Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைத்தொகுப்பு: மொழிபெயர்ப்பு

129 கதைகள் கிடைத்துள்ளன.

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்

 

  அஸீஸ் நேஸின் ஆங்கில வழி தமிழில்: எம். ரிஷான் ஷெரீப் அவர் இறுதியாகச் சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடு கடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம்மக்களுக்கும் அவர் புதியவர். அவர் சிறையிலிருந்தபோது அவருடைய மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார். அவரது எல்லா எதிர்பார்ப்புகளும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டுசெல்லப் போதுமான பணம்கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக்கொண்டு, அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர்


வெள்ள நிவாரணம்

 

 இந்தியில்: நரேந்திர கோஹலி நான் வெள்ள நிவாரண அலுவலகத்திற்கு டெலிபோன் செய்தேன். அங்கிருந்து ரிசிவரை எடுத்தவர் ” சொல்லுங்க” என்றார். ”யமுனையில் வெள்ளம் வந்துள்ளது” நான் கூறினேன். ”தெரியுமே” என்று அந்த நபர் பதிலளித்தார் மேலும் ”நாங்களும் காலையில் செய்தித்தாளில் படித்தோமே ” என்றார். ”இங்கு வெள்ளத்தில் விழுந்துள்ள மரத்தில் தொங்கியபடி இரண்டு பேர் கத்திக் கொண்டிருக்கின்றனர்” என்றேன் நான். ” எவரெஸ்ட்டிலா ஏறியிருக்கிறார்கள், மரத்தில்தானே ஏறியிருக்கிறார்கள், இதில் கத்துவதற்கு என்ன இருக்கிறது?” என்றார் அந்த நபர்.


மொட்டை

 

 இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி ஒரு நாட்டின் ராஜ்யத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டு விட்டது. பரபரப்புக்குக் காரணம் அரசியல் பிரச்சனை ஏதுமில்லை. அமைச்சர் ஒருவரின் தலை திடீரென மொட்டையாகி விட்டதுதான். நேற்றுவரை அவருடையத் தலையில் நீண்ட சுருள் முடி அடர்ந்து இருந்தது. ஆனால் இரவோடு இரவாக அவை காணாமல் போய் விட்டது. அவர் மொட்டையாகி விட்டார். தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு விட்டது. தங்கள் அபிமான அமைச்சருக்கு என்னவாகியிருக்கும் என்று அவர்கள் அறிவுக்கும் விபரத்திற்கும் தகுந்தாற்போல் காரணங்களை சொல்ல துவங்கினார்கள்.


நடுப்பகல் விளக்கு

 

 1930-ம் ஆண்டு மேற்கு ஓகலாஹோமா மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் தாவரங்கள் அனைத்தும் மடிந்து போயின. தாவரங்களில் வேர்ப்பிடிப்பு இல்லாததால், காற்று வீசும்போது பூமியின் மேற்பரப்பு மண் அரிக்கப்பட்டு புழுதிப் புயலாக வீசும். புழுதிப் புயலால் விவசாயமும், மனித வாழ்க்கையும் மிகப்பெரிய கேள்விக்குறியானது. புழுதிப்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் “புழுதிக் கிண்ணம்’ என அழைக்கப்பட்டன. விவசாயிகள் உயிர் வாழ்வதற்காக மிகப்பெரிய அளவில் கலிபோர்னியாவை நோக்கி இடம் பெயர்ந்தனர். இதனால் கலிபோர்னியாவிலும் உணவு மற்றும்


ஜெயந்தின் பொம்மை

 

 ஒரு நிமிடம் ஜெயந்த்தை முழுமையாகக் கவனித்தேன். பின்னர் கேட்டேன்,””என்ன ஆயிற்று? இன்றைய தினம் மிகவும் சோர்வாகத் தெரிகிறாயே?” ஜெயந்த் திடீரென விழித்தெழுந்தவன் போல் முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு சொன்னான். “”நோ. எதுவும் இல்லை. நான் நன்றாகத்தானிருக்கிறேன். இந்த இடம் உண்மையிலேயே அழகாக இருக்கிறது” “”இதற்கு முன் நீ இங்கு வந்திருக்கிறாயா? இந்த இடம் அருமையான இடமென்பது உனக்குத் தெரியுமா?” “”ஏறக்குறைய மறந்துவிட்டது. சில சம்பவங்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. இந்த பங்களாவின் தோற்றம் மாறவே இல்லை. இந்த


