Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: அப்புசாமி

75 கதைகள் கிடைத்துள்ளன.

சுத்தம் சுகம் அப்புசாமி

 

  கிரீச் கிரீச் என்ற சப்தம். ராத்திரி மணி பன்னிரண்டு. சுவர்க் கோழிகள் அல்ல. அப்புசாமி மும்முரமாக அன்றைய கணக்கை எழுதிக் கொண்டிருந்தார். மாவிலைச் சருகுகள் : இருபத்தெட்டரை. பால் கவர்கள் : மூன்று. கசங்கிய பொட்டலக் காகிதம் : ஒன்பது. சிகரெட் துண்டுகள் : ஆறு. கார் கிளீன் பண்ணின துணிக் கந்தல் : இரண்டரை அடி. லாட்டரி சீட்டுக் கிழிசல்கள் : ஐம்பத்தேழு. கதவு லேசாகத் திறந்தது. சீதாப்பாட்டி மிகுந்த அக்கறையுடன்(கணவன் மீது 1%,


எல்

 

  “என்ன பிரசிடென்ட்ஜி! உங்களுக்கே இது நன்றாக இருக்கிறதா?” என்றாள் அகல்யா தேவி. பா.மு.கழக செயலாளி. “ஐ டோண்ட் காச் யூ.. என்ன சொல்கிறீர்கள் அகல்யா தேவி…?” என்றாள் சீதாப்பாட்டி. அகல்யா தேவி இன்னோர் அங்கத்தினரிடம் அதற்குள் காதில் என்னவோ கிசுகிசுத்தாள். அந்த அங்கத்தினர் புன்சிரிப்புடன் இன்னொரு சக கிழவியிடம் கிசுகிசுத்தாள். புறப்பட்ட சீதாப்பாட்டியைச் சுற்றிலும் பா.மு.க அங்கத்தினர்கள் சூழ்ந்துகொண்டு அரைச் சிரிப்புடன் என்னவோ மறியல் செய்யாத குறையாக வழியில் நின்றார்கள். “நோ குவெஸ்சன் அப் மை


ஸயண்டிஸ்ட் அப்புசாமி

 

  அப்புசாமிக்கு அரசாங்கத்திடமிருந்து அழைப்பு வந்திருந்தது. சாதாரண அழைப்பு அல்ல, அவசர அழைப்பு. அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துகளைத் தடுப்பதற்கு அவர் என்ன திட்டங்கள் தரமுடியும் என்பதை அறியவே அப்புசாமியை டில்லி அழைத்திருந்தது. ரயிலில் ஏர்கண்டிஷன் கோச்சில் அப்புசாமி பிரயாணமானார். முகத்தில் விஞ்ஞானிகளுக்கே உரிய சிந்தனை. கண்களில் அறிவு முதிர்ச்சியின் ஒளி வெறும் விஞ்ஞானி மட்டுமல்ல, பல நுட்பத்தொழில்களின் அதிபர். லட்சாதிபதி. மினுமினுவென்று ஜொலித்தார். இவ்வளவு சின்ன வயசில் இப்படிப்பட்ட புகழும் அறிவுமா என்று வியக்காதவர்கள் இல்லை.


அப்புசாமி செய்த கிட்னி தானம்

 

  “சீதே! அப்புசாமி பல்லை நறநறத்தார். “நீ என்னை ரொம்பக் கேவலப்படுத்தறே! ஒவ்வொருத்தன் தாஜ்மகால் கட்டினான். நான் கேவலம் ஒரு பாத்ரூம் கட்ட ஆசைப் படறேன் … அதுக்கு வக்கிலையா எனக்கு?” “நத்திங் டூயிங்!” என்ற இரண்டு வார்த்தைகளோடு சீதாப்பாட்டியின் பதில் அமைந்திருந்தால் பரவாயில்லையே. அப்புசாமிக்கு இனிமேல் அவுட் ஹவுஸீலுள்ள பாத்ரூம் தான் என்று உத்தரவு போட்டு விட்டாள். “சீதே! என்னை அழுக்குப் பக்கெட்டைத் தூக்கிட்டு, மலேரியா கொசுவுக்கு எண்ணெய் அடிக்கிறவன் மாதிரி அவுட் ஹவுஸ் பக்கம்


பேரம்

 

  “ஏம்மா, கூடையிலே என்ன?” “கத்திரிக்காய்! நீ வாங்கமாட்டே.” “ஏன் நான் வாங்கமாட்டேன்?” “விசை ஒரு ரூபா சொன்னால் நாலணாவுக்குக் கேட்பியே மகராஜி.” “பின்னே நீ கேட்டபடியே கொடுத்துடக் கொட்டியா வைத்திருக்கிறது இங்கே? விலையைச் சொல்லு.”” “அதான் சொன்னேனே?” “கூடையை இறக்கு முன்னே? பிஞ்சோ முத்தலோ? நல்ல இளசாக இருக்குமா?” “எவ்வளவு வேணும்?” “எனக்கு ஒரு ரெண்டு விசை வேணும். அதைப் பற்றி என்ன?” “அப்புறம் நீ வம்பு பண்ணுவே, பத்து பலம் போதும்னு.” “அட! நான்