழம்,வெள்ளரி,இலந்தைப் பழம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு சீசன் உண்டு.அந்த நாட்களில் நம்முடைய சிந்தனை முழுதும் அதை சுற்றியே இருப்பது தவிர்க்க முடியாதது!.இவற்றில் ஏதேனும் ஒரு மரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நாம் கண்டிப்பாக கல் எறிந்திருப்போம்.அப்படி என் வாழ்வில் மறக்க முடியாதது இலந்தை பழம்.எங்கள் ஊரில் உள்ள


மண் சுவர்

 

  ஆத்தா…ஆத்தோவ்…ஓவ்…என்னடீ…? எலி என்னத்தையோ கரண்டுது பாரு… இந்த எலிப் பண்ணையள என்னவன்றதுனே தெரியலடீ.குருதுதெல்லாம் வேற மொட்டயாக் கெடக்குறது அதுகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமாக் கெடக்கு. நானும் எவள நாளாத்தான் உனக்கிட்ட எலிப்பொறி வக்கச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.கேக்குறியா நீ? யேட்டி!யேட்டியோவ்…வாணி… ஓவ்…என்ன த்தா… ? அங்குன யாரு மீனுக்காரனா போறான்? இல்லத்தா கூனிப்பொடி..நிக்கச் சொல்லவா? அடிப் போடி!”அவன் நால அள்ளிப் போட்டு 10 ருவா ம்பான்…சின்னப்பய கடத்தெருவுக்கு பொய்த்து வரும்போது வாங்கிட்டு வரச் சொல்ல வேண்டியதான்”னு பக்கத்து வீடு