கதையாசிரியர் தொகுப்பு: அப்பாதுரை

42 கதைகள் கிடைத்துள்ளன.

திட்டம்

 

 கள்ளக்காதல் இப்படி ஒரு கொலையில் வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரே தெருவில் வசித்த காரணத்தால் என் கணவரின் தம்பியுடன் திருமணத்துக்கு முன்பிருந்தே எனக்குப் பேச்சுப் பழக்கம் உண்டென்றாலும், நெருக்கமேற்பட்டது சமீபத்தில் தான். ஏறக்குறைய ஒரே வயது ஏறக்குறைய ஒரே ரசனை என்று தொடங்கிய பழக்கம், ஏறக்குறைய ஒரே படுக்கை என்றளவுக்கு வந்து விட்டது. எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் நடந்த திருமணம் ஒரே வருடத்தில் ஏமாற்றமாகிவிட்டது. கணவர் நல்லவர் தான். இனிமையாகப் பேசுகிறவர் தான். என்னை மதித்து நடத்துகிறவர்


தூண்டில்

 

 குடந்தை பஸ் ஸ்டேன்டுள் அங்குமிங்கும் சுற்றி, கோவிந்தபுரம் செல்லும் பஸ் நிற்குமிடத்தைத் தேடிப் பிடித்தேன். நிறுத்தப்பட்டிருந்த பஸ் முன்னால் வெற்றிலை மென்றபடி ஓட்டுனர் நடத்துனர் போல் நின்று கொண்டிருந்தவர்களிடம், “கோவிந்தபுரத்துல நிறுத்துவீங்களா?” என்றேன். “ஏளி க்காழுங்க, வன்” என்றார் ஒருவர். வெற்றிலைச்சாறு என் மேல் தெறிக்கும் போல் இருந்தது. பஸ்சுள் ஏறும்படி சைகை செய்தார் மற்றவர். பஸ்சுள் ஏறிக் கடைசி வரிசையில் தென்பட்ட இடத்தில் உட்கார்ந்தேன். இடப்புறத்திலிருந்தவர், கால் விரல்களில் அழுக்காக பேன்டேஜ் அணிந்து கால்களை உயர்த்தி


மானிட சேவை

 

 பூமியின் சுற்றுப்பாதையில் சேர்ந்த உடனேயே அத்தனை பூமித் தலைவர்களுக்கும் செய்தி அனுப்பியிருந்தார்கள். “நாங்கள் கிடிழின் வாசிகள். பூமியிலிருந்து மூவாயிரம் ஒளிவருடங்கள் கடந்து புது கிடிழின் கோளிலிருந்து வருகிறோம். நாங்கள் நல்லெண்ணத்தோடு வருகிறோம். எங்களைப் போரில் வெல்ல முடியாது. முயற்சி செய்யாதீர்கள். மறுபடியும் சொல்கிறோம்: நாங்கள் வருவது நல்லெண்ணத்துடன் தான்”. உலகத்து அத்தனை மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு அந்தந்த நாடுகளின் ஒளி/ஒலி பரப்புகளை இடைமறித்தபடி மணிக்கொருமுறை அவர்களின் செய்திகள் வெளிவந்தன. முதலில் வந்தது செய்தி. பிறகு ஒன்றிரண்டு புகைப்படங்கள். பிறகு


கடத்தல் கல்யாணம்

 

 வேர்கடலைச் சங்கத்தில் உறுப்பினர் கூட்டம் குறைந்து விட்டது. பொருளாதார நெருக்கடியா தெரியவில்லை, வேர்கடலைச் சங்கத்தில் முன்போல் இளைஞர் கூட்டம் வருவது இல்லை. இளைஞர் கூட்டத்துக்கு அஞ்சி ஒதுங்கியிருந்த ‘நாற்பதுக்கு மேல்’ கூட்டம் இப்போது பெரும்பாலும் ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டதன் பாதிப்பு, சங்க அறை அலங்காரத்திலிருந்து மதுபானம் சாப்பாடு வரை தெரியத் தொடங்கியது. அறைகளிலிருந்த படங்கள் விலகி வெள்ளையடிக்கப்பட்டிருந்தன. சிற்றுண்டிகளில் உப்பு குறைக்கப் பட்டிருந்தது. மதுபான வகைகளும் குறைந்திருந்தன. சாய், நெடுமாறன், சித்து மூவரும் உள்ளே நுழைந்த போது,


காசிருந்தால் கல்யாணம்

 

 திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செலவநாயகமும் – ஒரு அறிமுகம்: [+] பொங்கல் விடுமுறை நாட்களானதால் வேர்கடலைச் சங்கத்தில் அதிகமாகக் கூட்டமில்லை. வெனிஸ் அறையில் பதினைந்து பேர் இருக்கலாம். வழக்கமாக வரும் சாமி நாதன், சாய் பிரபு, நெடுமாறன். அருகில் புதிதாக ஒரு வாலிபன். வழக்கம் போல் கண்ணாடிச் சுவரோரமாக அன்புமல்லி. “என்னடா சித்து, ஏன் இப்படி சாய் வீட்டு சமையலைச் சாப்பிட்ட மாதிரி துக்கப்படுறே?” என்றான் சாம், புது வாலிபனிடம். “தை பிறந்தாச்சு” என்றான் சித்து.