Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: அசோகன் குப்புசாமி

36 கதைகள் கிடைத்துள்ளன.

பொறுப்பு

 

  கதை கேளுங்கள்: பொறுப்பு சரியாய் ஆறுமணிக்கு வந்தவிடுவதாக பொறுப்பாய் சொன்ன ஜோஸ்வா, இன்னமும் வரவில்லை! இன்று அவனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக ஜாடையாய்க் கூறியும் அவன் வராத்து, அவன்மீது நம்பிக்கை இழக்கச் செய்ததுடன், பொறப்பில்லாதவன் எனவும் நினைக்க வேண்டியதாயிற்று ஜானுவிற்கு. மணி ஏழாகிவிட்டிருந்த்து. ஒரு மணி நேரமாய், தனியாக மெரினாவில் காத்திருந்த ஜானுவின் மீது பார்வைகள் தினுசு தினுசாய் படர்ந்த்தில், அவள் மனம் கொந்தளித்தது. கொஞ்சம் அக்கறையும் பொறுப்பும் இருந்தால், இந்நேரம் வந்திருக்க வேண்டும். ”இவனை


கதை

 

  சங்கரன் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. அதைவிட குட்டிப்பொண்ணு சர்மிளா முகமோ அதைவிட பிரகாசமாய் இருந்தது. அவருக்கு சரி. சர்மிளாவுக்கு என்ன? மீனுவுக்கு முகத்தில் பயம் ஒட்டிக் கொண்டது. காரணம், மாமியாருக்கு… மாமியார் வருவதாய் தகவல் மாமியாரே குடைச்சல்., இதில் மாமியாருக்கு மாமியாரா, ஐயோ வேண்டவே வேண்டாம் ”என்ன பாடுபட போகிறோனோ, என் தலை உருளுவது சர்வநிச்சயம்” தானாகவே பேசிக் கொண்டாள்.. என்ன மீனு, தனியே பேசிக்கிற? சங்கர் கேட்க உறிம்…எனக்கு கிறுக்கு பிடிச்சுக்கிச்சு” முகத்தை திருப்பிக்


உபதேசம்

 

  கிழக்கு திசையில் இருந்து ஒருவனும், மேற்கு திசையில் இருந்து ஒருவனும் அடர்ந்த காட்டின் ஒற்றையடி பாதையில் நடந்து வந்து, ஓர் இடத்தில் சந்தித்து கொண்டனர். “என்னப்பா?, இங்கே ஒரு துறவியின் குடில் இருக்கிறதாமே, ஒனக்கு தெரியுமா? என கிழக்கு திசையில் இருந்து வந்தவன் கேட்டான். “அங்கேதான், நானும் போகிறேன். வாருங்கள் சேர்ந்தே போவோம்” என்றான் மேற்கில் இருந்து வந்தவன். அமைதியாய் நடந்து சென்று கொண்டு இருந்தனர். சிறிது நேரத்திற்கு பின்.. கிழக்கு திசையில் இருந்து வந்தவன்


மாமனார்

 

  ”என்ன மீனு சந்தோஷமா இருக்கே, ஏதாவது விசேஷமா ?- கணவன் ராஜேந்திரன் கேட்டான். ”எங்க அப்பா கேரம் டோர்னமென்ட் விளையாட திருச்சி வந்திருக்காராம், முடிச்சுட்டு நம்ம வீட்டுக்குத்தான் வர்றாராம்”! ”வரட்டும்…வரட்டும்…உன் அப்பா டிஸ்டிரிக்ட் லெவல்ல பெரிய சாம்பினயன்தானே? என்கிட்ட மோதி ஜெயிக்கட்டும், நான் ஜெயிச்சா உனக்கு ஸ்பெஷல் பரிசு வாங்கித் தர்றேன்! என்றான். ”நீங்களாச்சு…உங்க மாமனாராச்சு…”என சமையலறைக்குப் போனாள். மாமனாரும் வீடுவந்து சேர்ந்தார, உபசரித்து விருந்து முடிந்து சிறிது ஓய்வுக்குப்பின்….சவால் போட்டி ஆரம்பமானது, விளையாட்டு சூடுபிடித்தபோது


காதல்

 

  ஒங்களை காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டது எவ்வளுவு தப்புன்னு “இப்பத்தான் புரியுது” முகம் சிவக்க மாலா கத்தினாள். இங்க மட்டும் என்னா வாழுதாம், அதேதான் நீ என்னிக்கு வாழ்க்கைல வந்தியோ, அன்னில இருந்தே எனக்கு நரகம்தான். பி.பி எகிற குதித்தான் கணேசன். கோபத்தை சாப்பாட்டுல காமிக்காதீங்க, டிப்ன சாப்பிட்டுட்டு போங்க. நீயாச்சு உன் டிபனுமாச்சு விருட்டென வெளியேறினான். ஒங்களுக்கு அவ்வளுவன்னா, எனக்கு மட்டும்…மானம், ரோஷம் இருக்காதா ? சடாரென்று கிளம்பிபோய் காருக்குள் ஏறினாள் மாலா. சூட்டிங் ஸ்பாட்டில்…