கதையாசிரியர் தொகுப்பு: அமரர் கல்கி

29 கதைகள் கிடைத்துள்ளன.

போலீஸ் விருந்து

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி. “சீச்சீ! இது என்ன உலகம்? வரவர எல்லாம் தலை கீழாய்ப் போய்விட்டது” என்று கந்தசாமி தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.      ”பின்னே என்ன, ஐயா! இரண்டு பூரிக்கும் ஒரு கப் காப்பிக்கும் வழியில்லை என்றால் இது என்ன உலகத்தோடு சேர்த்தி?” என்று அவன் ஒரு கேள்வியைப் போட்டுக் கொண்டு, அதற்குப் பதில் சொல்வது போல் “தூ!” என்று காறி உமிழ்ந்தான்.      கந்தசாமியின் பொக்கிஷ நிலைமை அப்போது மிகவும் கேவலமாய்த்தான் இருந்தது.


கவர்னர் வண்டி

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி 1      மறுநாள் தீபாவளி. தலையாரி முத்துவின் பெண்சாதி பணியாரம் சுடுவதற்காக மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். மகன் சின்னானும் மகள் அஞ்சலையும் ஓர் உடைந்த தகரப் பெட்டியைத் திறப்பதும் மூடுவதுமாக யிருந்தார்கள். அந்தப் பெட்டியில் தீபாவளிக்காக வாங்கிவந்த புதுவேட்டியும், பாவாடையும், இரண்டு மூன்று பட்டாசுக் கட்டுகளும் இருந்தன. பட்டாசுக் கட்டை இப்போதே பிரித்துவிட வேண்டுமென்று சின்னான் சொன்னான். அஞ்சலை “கூடாது, நாளைக் காலையில்தான் பிரிக்க வேண்டும்” என்றாள்.      தலையாரி முத்து அவசரமாய்


தண்டனை யாருக்கு?

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி  1      இருவரும் ஏழைக் குடியானவர்கள். ஏழைகளானாலும் சந்தோஷத்திற்குக் குறைவில்லை. எவ்வளவு மகிழ்ச்சியோடு அவர்கள் சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் போகிறார்கள் பாருங்கள்! அதிலும் மறுநாள் பொங்கல் பண்டிகை. ஆதலால் குதூகலம் அதிகம். ஆனால் சந்தோஷம், சிரிப்பு, குதூகலம் எல்லாம் கடைக்குள் நுழையும் வரையில்தான். கடையில் நுழைந்து இரண்டு புட்டி குடித்துவிட்டால்?  2      சந்தோஷமாய்ப் பேசிச் சிரித்துக்கொண்டு கடைக்குச் சென்றவர்கள் திரும்பி வருகையில் விரோதிகளானார்கள். குடிவெறி ஏறியதும் காரணமில்லாமல் திடீர் திடீரென்று


சுயநலம்

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி   1      கள்ளுக்கடை மூடுவதா? கூடவே கூடாது. ஏழு கள்ளுக்கடை குத்தகை எடுத்திருக்கிறேன். வருஷத்தில் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கிறது. சர்க்காருக்கு அதைப்போல் மூன்று பங்கு கந்தாயம் கட்டுகிறேன். கள்ளுக்கடை ஏன் மூடவேண்டும்?   2      நான் எப்படி சிறைக்கு வந்து சேர்ந்தேன் என்றா கேட்கிறீர்கள்? கள்ளுக்கடை வழியாகத்தான். சிறைச்சாலையில் கொண்டுவந்து சேர்ப்பதற்கு கள்ளுக்கடையைப்போல் குறுக்கு வழி வேறு கிடையாது.   3      முன்னோர் அரும்பாடுபட்டு வளர்த்த தென்னை மரங்கள் கள்


புலி ராஜா

 

  கதை ஆசிரியர்: அமரர் கல்கி      நமது கதாநாயகர் பிரிதிபந்தபுரம் மகாராஜா அவர்களை, ஹிஸ் ஹைனஸ் ஜமேதார் – ஜெனரல், கிலேதார் – மேஜர், சத வியாக்ர ஸ்ம்ஹாரி, மகா ராஜாதி ராஜ விசுவபுவன ஸம்ராட், ஸர் ஜிலானிஜங்ஜங் பகதூர் எம்.ஏ. – டி.ஏ.ஸி.டி.சி., ஸி.ஆர்.ஸி.கே என்றும் சொல்வதுண்டு; ‘புலி ராஜா’ என்று சுருக்கமாகச் சொல்வதும் உண்டு. அவருக்குப் ‘புலி ராஜா’ என்ற பெயர் ஏன் வந்தது என்பதைத்தான் இங்கே சொல்ல முன் வந்திருக்கிறேன்; ஆனால்