கதையாசிரியர் தொகுப்பு: அமரர் கல்கி

29 கதைகள் கிடைத்துள்ளன.

எஜமான விசுவாசம்

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      இந்தியாவையும், உலகத்தையுமே ஒரு கலக்குக் கலக்கி விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஸர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ் துரை இந்தியாவுக்கு வந்தாரல்லவா? வந்து, அவர் சொன்னபடியே ஒரு கலக்குக் கலக்கிவிட்டுச் சேற்றை வாரிப் பூசிக் கொண்டு திரும்பிப் போனாரல்லவா? அந்தக் கிரிப்ஸ் துரையின் விஜயத்தினால் ஏதாவது உண்மையில் பிரயோஜனம் ஏற்பட்டதா, ஏற்படாவிட்டால் அது யாருடைய குற்றம்? – என்பதைப் பற்றியெல்லாம் அபிப்ராய பேதம் இருக்கலாம். ஆனால் ஒரு பலன் நிச்சயமாக


இது என்ன சொர்க்கம்

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      ராவ்பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் மிகுந்த வியாகூலத்துடன் போய்க் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அங்குமிங்கும் ஆவலுடன் நோக்கின. ‘தெரிந்த முகம் ஏதாவது கண்ணுக்குத் தென்படாதா’ என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. “அம்மா! இங்கு வந்து வருஷம் பன்னிரண்டுக்கு மேலாகிறது. பன்னிரண்டு வருஷந்தானா பன்னிரண்டு யுகம் போல் அல்லவா தோன்றுகிறது? – இருக்கட்டும்; இந்தப் பன்னிரண்டு வருஷத்தில் பழக்கமான முகம் ஒன்றைக் கூட காணமுடியவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிக்


கைலாசமய்யர் காபரா

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      எத்தனையோ பயந்த சுபாவமுடையவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் கைலாசமய்யரைப் பார்க்காதவரையில் சரியான பயந்த சுபாவத்தை நீங்கள் பார்த்ததாகச் சொல்ல முடியாது. பயப்படுகிற விஷயத்தில் அவரை மிஞ்சக் கூடியவர் யாருமில்லை. ஒரு சமயம், அவர் வீட்டு வாசலில் தேசியத் தொண்டர்கள் “அச்சமில்லை; அச்சமில்லை” என்று பாடிக் கொண்டு போனார்கள். அந்தப் பயங்கரமான சத்தத்தைக் கேட்டுக் கைலாசமய்யர் பயந்து கட்டிலிருந்து கிழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டார்!      மற்றொரு சமயம், அவர்


லஞ்சம் வாங்காதவன்

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      நடுநிசி. டாண் டாண் என்று மணி அடித்தது. மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. ஆனால் இன்னும் அவர் பைஸல் செய்ய வேண்டிய தஸ்தாவேஜிக் கட்டுகள் மேஜை மேல் மலைபோல் குவிந்து கிடந்தன! *****      உத்தியோக பதவியில் மேலேற ஏற, சம்பளம் அதிகமாக ஆக, வேலை குறைவு என்று சாதாரணமாய் ஓர் எண்ணம் இருந்து வருகிறது. சிற்சில இலாக்காக்கள் சிற்சில பதவிகள் விஷயத்தில் இது


ஸினிமாக் கதை

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி.       “தங்கம்! அதோ அப்பா வருகிறார், பார்!” என்றான் ராமு.      ”மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே” என்றாள் தங்கம்.      கீழே ‘படார்’ என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது.      ”அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்” என்றான் ராமு.      ”இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது” என்றாள் தங்கம்.      ”சண்டை போடறதுன்னு ஒண்ணு பகவான் என்னத்துக்காகத் தான் வச்சிருக்காரோ?” என்று ராமு தத்துவம் பேசினான்.      ”மனுஷாளுன்னுட்டு என்னத்துக்காகத்தான் ஸ்வாமி படைச்சிருக்காரோ?” என்றாள் தங்கம்.