கதையாசிரியர் தொகுப்பு: அண்டனூர் சுரா

19 கதைகள் கிடைத்துள்ளன.

மாண்புமிகு மதிப்பெண்

 

 “”நான் ஏன் நீங்க எதிர் பார்க்கிற மார்க்கை எடுத்தாக வேணும்….?” – புனிதாவுக்கு யாரிடமாவது இதைக் கேட்க வேண்டும் போல இருந்தது. நேற்று வரைக்கும் “”ஹாய் புனிதா…. எப்படி இருக்கே…..?” அலைபேசியில், குறுந்தகவலில், கட்செவியில், முகநூலில் நலம் விசாரித்தவர்களெல்லாம், “”புனிதா…. எப்டிடி எக்சாம் எழுதிருக்கே…?” எனக் கேட்கையில், “பிகே’ வேற்றுக்கிரகவாசி நானோ? என ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொள்ளணும் போல இருக்கிறது. பதின்மம் வயதை உதைத்து விளையாடும் இந்த எக்ஸாம் சிஸ்டத்தைக் கண்டுபிடித்தவர் யாரென கூகுளில்


நரகாசுரன்

 

 பட்டாசுப்பாண்டியின் பட்டாசுக்கடை களையிழந்துப்போயிருக்கிறது.கடையைப்பார்க்க தீபாவளி கடையாகத்தெரியவில்லை.கடை துடைச்சிக்கிடக்கிறது. “ அண்ணே…. இந்த வெடி எவ்வளவுண்ணே…” “ இது என்ன வெடிண்ணே…” “ அண்ணன்ணே……எனக்குக் கொடுத்திருங்கண்ணே…..”பலா பழத்தில மொய்க்கும் ஈக்களைப்போல கடையில்கூட்டம் மொய்யோ மொய்னு மொய்க்கும்.கூட்டம்,நெரிசல்,கைநீட்ட, எக்கிப்பார்க்க, தள்ளுமுள்ளு, சச்சரவென…கடை எப்படியெல்லாமோ இருக்கும்…. கடையில்எதிர்ப்பார்த்தக்கூட்டமில்லை.ஒன்றிரண்டுப்பேர்கடையச்சுற்றி நின்றுக்கொண்டு பட்டாசுகளை எடுத்துப்பார்க்கிறதும், விலையைக்கேட்கிறதும், ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கிறதும், உதட்டைப் பிதுக்கிறதுமாக இருக்கிறார்கள். கடையில் இருக்கிற ஒரு பெரிய்….ய மேசையில பட்டாசுகள்குவிந்துக்கிடக்கிறது.ஆய்ந்துக்கட்டிய பைத்தங்காய் பிஞ்சுகளைப்போல சரவெடி.குவித்த பல்லாரியைப்போல வெங்காய வெடி.கோபுரம் சாய்ந்த புஸ்வானமென……விதவிதமான பட்டாசுகள்.கந்தகத்தையும்


திற

 

 பயணிகளின்கனிவான கவனத்திற்கு. திண்டிவனம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக மன்னார்குடி வரை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ஒன்பது மணிக்கு மூன்றாவது நடைப்பாதைக்கு வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது………………. அறிவிப்பை கேட்டதும் நடைமேடையில் மனிதத்தலைகள் மொய்க்கத்தொடங்கின. சாவிக்கொடுக்கப்பட்ட பொம்மைகளைப்போலபயணிகள் அதற்கும் இதற்குமாக நடந்தார்கள். மேடையின் விளம்பில் நின்று கொண்டு உடலின் முழு பலத்தையும் கால் கட்டை விரலில்இறக்கி ரயில் வருகிறதா……….? என ஆவல் பொங்கப்பார்த்தார்கள்.அவசரம் அவசரமாக தேனீர் அருந்துவதும், முகம் கழுவதுமாக சிலர். பொதிகளை முதுகில் சுமந்துகொண்டும் இரண்டொரு முறை


மெல்லினம்

 

  பக்கத்து வீட்டு வினோத் மட்டுமா சொன்னான்?. எதிர்த்த வீட்டு அஞ்சலையும் தான் சொன்னாள்.அவளுடன்சேர்ந்த ரெங்கம்மாளும்தான் சொன்னாள். “ எனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காதாம்”. “ கல்யாணம் நான் பண்ணிக்கிட்டால் நீங்களெல்லாம் என்ன செஞ்சிக்கிறீங்க?“ என்று நான்கேட்டேன். அத்தனைப்பேருமே வாயைப் பொத்திக்கிட்டு நின்றாங்க. ரெங்கம்மாள் மட்டும் நெஞ்சை நிமிர்த்துக்கிட்டு சொன்னாள். “ ஒரு பக்கக் காதை அறுத்துக்கிறேனு“. அவள் வாய்ப்பந்தல் போடுகிறவள். ரொம்பகூட காதைஅறுத்துக்கிறுவாளே…..! ரெங்கம்மாளை விடு . அவளுக்கு உடம்பெல்லாம் வாய். தொனத்தொனத்த பேர்வழி. எந்நேரமும்


தொடு திரை

 

  அன்றைய தினம் பணி முடிந்து பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள ஓர் உணவகத்திற்குள் நுழைந்தேன் . ஒருவர் என் பின்னால் நின்றபடி எனது தோளை இறுகப்பற்றினார்.நான் யாரென்று திரும்பிப்பார்த்தேன்.அவர் முத்தலீப் பாய். ஆறடி உயரத்தில் வெளீர் ஆடையில் நின்றுக்கொண்டிருந்தார். “ பாய் …………… ” என்றவாறு விளித்தேன். என்னை அவருக்கே உரித்தான கரிசனத்தோடு பார்த்தார். அதற்கு பிறகு கொஞ்ச நேரம் நலம் விசாரிப்புகள், குடும்ப நிலவரங்கள் என சம்பிரதாய இத்யாதிகளுக்குள் சென்றோம். அவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்