கதையாசிரியர் தொகுப்பு: அனுராதா ரமணன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்!

 

 ஆட்டோவில் இருந்து முத்துலட்சுமி இறங்குவதைப் பார்த்துவிட்டு, வீட்டு வாசலில் மற்ற சிறுசுகளுடன் கதை பேசிக்கொண்டு இருந்த பாவாடை தாவணி உள்நோக்கி ஓடியது. உள்ளே போனவள், தன்னைப் பெற்றவளிடம் என்ன சொல்லிஇருப்பாள் என்று முத்துலட்சுமிக்குத் தெரியும். “அம்மா… ஓடிப் போன அத்தை வந்திருக்கா!” பட்டு, சங்கரிக்குப் பிறகு பிறந்தவள் முத்துலட்சுமி. அவள் தன் பதினேழு வயசில் காதலினாலோ அல்லது காதல் போன்றதொரு பிரமையினாலோ, தலித் இளைஞன் ஒருவனுடன் ஓடிப் போக, அந்தக் குடும்பத்து அங்கத்தினர் பெயர் அட்டவணையிலிருந்து அவள்


அறிந்தும் அறியாமலும்…

 

 ‘‘ஏண்டா… ஏண்டா இப்படி, இங்கே வந்தும் அடிச்சுக்கறேள்… காசிக்கு வந்தும் கர்மம் தொலையலேடா! அஞ்சு வருஷம் முன்னாலே போனவர், என்னையும் அழைச்சிண்டு போயிருக்கப் படாதா..?” மாடி வெராந்தாவில் நின்றுகொண்டு அந்த அம்மாள் அழுதாள். அடுத்தாற்போல கரகரப்பான, ஆளுமை நிறைந்த ஆண் குரல் இரைந்தது… “இந்தா, கத்தி என் மானத்தை வாங்கினே… இப்பவே நான் குடும்பத்தோட ரயில் ஏறிடுவேன்.” அப்புறம் பேச்சுமூச்சில்லை. அன்னம்மா தனக்குள் சிரித்துக் கொண்டாள். இன்று நேற்றில்லை… இந்த நாற்பது வருடங்களில் அவளும் எத்தனை குடும்பங்களை,