கதையாசிரியர் தொகுப்பு: அனு ஸ்ரீராம்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அர்த்தம்

 

  தாரா ஸ்டெதஸ்கோப்பை தன் தோள் மீது போட்டுக் கொண்டு க்ளினிக்கை விட்டு வெளியே வரும் போது இரவு மணி ஏழு. டிரைவர் வழக்கமான “வீட்டுக்குதானேம்மா” என்ற கேள்வியோடு காரைக் கிளம்பினார். ‘வீடு’! ஆயா மகன் ஆனந்தோடு காத்துக் கொண்டிருப்பாள், என்ற நினைவோடு சீட்டில் தலையை சாய்த்துக் கொண்டாள் தாரா. குழந்தைகள் மருத்துவத்தில் எம்.எஸ். முடித்து பல புகழ்பெற்ற டாக்டர் களோடு வேலை செய்து அந்த அனுபவம் கொடுத்த தைரியத்தில் இதோ இந்த க்ளினிக் தொடங்கி ஐந்து


ஒரு நாளாவது

 

  ”எல்லா வீட்லயும் இப்படியா நடக்கும்? நானும் பொறுமையா இருக்கணும்னுதான் பாக்கறேன். ஆனாமுடியல. ஆபிஸ் விஷயமா டூர் போக வேணாம்னு சொல்லல. ஆனா ஞாயிற்றுக்கிழமையாவது வீட்ல குடும்பத்தோட இருங்கனுதானே சொல்றேன்” சுதா அடுப்பில் பாத்திரத்தில் எதையோ கிளறியபடியே புலம்பவது காதில் விழுந்தது. ரமணிக்கு சகல வார்த்தையும் நன்கு கேட்டும் பேப்பர் படிப்பதில் மும்முரமாய் இருந்தான். கம்பெனியின் மார்க்கெட்டிங் மானேஜராக தென்னிந் தியாவுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டதிலிருந்தே இப்படித்தான். ஹைதராபாத், பெங்களூர் என்று ஒவ்வொரு ஊராய் போய் நிறைய


நிறைவேத்துவாயா ராஜி?

 

  தஞ்சாவூர் பாசஞ்சர் சிதம்பரத்தை அடையும்போது காலை மணி ஆறு இருக்கும். பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஸ்டேஷனின் கடைகளில் காபி போடும் சத்தமும் தூங்கி எழுந்த கண்களோடு பெட்டியை தூக்கி நடக்கும் பாஸன்ஞர் கூட்டமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தூக்கம் கலைந்த ஹரிணியை மருமகள் ஷீலா தூக்கிக் கொள்ள மகன் ராகுல் ஆட்டோ தேடத் துவங்கினான். கடந்த ஐந்து வருஷமாக வாடிக்கை யாகப் போன பயணம் இது. நான் முதலில் பார்த்ததற்கு இந்த ஊர் பயங்கரமாக