கதையாசிரியர் தொகுப்பு: அசோகன் குப்புசாமி

36 கதைகள் கிடைத்துள்ளன.

சீக்கிரமா மேலே!

 

  “கொஞ்சம் தடுமாறித்தான் போனான் கனேஷ்.. அவனுடைய சர்வீஸில் இதுவரை திக்குமுக்காடியதில்லை. ஆனால் இன்றோ…” தலையைப் பிய்த்துக் கொள்வது போல இருந்தது அவனுக்கு. பிரபல தொழிலதிபர் மரணம்தான் அவனை அலைக்கழித்தது. தொழிலதிபர் மரணத்துக்கும்…இவனுக்கும் என்ன தொடர்பு.. ”யாரோ கேட்பது புரிகிறது. கனேஷ் பிரபல துப்பறியும் நிபுணர் இந்த மரணத்தில்… தொழலதிபரின் அலுவலகத்தில், வீட்டில் உள்ள எல்லோர் மீதம் சந்தேகப்பார்வையை பதித்தும் ஒன்றும் பிடிபடாமல் ..யோசித்து..யோசித்து.. குழப்பத்தில் இருந்தான். வீட்டைச் சுற்றி சுற்றி பார்த்த்தில் ஒரு தடயமும் சிக்கவில்லை.


முகநூல் சங்கிலி

 

  “எனக்கு பேஸ்புக்குல அறுநூற்று சொச்சம் பிரன்ட்ஸ் இருக்காங்க, அவங்க கூட நான் பேசி பழகி என்னோட கருத்த அவங்களுக்கு சொல்றேன், அவங்களும் என்னோட கருத்துக்கு லைக்ஸ் தாராங்க” என பெருமிதப்பட்டுக் கொள்வாள் பொன்னி. காலை எழுந்தவுடன் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு, வீட்டுக்காரரை வேலைக்கு அனுப்பிட்டா அப்புறம் லேப்டாப்பும்  கையுமாய். இருக்கிறாள்.   குழந்தைகள் நன்றாய் தூங்கும். எழுப்பினால் இடைஞ்சல்தானே. பெரியவன் ஸ்கூல் போவதற்கு கால்மணி நேரம் முன்னால் எழுந்திருச்சு பல்துலக்கி குளிச்சு அதற்குள் ஸ்கூல் வேன்


எண்ணமே வாழ்வு

 

  காலை தினசரிகளை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தொழிலதிபர்; வேணுகோபாலுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு தினசரியில் அவரது கம்பெனி உற்பத்தி திறனில் குறைந்த விட்டதாகவும், இதனால் பங்கு சந்தையில் கம்பெனி பங்குகளின் விலைகளும் சரியும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததே அதற்கு காரணம். மனதுக்குள் குறித்துக் கொண்டார்….. கம்பெனி போனவுடன் கம்பெனி செகரட்டியைக் கூப்பிட்டு, போர்டு மீட்டிங் போட ஏற்பாடு செய்ய சொன்னார் ஸார் “இப்ப என்ன அவசரம் போர்டு மீட்டிங்குக்கு…. என முடிப்பதற்குள் என்ன அவசரமா? பேப்பர்லாம் படிக்கிறதில்லையா…


மகிழ்ச்சி

 

  “என்னாப்பா இரகசியம் ஒன் முகம் எப்பவும் சந்தோஷமா மலர்ச்சியா இருக்கு”என்று கேட்பவர்களுக்கு மத்தியில்….. வயிற்றரிச்சல்காரர்கள் சிலர் ஒனக்கு பிரச்னையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கீயே” என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்… அதே புன்னகைதான். அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் இரகுராமன் தன் வேலையில் நேரத்திற்கு வந்து நேர்த்தியாக முடித்து விட்டு போவது அவனுக்கு பழகிப்போன ஒன்று. அப்படிப்பட்டவன்தான் மாதத்தில் இரண்டுநாள் திடிரென்று லீவு போட்டு விட்டு போய்விடுவான். ஏங்கு போகிறான் என்பது


சேலை

 

  பிரபல புடவைக் கடையின் மேனேஐர்தான் கேசவன். ஆனால் அவன் மனைவி சித்ராவே சேலைக் கட்டுவதில்லை. என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கிறாள். பெரும்பாலும், அவள் நடிப்பது மாடர்ன் பெண் கதாபாத்திரங்களில்தான். அதற்காக மாடர்ன் டிரஸ் போட்டுப் போட்டு அப்படியே அதற்கு பழகிவிட்டாள். கேசவன் பலமுறை அவளைப் புடவைக் கட்டச் சொல்லி கேட்டிருக்கிறான். ”போங்க, அதெல்லாம் எனக்கு செட் ஆகாது” என சொல்லி விடுவாள். அப்படிப்பட்டவள், ஒருநாள் தானே முன்வந்து, கேசவனிடம் கேட்டாள், ”என்னங்க, ஐவுளிக்கடையில