கதையாசிரியர் தொகுப்பு: அகிலா

3 கதைகள் கிடைத்துள்ளன.

முக்கோணம்

 

  மொட்டைமாடி சுவரின் விளிம்பில் சாய்ந்து நின்று குளிரும் காற்றை மல்லிகையின் வாசத்தோடு நாசிக்குள் இழுத்தபோது, தேவகிக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அப்பாவின் இறப்புக்கு பிறகு, இந்த வீடும், தோட்டமும், பேரூர் கோவிலும் மட்டுமே அம்மாவின் உலகம். தோட்டத்து மல்லிகையோடும் நந்தியாவட்டை பூக்களோடும் அம்மாவுக்கான உறவு தனிதான். பெரிதாய் அலட்டிக்காமல் அதிகமாய் அவற்றோடு பேசிக்கொள்ளாமல் தண்ணீர் விடுவதும் பூக்களைப் பறிப்பதும் கோர்ப்பதுவுமாய் இருப்பாள். சிறு வயதிலிருந்தே தன்னோடும் அவள் அதிகமாய் பேசியதில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. தன்


பன்னீர் பூக்கள்

 

  திருப்பிப் பிடித்த மரகரண்டியால், புட்டு குழலில் இருந்த புட்டை சுஜி அவசரமாய் தள்ளிக் கொண்டிருந்தபோது, மொபைல் சிணுசிணுக்கத் தொடங்கியது. புட்டை எடுத்து மூடி வைத்துவிட்டு வந்து போனை எடுப்பதற்குள் அது நின்றுவிட்டிருந்தது. யாரென்று எடுத்து பார்த்தால், ராம் அம்மா. இவ்வளவு காலையில் எதுக்கு கூப்பிட்டாங்க என்று நினைத்தபடி அவங்களுக்கு கால் செய்தாள் சுஜி. போனை எடுத்தவுடன், ‘ப்ரவீன் அம்மா, நம்ம நிர்மி அப்பா இறந்துட்டாங்க. தூக்கத்திலேயே உயிர் போயிட்டாம். நான் கிளம்பிட்டேன். நீங்க எப்போ வரீங்க?’


பிறழ்வு

 

  ‘சாப்பிட்டாயா..’ ‘ம்ம்..’ ‘இன்னைக்கு ஏன் இந்த கோபம்..’ என்னும் கேள்விக்கு விக்கி விக்கி அழத்தொடங்கினாள். ‘உன் பலகீனமே அழுகைதான் சௌந்தர்யா.. நிறுத்திவிட்டு பதில் சொல்லு, கோபம் ஏன் வந்தது..’ ‘அவங்க எல்லோருக்கும் நான் ஒரு ஜடப்பொருள் ஆயிட்டேன். இவ்வளவு நாளும் நான் செய்ததெல்லாம் மறந்துப்போச்சு. முன்னாடியெல்லாம் இந்த மனுஷன் பிள்ளைங்களைப் பத்தி, அவங்க அம்மா அப்பாவைப் பத்தி, அவரு தம்பி, தங்கச்சியை பத்தியெல்லாம் கவலைப்பட்டிருப்பாரா? நான்தானே எல்லாமே இழுத்துப்போட்டு செய்தேன். அம்பத்தஞ்சு வயசுக்கு மேலதான் நான்