கதையாசிரியர் தொகுப்பு: அமரர் கல்கி

29 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கள் ஊர் சங்கீதப் போட்டி

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      ”கேட்டீரா சங்கதியை” என்று கேட்டுக் கொண்டே, கபாலி சுந்தரமய்யர் விஜயம் செய்தார்.      அவர் விஜயமாகும் விஷயத்தை ஜவ்வாது ‘நெடி’ அரை நாழிகைக்கு முன்னமே தெரிவித்து விட்டது. அந்த நெடியினால் நான் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் போது, “கேட்டீரா சங்கதியை” என்றார் மறுபடியும்.      ”போட்டால் தானே கேட்கலாம்!” என்றேன் எரிச்சலுடன்.      ”என்னத்தைப் போட்டால் கேட்கலாம்?” என்று சுந்தரமய்யர் முகத்தைச் சுளுக்கினார்.      ”சங்கதியைப் போட்டால் கேட்கலாம். நம் ஊர் சங்கீத சபையில் கச்சேரி


ரங்கூன் மாப்பிள்ளை

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி.      பர்மாவிலிருந்து பத்திரமாய் திரும்பி வந்த பெண்ணையும் மாப்பிள்ளையையும் வரவேற்பதற்காக என்னுடைய நண்பர் ஒருவர் விருந்து நடத்தினார். விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, “ஏன் ஸார்! இன்னும் உங்கள் பெண் – மாப்பிள்ளை யாராவது ஜோஹோரிலோ, ஸுரபயாவிலோ, கொச்சின் சைனாவிலோ, போனியாவிலோ இருந்து திரும்பி வரப் போகிறார்களா?” என்று கேட்டேன். சாப்பாடு அவ்வளவு ருசியாயிருந்தது. ஆனால், அதைக் காட்டிலும் விருந்துக்கு வந்திருந்தவர்களின் பேச்சு ஸ்வாரஸ்யமாயிருந்தது.      சாப்பாட்டுக்கு முன்னால் மாப்பிள்ளையைக் கொண்டு


மாலதியின் தந்தை

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி 1      ரயில் சிநேகிதம் என்று வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ‘விமான சிநேகிதம்’ என்ற புதிய சொற்றொடரையும் தயவு செய்து அத்துடன் சேர்த்துக் கொள்ள வேணும்.      ஸ்ரீ கே.ஆர். ரங்கபாஷ்யத்துக்கும் எனக்கும் ஏற்கெனவே அறிமுகம் உண்டு என்றாலும்; விமானப் பிரயாணத்தின்போதுதான் எங்களுக்குச் சிநேகிதம் ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே அந்தச் சிநேகிதம் முற்றிக் கனிந்தது.      ஒரு தடவை புது டில்லிக்கு விமான யாத்திரை சென்ற போது எனக்குப் பக்கத்தில் ரங்கபாஷ்யம் உட்கார்ந்திருந்தான். விமானத்தில் ஓரத்து ஆசனத்தில்


வீடு தேடும் படலம்

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி 1      துவாபர யுகத்து பெர்னார்ட்ஷா என்று பெயர் பெற்ற புரொபஸர் வேதவியாசர் மொத்தம் மூன்றரைக் கோடி வார்த்தைகளைக் கொண்ட பதினெட்டுப் புராணங்களை இயற்றினார் அல்லவா! அந்தப் பதினெட்டுப் புராணங்களையும் நைமிசாரண்ய வனத்தின் சூத புராணிகர் சௌனகாதி முனிவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அவ்வளவையும் கேட்டுவிட்டு அம்முனிவர்கள் “அடடா! பதினெட்டுப் புராணத்திற்குப் பிறகு பத்தொன்பாவது புராணம் இல்லாமற் போய் விட்டதே! இனிமேல் நாங்கள் எதைக் கேட்டுக் கொண்டு தூங்குவோம்?” என்று புலம்பினார்கள். அதற்குச்


பாங்கர் விநாயகராவ்

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி முதற் காட்சி நேரம் : காலை ஒன்பது மணி. இடம் : மயிலாப்பூர், “பத்ம விலாசம்” பங்களாவில் முன்புறத்து ஹால். பாத்திரங்கள் : விநாயகராவ், எம்.எல்.சி., அவருடைய மகன் கங்காதரன்; யுவர் சங்கத் தொண்டர்கள். ***** தொண்டர்கள் : நமஸ்காரம், நமஸ்காரம். விநாயகராவ் : வாருங்கள்; உட்காருங்கள். [உட்காருகிறார்கள்.] விநாயகராவ் : நீங்கள் யார், எதற்காக வந்தீர்கள், தெரியவில்லையே? முதல் தொண்டர் : நாங்கள் யுவர் சங்கத் தொண்டர்கள். அடுத்த