கதையாசிரியர் தொகுப்பு: அமரர் ரஸவாதி

1 கதை கிடைத்துள்ளன.

தோடி

 

  தந்தியைப் படித்ததும் எனக்குப் பிரமை தட்டிப் போய் விட்டது. போன மாதம் தானே இங்கு வந்து விட்டுப் போனார்? நன்றாக இருந்தாரே அப்போது. ‘ஆவுடையப்ப பிள்ளைக்கு உடம்பு மோசமாகி விட்டது. உங்களைப் பார்க்க விரும்புகிறார்’ என்று அவர் மைத்துனர் அடித்திருந்த தந்தி அது. அதன் வாசகம் என் நெஞ்சத்தைக் குத்திக் குதறியது. கைகால்களெல்லாம் பதற ஆரம்பித்துவிட்டன எனக்கு, எப்படியோ ரயிலேறினேன். மனத்தின் பதைபதைப்பு இன்னமும் அடங்காத நிலையில் பெஞ்சியில் உட்கார மாட்டாமல் நிற்கவும் முடியாமல் நான்