கதையாசிரியர் தொகுப்பு: அண்ணாதுரை சி.என்.

23 கதைகள் கிடைத்துள்ளன.

குற்றவாளி யார்?

 

 “விபசாரியா?” – கோபத்துடன் இக் கேள்வி பிறக்கிறது. “ஆமாம்” – சோகம் கப்பிய குரலில் பதில் வருகிறது. கேள்வி கேட்டவர் திகைத்து நிற்கிறார். அவர், வெட்கத்தால் அவள் நிலைகுலைந்து நிற்பாள் என்று எதிர்பார்த்தார். பதிலோ அவ்விதமில்லை. அவள் பேச்சை நிறுத்தவில்லை. “ஆமாம் – ஏன் என்றா கேட்கிறீர்கள்?” – அவள் குரலிலே சோகத்தையும் சிதைத்துக்கொண்டு, நகைச்சுவை வெளிவந்தது. “இல்லை” – பயத்துடன் பேசலானார் அவர். “அந்தக் கேள்வியைக் கேட்டுவிடாதீர்!” – அவள் பேசுகிறாள் – பேச்சா அது!


பிரார்த்தனை

 

 “அன்னம்! வாடி இங்கே, எப்போதும் ஒரே விளையாட்டுத்தானா? வந்து சாமியைக் கும்பிடடி! கண்ணைத் திறந்து பாரடியம்மா; காமாட்சி என்று சேவிச்சுக்கோ காலையிலே எழுந்ததும், கனகாம்பரமும் கையுமா இருக்கிறாய். மாலையிலே மல்லிகைப் பூவுடன் மகிழ்கிறாய். இப்படியே இருந்துவிடுமா காலம்? வா, வா, விழுந்து கும்பிடு”. அன்னம், சின்னஞ் சிற்றிடையாள், சேல்விழியாள் சிவந்த மேனியாள், சிரிப்புக்காரி, உலகமே அறியாதவள். தாயம்மாள், அன்னத்தைப் பெற்றவள். வயதானவள். உலகின் மாறுதலைக் கண்டவள், உத்தமர்கள் உலுத்த ரானதையும் கண்டிருக்கிறாள்; ஓட்டாண்டிகள் குபேரரானதையும் கண்டாள். தனது


பாமா விஜயம்

 

 “பாமா மிகப் பொல்லாதவள்! படித்த பெண் ஆகவே, அம்மா எதைச் சொன்னாலும் குற்றங் கண்டுபிடிக்கிறாள்” என்று அந்த ஊர் குளத்தங்கரையில் குப்பம்மாள் கூறினாள். “ஆனால், பாமா, நல்ல அழகு! தங்கப் பதுமை போன்றவள்! தாய்க்கு ஒரே மகள்! தகப்பனுமில்லை பாபம்! அவர்கள் சொத்தைப் பார்த்துக்கொள்ள, பாமாவிற்குப் புருஷன் எந்தச் சீமையிலிருந்து வருவானோ தெரியவில்லை” என்றாள் அன்னம்மாள். “பாமாவின் கண்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு, சினிமாவிலே, யாரது, அந்த தேவிகா ராணியோ என்னமோ பேர் சொல்கிறார்களே, அதே கவனம்


நாக்கிழந்தார்

 

 “தர்மப் பிரபுவே! சாப்பிட்டு நாலு நாட்களாகின்றன; கண் பஞ்சடைந்திருக்கிறது, கைகால்கள் துவண்டு போகின்றன. காது அடைத்துக்கொண்டு போகிறது. மயக்கமாக இருக்கிறது. ஒரு கவளம் கிடைத்தால் உயிர் நிற்கும்.” பஞ்சையின் இப்பரிதாபக் குரலைக் கேட்க, அந்தத் தர்மப் பிரபுவுக்கு நேரம் உண்டா? அவருக்கு எவ்வளவோ தொல்லை, எத்தனையோ அவசரமான ஜோலி. இந்தப் பிச்சைக் கிண்ணி, குறுக்கே நின்றால் அவர் தமது காரியத்தைக் கவனிக்காது இவனுக்கு உபசாரம் செய்யவா, தங்குவார்! அதோ பாருங்கள். அவர் எவ்வளவு கவலையுடன் காரில் உட்காருகிறார்.


வள்ளி திருமணம்

 

 வள்ளியின் ‘ஆலோலம்’ அந்தக் காட்டுக்கே ஓர் கீதம்; பறவைகள் அதைக் கேட்டு இன்புறவே தினைப் புனம் வரும். கதிர்களைக் கொத்துவதுபோல் பாசாங்கு செய்யும். வள்ளி , கவணை வீசிச் சோ ! சோ! என்று பாட் டிசைத்ததும், பறவைகள் தம்மை மறந்து, மரக்கிளை களிலே அமர்ந்து இன்புறும். கீதம் நின்றால், ஒன்ஸ் மோர்’ கேட்பதுபோல், மீண்டும் தினையைத் தின்ன வரும்! மீண்டும் வள்ளியின் சங்கீத வாய்மொழி ஆரம்பமாகும். வேட்டையாடச் செல்லும் வீரர்கள் கொஞ்ச நேரம் வள்ளி –


சரோஜா ஆறணா!

