கதையாசிரியர் தொகுப்பு: அனுஷ்யா ஷாம்பவி

10 கதைகள் கிடைத்துள்ளன.

வருவாளா? அவள் வருவாளா?

 

 ஒருத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டால் எவ்வளவு ஆனந்தமாக இருக்குமோ அவ்வளவு ஆனந்தம் கொண்டான் அவன் – சகல வசதிகளையும் ஒருங்கிணைக்கப்பெற்ற அந்த கைத்தொலைபேசியை அவனுக்கு வீட்டில் வாங்கித்தரப்பட்டதும்!. (அவளுக்கு மட்டும் என்னவாம்? ஒரு அதிர்ஷ்டப் போட்டியில் அவளுக்கும் அதே போன்ற ஒரு கைத்தொலைபேசி கிடைத்ததும் துள்ளினாள்!. யாருடனும் அவ்வளவாக பேசி பழகிராத அவளுக்கு இது பெரும் துணையாக இருந்தது. வீட்டு வேலைகள் செய்த பின் மீதி வேளையெல்லாம் இந்த கைத்தொலைபேசி தான் வாழ்க்கைத்துணை!!. காலநேரம் தெரியாமல்


எங்கே யாருக்கு எதுவோ?!

 

 படுக்கையில் புரண்டு புரண்டு படுத்து, வலி எடுத்தது தான் மிச்சம்!… துாக்கம் விரைவில் வந்து கண்களைத் தழுவுவதாகத் தெரியவில்லை. ஒரு காலத்தில், காதலின் ஏக்கத்தால் தூக்கம் வரவில்லை…. இப்பொழுது முறிந்து போன பத்து வருட காதல் வாழ்க்கையை நினைத்து நினைத்து துக்கத்தால் தூக்கம் வரவில்லை! காதல்…. எவ்வளவு பொய்யான விஷயம்!.. ஜாதி, மதம் நிறம், மொழி வித்தியாசங்கள் பார்க்காமல் பத்து வருட காலமாகக் காதலிப்பதாகக் கூறிக் கொண்டு, கடைசியில் அப்பனின் சொத்து கை நழுவி விடுமோ என்ற


கணக்கர் கடவுள்!

 

 இந்தியா…..ஆண்டு 1978…… இலங்கையிலிருந்து விமானத்தில் பயணித்த போது, விமானத்தின் ஜன்னல் வழியே தெரிந்த நீலக் கடலின் அழகை ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை. இரண்டு வருடங்கள் கழித்து அப்பாவைப் பார்க்கப் போகிற சந்தோஷமும் இல்லை. மனம் நிறைய கவலையே நிறைந்து இருந்தது. அவசரப் பயணம் என்பதால் மதிப்புள்ள சாமான்கள் எதுவும் கொண்டு செல்ல வில்லை. கஸ்டம்சில் நேரம் எதுவும் வீணாகவில்லை. ஆனாலும் சென்னைக்கே உரித்தான ரௌடிகளின் மிரட்டல், விமான நிலையத்திலேயே ஆரம்பித்து விட்டது…. “அந்த ஆபிசர்


பூனைத் தாய்!

 

 (கொஞ்சம் நிஜம் கொஞ்சம் கற்பனை….படித்து அழுதால் கதாசிரியர் பொறுப்பல்ல!!) கண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கனகாவின் கனவில் ஏதோ ஒரு காட்சி…. கணவன் ராஜேஷை தேடுவதுபோல்…. அது அவள் கனவை கலைத்து கண் திறக்கச் செய்தது……ராஜேஷ் எங்கே கட்டிலில் காணவில்லையே என எழுந்தமர்ந்து சோம்பலை முறித்தவாரே கழிவறையை நோக்கிப் பார்த்தாள். ராஜேஷ் கழிவறையிலிருந்து வெளிவந்து கனகாவைப் பார்த்தான். “என்ன அவ்வளவு சீக்கிரம் எழுந்துகிட்ட?….” என்றவாறு கட்டிலில் கனகாவுக்குப் பின்னால் அமர்ந்து அவள் தலையையும் கழுத்தையும் மசாஜ் செய்தான். “நீயும்


எதிர்விசை

 

 ‘அந்த மாலைப் பொழுதில், என்னோமோ கொஞ்சம் எகிறிப் பாய்ந்தால் அந்த சூரியனை தொட்டுவிடலாம் என்பது போல்… மண் சாலையின் மறுகோடியில் சூரியன் ஆரஞ்சுப் பழ வடிவில் பிரகாசமாக தெரிந்தபோது, கணேஷ் தன் சைக்கிளை முழுப்பலம் கொண்டு மிதித்தான் ….மிதிக்க மிதிக்க சைக்கிள் கொஞ்சமும் நகர்வது போல் தெரியவில்லையே!!…. இன்னும் முழுப்பலம் கொண்டு மிதித்தான்….ஆனாலும் சைக்கிள் கொஞ்சமும் நகர்வது போல் தெரியவில்லை!!…..சூரியன் வேறு பாதி மறைந்து கொண்டு போகிறானே!…..மேலும் முழுப்பலம் கொண்டு மிதித்தான்….சைக்கிள் சாய்ந்து விழ….’ கணேஷ் ஆகிய