இல்யாஸ்

 

 Ильяс : இல்யாஸ் மூலம் : லியோ டால்ஸ்டாய் தமிழில் : மா. புகழேந்தி ஒரு காலத்தில் இல்யாஸ் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனது தந்தை அவனுக்கு ஒரு நல்ல பெண்ணை மணமுடித்துக் கொடுத்த ஓர் ஆண்டுக்குப் பின்னர் மறைந்து போனார், சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு சொத்தினையும் விட்டுச் செல்லவில்லை. இல்யாஸ் அப்போது ஏழு குதிரைகளையும், இரண்டு மாடுகளையும், சில ஆடுகளையும் வைத்திருந்தான். அவன் நல்ல நிர்வாகி விரைவில் தனது சொத்து பத்தினை அதிகரித்துக் கொண்டான்.


சூரத் காப்பிக் கடை

 

 СУРАТСКАЯ КОФЕЙНАЯ : சூரத் காப்பிக் கடை மூலம் : லியோ டால்ஸ்டாய் தமிழில் : மா. புகழேந்தி ஒரு காலத்தில் சூரத் நகரத்தில் ஒரு காபிக் கடை இருந்தது, அங்கே உலகின் எல்லா மூலையில் இருந்தும் பல வெளி நாட்டு வணிகர்கள் வந்து சந்தித்து தங்களுக்குள் அளவளாவிக் கொள்வார்கள். ஒரு நாள் ஒரு பாரசீக தத்துவ ஞானி அங்கு வந்தான். தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைக் கடவுளைப் பற்றிப் படித்தும் பேசியும் ஆராய்ந்தும் எழுதியும் கழித்திருந்தான். இவ்வாறு


மோசக்காரப் பையன்

 

 Злой мальчик : மோசக்காரப் பையன் மூலம் ; அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி. வான் லாப்கின், அழகிய தோற்றம் கொண்ட இளைஞன், அனா சாம்ப்ளிட்ச்காயா, நுனி மூக்கு வளைந்த பெண், செங்குத்தான மலைப்பாதையில் ஆற்றங்கரையில் இறங்கி அடிவாரத்தில் இருந்த பலகையில் அமர்ந்தார்கள். பலகை ஆற்றங்கரையின் மிக அருகில் வில்லோ மரக்கூட்டங்களின் நடுவில் அமைந்திருந்தது. மிக அழகிய இடமாக இருந்தது. எந்தவித வெளியுலகத் தொடர்பும் இன்றி அங்கே அமர்ந்திருக்கலாம், நீருக்குள் நீந்தும் மீன்களும் நீர்ப்பரப்பில்


பிச்சைக்காரன்

 

 Le Gueux : பிச்சைக்காரன் மூலம் : கய் தே மாப்பசான் (Guy de Maupassant) தமிழில் : மா. புகழேந்தி. தற்போது துன்பத்திலும் வறுமையிலும் உழன்று கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் மகிழ்ச்சியான நாட்களையும் அவன் பார்த்திருக்கிறான். அவனின் பதினைந்தாவது வயதில் வார்வில்லி நெடுஞ்சாலையில் எதோ ஒரு வண்டி செய்த விபத்தில் அவனது இரண்டு கால்களும் நசுக்கப்பட்டிருந்தன. அந்த நாள் முதல் அவன் பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்தான், சாலைகளிலும், வயல்வெளிகளிலும் ஊர்ந்து சென்றான், கைகளுக்கிடையில் ஊன்று


பழிதீர்ப்பவன்

 

 Мститель : பழிதீர்ப்பவன் மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த சிறிது நேரத்தில் பியோடோர் பியோடோரோவித்ச் சிகேவ், துப்பாக்கிகள் விற்கும் ஷ்முக் அண் கோ வில், கைத்துப்பாக்கி ஒன்றை வாங்க நின்று கொண்டிருந்தான். அவனது வெளித்தோற்றம், ஆத்திரம் , சோகம் கலந்த கலவையாகவும் மாற்றமுடியாத உறுதி கொண்டவனாகவும் காட்டியது. “என்ன செய்ய வேணும்னு எனக்குத் தெரியும்”, தனக்குள் சொல்லிக்கொண்டான்.”குடும்பத்தின் புனிதம் கேட்டு விட்டது, குலப்பெருமை சேற்றில்