 

 என்னைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது அந்தச் சொல். மனப்பிராந்தியல்ல, என் செவியிலே தெளிவாக விழுந்தது அப்பேச்சு. என் மூச்சே திணறிவிட்டது. என்னை நிலை குலைய வைத்த அந்தச் சொல்லுரைத்தவரோ, நெற்றியிலே நீறு பூசி, வெள்ளை ஆடை அணிந்து, விளங்கினார். போக்கிரியல்ல, போக்கற்றவருமல்ல, புத்திதடுமாறி யவருமல்ல, அவர் தான் சொன்னார் சரோஜா ஆறணா என்ற சொல்லை. என்ன என்ன? என்று கேட்கவோ என்நா எழவில்லை. நமக்கென்ன என்றிருக்கவோ மனம் இடந்தாவில்லை. நடுவீதி நின்றேன், வண்டியோட்டிகளுக்கு அது பெருந்தொல்லை, என் நிலை


மதுரைக்கு டிக்கட் இல்லை!

 

 நாம் கலியாணமாம் கலியாணம்! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலை வரை, மாடு நான்! இந்த வாழ்வுக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு! அவள் வேறு, வீட் டிலே உட்கார்ந்து கொண்டு, அதுவேண்டும் இது வேண்டும், அன்னத்தின் சேலையைப் பார், அகிலாண்டத்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாவின் சிரிப்பைப் பார், என்று இரவிலே ஈட்டியால் குத்தவேண்டும்போல் இருக்க, இந்த வேதனையை நான் பட வேண்டுமாம், இதற்கு, வீட்டிலே உபதேசம் செய்கிறார்கள்.


சொல்வதை எழுதேண்டா!

 

 “டே மண்டூ ! சாட்டாச்சேன்னோ? சரி கொஞ்சம் உட்கார். நேக்குக் கொஞ்சம் கையை வலிக்கிறது. நான் சொல்லிண்டு வர்ரேன். சமர்த்தா எழுது, தெரியறதோ” “ஆகட்டும் மாமா ! லெடரோ?” “எதா இருந்தா என்னடா நோக்கு சொல்வதை எழுதேண்டா!” “ஆஹா! இதோ லெடர் பேபர் எடுத்துண்டு வர்ரேன்” “பார்க்கணும் உன் சாமர்த்தியத்தை. எந்த லெடர் பேப்பர் எடுத்துண்டு வர்ரே” “ஏன், ‘ஜர்னலிஸ்டு’ லெடர் பேப்பர் தான்” “மண்டூன்னா சரியா இருக்கு. இப்ப திவான் பகதூர் தீர்த்தகிரி முதலியாருக்கு லெடர்


கிருஷ்ண லீலா

 

 குழலோசையைக் கேட்டுக் குதூகலம் கொண்டு, குதித்தோடி வந்த கோமதியைத் தழுவிக்கொண்டு, அருகே வந்து நின்ற அழகு மீனாவின் முகத்தைத் துடைத்து முத்த மிட்டுக் கமலத்தின் கண்களின் அழகைப் புகழ்ந்துரைத்து, அம்புஜம் வரக் காணோமே என்று ஆயாசப்பட்டுக் கோமளத்துக்கு நேற்று இருந்த கோபம் இன்று இல்லை என்று கூறி மகிழ்ந்து, சுந்தரியின் முதுகைத் தடவிக் கொடுத்தான். கோகிலத்தின் கழுத்தை நெறித்து விடுவது போல அணைத்துக்கொண்டான். அருகே வர அஞ்சி சற்றுத் தொலைவிலே நின்ற மரகதத்தைப் போய் இழுத்து வந்து


கபோதிபுரக் காதல்

 

 ஜல் ஜல் ஜல் ! ஜல் ஜல் ஜல் ஜல! “உம்! கொஞ்சம் வேகமா நட. வேகற வெய்யில் வர்ரதுக்குள்ளே ஊர் போவோம்.” ஜல் ஜல், ஜல் ஜல, ஜல் ஜல், ஜல ஜல. “சும்மா போகமாட்டாயே, நீ. உன் வாடிக்கையே அதுதான் ! சவுக்கடி கொடுத்தால் தானே போவே உம்…..” “வேண்டாமப்பா, பாவம், வாயில்லாத பிராணி, வெயில் வேளை. போகட்டும் மெதுவா. அடிக்காதே” என்று வேதவல்லி சொன்னாள், மாட்டை சவுக்கால் சுரீல் என அடித்து வாலைப்