Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: அப்புசாமி

75 கதைகள் கிடைத்துள்ளன.

வறுப்பு!

 

  சில கடைகளுக்கு போர்டே தேவையில்லை. அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான் அந்தப் பட்டாணிக் கடலைக் கடை. ஆனாலும், கடை திறந்த புதிதில் ‘வருகடலை வருத்தகம்’ எனக் கோணாமாணா வென்று, முதலாளியே தனக்குத் தெரிந்த ‘ர’கர ‘ற’கரங்களைப் பிரயோகித்து, பெயின்ட்டால் எழுதியிருந்தார். பின்னர், வருத்தகத்தில் ‘க’ உதிர்ந்து வருகடலை வருத்தம் என்றானது. தலையில் அழுக்குத் துண்டும், முண்டா பனியனுமாக, காய்ந்து போன தென்னை ஓலையைப் போல ஒரு எலும்புக்கூடு மனிதன், கடையின் கர்ப்பக்கிரகத்தில் பட்டாணியையோ வேர்க்கடலையையோ விளக்குமாற்றின் அடிக்கட்டையால்


ஒக்காண்டே தூங்கலாம்!

 

  உட்கார்ந்துகொண்டு தூங்குவது ஒரு சுகம். ஒரு யோகம்! அதைப் பல பேர் ஏன் கேலி செய்கிறார்களோ தெரியவில்லை. எத்தனையோ பேருக்குப் படுத்துக்கொண்டாலும் தூக்கம் வருவதில்லை. நண்பன் நாராயணன் அடிக்கடி சொல்வான்… ‘‘செத்தாக்கூட எனக்குத் தூக்கம் வராதுடா!’’ பிள்ளை இல்லாதவர்களுக்குதான் பிள்ளையின் அருமை தெரியும். உட்கார்ந்துகொண்டே தூங்குவது யோகிகளின் தியானத்தைவிடவும் உசத்தி என்றுகூடச் சொல்லலாம். உட்கார்ந்துகொண்டு தூங்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது. இட நெருக்கடி காரணமாக விஸ்தாரமான பரப்பில் வீடுகள், பங்களாக்கள் அருகி வருகின்ற ஒரு


நரிக்குறவி அம்மையாருக்கு செல்…

 

  கல்யாண வீட்டில் சகல பேர்களும் செல்போன் வைத்துக் கொண்டு இருந்தார்கள். கல்யா ணப் பெண், மாப்பிள்ளைப் பையன், நடத்திவைக்கிற சாஸ்திரிகள், தலைமை நாகஸ்வரக்காரர், ஜால்ரா இளைஞன், சத்திரத்து வாட்ச்மேன்… பட்டியல் நீளம்! அழுதுகொண்டு இருந்த ஒரு ஆறு மாசக் குழந்தையின் கையில் அதன் அம்மா செல்லைக் கொடுத்ததும், அதன் அழுகை நின்றுவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கல்யாண வீட்டில் ‘சீர் வரிசையைப் பார்க்கிறது’ என்று ஒரு வழக்கம் உண்டல்லவா? அப்படி, விலை உயர்ந்த வெள்ளிப் பாத்திரங்களிலிருந்து டவுன்


பாவம், இந்த மனைவிமார்கள்!

 

  மூடநம்பிக்கைகள் பலவிதம்! அதிலும், நம்ம ஊர்ப் பெண்மணிகளுக்கென்று… குறிப்பாக, மனைவிமார்களுக்குத் தங்கள் கணவன் பற்றிய மூடநம்பிக்கைகள் ஏராளம். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்க்கலாம். சமையலறையில் மிக்ஸி அரைத்துக் கொண்டே, ‘என்ன… உங்களைத்தானே?’ என்று கூப்பிட்டால், ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டு இருக்கும் கணவன் காதில் அந்தச் சத்தம் விழுந்து, அவன் உடனே பேப்பரைத் தூக்கிப் போட்டுவிட்டு எழுந்து வருவான் என்று எதிர்பார்ப்பது. நகரில் கல்யாண மண்டபங்களின் பெயர்கள், அவை அமைந்துள்ள தெருக்கள், போகும் வழி


நடுக் கதையில் அப்புசாமி!

 

  துபாயிலிருந்து வந்த சித்தப்பா பெண் ஒரு பெரிய பொட்டலம் நிறைய பிஸ்தா வாங்கி வந்துவிட்டாள். வறுத்த பிஸ்தா மேல் ஓட்டுடன் அழகாக வாயைப் பிளந்து கொண்டு சற்றே அங்குமிங்கும் சில பல உப்புக் கரிப்புடன் பிரமாதமாக இருந்தது. பிஸ்தாவில் அதன் உள்ளிருக்கும் பருப்பைவிட அதனுடைய ஓடு மிக அழகு. சின்னச் சின்னக் கிளிஞ்சல் மாதிரி அதைச் சேகரித்து வைக்கக்கூடத் தோன்றும். வேர்க்கடலைத் தோலை உரித்து குப்பையில் கடாசுவதுபோல பிஸ்தா ஓடுகளை நாங்கள் நினைத்தாலும் குப்பையில் போட