கதையாசிரியர் தொகுப்பு: அரவிந்த் கார்த்திக்

7 கதைகள் கிடைத்துள்ளன.

கருணையின் கண்களை மூடி..

 

 காலையில் எழுந்தவுடன் வீட்டு வாசலுக்குக் கொஞ்சம் தள்ளி இருந்த பிள்ளையார் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜன்னலைத் திறந்து பார்த்த குமார் கேட்டுக்கு வெளியில் இருந்து வீசப்பட்ட தினசரி வாசல் படியில் சரியாக வந்து விழுவதைப் பார்த்து, “இந்தப் பசங்களை கிரிக்கெட் டீமில் போட்டால் நிறைய விக்கெட் விழும் போலத் தோணுது” என்று முணுமுணுத்தவாறே ப்ரஷ்ஷையும் பேஸ்ட்டையும் எடுத்துக் கொண்டு “மாலூ.. பேப்பர் வந்திடுச்சு. எடுத்துட்டு வரியா?” என்றபடி வாஷ்பேஸினுக்குள் கவிழ்ந்து கொண்டான். பத்து நிமிடம் கழித்து


தேடிக்கொண்டு

 

 நாலு பக்கமும் இருட்டு.. ஒரு நீண்ட நெடுஞ்சாலையில் தனியாக ஒரு உருவம் நடந்து கொண்டிருந்தது…இன்னும் எவ்வளவு தூரமோ… மனித மனதின் விசித்திரத்தை எண்ணிக்கொண்டு… அதைப் புரிந்துகொள்ளும் வழி எங்கே என்று தேடிக் கொண்டு…… *** மன்னார்குடியிலிருந்து பஸ் கிளம்பியபோதே இரவு 10.30க்கு மேல் தாண்டியிருந்தது. திருவாரூர் போக ஒரு மணி நேரம் நிச்சயம் பிடிக்கும். அப்புறம் அங்கிருந்து கீவளுரில் இருக்கும் நண்பன் வீட்டுக்குப் போக இன்னும் நேரமாகும். சரிதான். இந்த கொஞ்ச தூரத்துப் பயணமே முழு இரவையும்


யானைகள் புல் மேய்வதில்லை

 

 சில்லென்று இதமாக வீசிக் கொண்டிருந்த மலைக்காற்றில் ஒரு ஈர வாசனை தெரிந்தது. மழை வருமா ? ஆனாலும் அவன் அண்ணாந்து பார்த்தபோது வானம் நிர்மலமான நீல நிறமாகவே இருந்தது. அந்த நீல வானத்தில் இருந்து ஒரு சிறிய துண்டை வெட்டி எடுத்து வைத்தது போல அந்த சிறிய ஏரி அவன் எதிரில் தெரிந்தது. அதன் கரையில் இருந்த பாறையின் மீது அவன் வெகு நேரமாக உட்கார்ந்திருக்கிறான். அவன்…,,,,,,,பிரபு என்கிற பிரபாகர்.. முப்பது வயது இன்னும் முடியவில்லை.. இள


மயிலிறகே ! மயிலிறகே !

 

 மத்தியான வெயிலின் சூட்டிலிருந்து தப்பிக்க எண்ணி ஜன்னல் வழியே வீட்டுக்கூல் நுழைந்த காற்று ஹால் சுவரில் அலங்காரமாக மாட்டியிருந்த மயில்பீலிகளை அசைத்தது. உள்ளேயிருந்து என் மனைவியின் குரல் கேட்டது. “ஏன்னா ! லீவு போட்டுட்டு உக்காந்து இருக்கறப்பவே பாங்குக்கு போயிட்டு வந்துடுங்கோ. இன்னும் எவ்ளோ நேரம் அந்த புஸ்தகத்துலேயே மூழ்கி கெடக்கறதா உத்தேசம் ?” அஞ்சாம் கிளாஸ் பாடத்தின் கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பது பட்டம் பெற்ற பிறகு இத்தனை கஷ்டமா ? நானும் தேடிக் கொண்டேதான் இருக்கிறேன்.


அய்யோடா

 

 இரை தின்ற மலைப்பாம்பு போல இருளில் அந்த நெடுஞ்சாலை அவர்கள் எதிரே நீஈஈளமாக வளைந்து வளைந்து போய்க்கொண்டு இருந்தது. காரின் ஜன்னல் கண்ணாடிகள் ஏற்றப் பட்டு இருந்தபோதும் வெளியே சீறும் காற்றின் இரைச்சலும் சடசடவென்று விழும் மழைத்தாரைகளின் ஓசையும் உள்ளே இருப்பவர்களின் எலும்பு வரை புகுந்து சில்லிட வைத்தது. “ஷ்யாம்.. கிளைமேட் திடீர்னு ரொம்ப மோசமா ஆயிருச்சே ?” “யெஸ் ப்ரீத்தி.. நீ சொல்றது சரிதான். பட்.. இப்போ திரும்பிப் போகவும் முடியாது. எப்படியாவது நேரே போறதைத்