கதையாசிரியர் தொகுப்பு: அமரர் கல்கி

29 கதைகள் கிடைத்துள்ளன.

விஷ மந்திரம்

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி      ”பக்திமான்” என்றால் எங்கள் ஊர் போஸ்டு மாஸ்டருக்கே தகும். பாகவத புராணமே அவருடைய வேதம்; கண்ணனே அவருடைய தெய்வம். வீட்டுக்கூடத்தில் அழகியதொரு சிறு மண்டபம் கட்டி, அதில் கண்ணபிரான் படத்தை ஸ்தாபித்திருந்தார். தினந்தோறும் மாலையானதும், அவர் மனைவி படங்களை மலர் மாலைகளால் அலங்கரித்துத் திருவிளக்கேற்றி வைப்பாள். போஸ்டுமாஸ்டர் தம்புராவில் சுருதி கூட்டிக் கொண்டு ராமஜெபம் செய்வார். சனிக்கிழமை ஏகாதசி தினங்களில் பஜனை நடைபெறும். சுண்டல், வடை, பாயசம் – குழந்தைகளுக்குக்


கைதியின் பிரார்த்தனை

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      கைலாஸம் மணிக்கு முப்பத்தைந்து மைல் வேகத்தில் போய்க் கொண்டிருந்தான். (“போய்க் கொண்டிருந்தது” என்று முடித்து, உங்களைத் திகைக்கச் செய்யவேண்டுமென்று எனக்கு ஆசைதான். ஆனால் மலையைக் கதாபாத்திரமாக வைத்து எழுதும் திறமை இன்னும் எனக்கு வரவில்லை. மனிதர்களைத்தான் கட்டிக்கொண்டு அழ வேண்டியிருக்கிறது.)      அந்தப் பட்டிக்காட்டுச் சாலையில் அவ்வளவு துரிதப் பிரயாணத்தைச் சாத்தியமாகச் செய்தது கைலாஸம் ஏறியிருந்த புதுமாடல் மோட்டார் வண்டிதான். வழியிலே அவன் கடக்கும் படியாக நேர்ந்த கிராமங்களில் வாழ்ந்த


விதூஷகன் சின்னுமுதலி

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி      சத்திரப்பட்டியைச் சுற்றிப் பதினைந்து மைல் விஸ்தீரணத்துக்கு, விதூஷகன் சின்னுமுதலியைப் பற்றி அறியாதவர் யாருமில்லை. சிறுபிள்ளைகள் முதல், கிழவர் கிழவிகள் வரையில் எல்லாருக்கும் அவனைத் தெரியும். எந்த ஊரிலே யார் நாடகம் போட்டாலும் அவனுக்கு அழைப்பு வராமலிராது. சின்னுமுதலி வருகிறான் என்றால் அன்று கூட்டம் இரண்டு மடங்குதான். அவனுடைய அகடவிகட அதிசய சாமர்த்தியங்கள் அந்தத் தாலூகா முழுவதும் பிரசித்தமாயிருந்தன.      கூத்து மேடைக்குச் சின்னுமுதலி வந்துவிட்டானானால் ஒரே குதூகலந்தான். சில சமயம்


அரசூர் பஞ்சாயத்து

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி 1      அமிருதம் அரசூர் சின்னசாமிப் படையாச்சியின் மூத்த தாரத்து மகள். சின்னசாமிப் படையாச்சி கொஞ்சம் சொத்துக்காரன். ஆகையால் முதல் தாரம் செத்துப் போனதும் இரண்டாவது மனைவி கலியாணம் செய்து கொண்டான். இவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கொஞ்ச காலத்துக்கெல்லாம் சின்னசாமிப் படையாச்சி இறந்து போனான். அப்போது அமிருதத்துக்கு வயது பதினாலு.      காமாட்சி – இதுதான் சிறிய தாயார் பெயர் – அமிருதத்தைப் பிரியமாய் வளர்த்து வந்தாள். அமிருதம் பார்வைக்கு


கடிதமும் கண்ணீரும்

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      பிரசித்தி பெற்ற தேவி வித்யாலயத்தின் ஸ்தாபகரும் தலைவியுமான சகோதரி அன்னபூரணி தேவி ஒரு நாள் மாலை வழக்கம் போல் வித்யாலயத்தைச் சுற்றியிருந்த பெரிய தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். வித்யாலயத்துக்குக் கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு பங்களாவிலிருந்து வந்த நாதஸ்வரத்தின் கீதம் அவருக்கு ஏதேதோ பழைய நினைவுகளை உண்டாக்கின. எப்போதும் சாந்தம் குடி கொண்டிருக்கும் அவருடைய முகத்திலே ஒரு நிமிஷம் கிளர்ச்சியின் அறிகுறி தோன்றி அடுத்த கணம் மறைந்தது. அக்காட்சி, அமைதியான