Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைத்தொகுப்பு: மொழிபெயர்ப்பு

129 கதைகள் கிடைத்துள்ளன.

நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…

 

 மார்ச் மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று சரியாக இரவு மணி 9.38க்கு அந்த வினோதமான கம்பீரமான குரல் முதல் முதலாகக் கேட்டது காற்றில். ஏன் குறிப்பாக அந்த நாளும் அந்த நேரமும் தேர்ந்தெடுக்கப்பட்டது ? யாருக்கும் தெரியாது. எது எப்படியிருப்பினும், அதற்கான உடனடியான எதிர்ச்செயல்பாடு அவநம்பிக்கையாகத்தான் இருந்தது. மக்களால் தங்கள் காதுகளையே நம்பமுடியவில்லை. டாயில்ஸ் டவுனைச் சேர்ந்த ஃப்லாய்டு உஃப்ல்மேன் அந்த நேரத்தில் தனது மகன் லிமேனுடைய எலக்ட்ரிக் ட்ரெய்னை வைத்து அறையில் விளையாடிக்கொண்டிருந்தான். தூக்கிச் செல்லக்கூடிய அவனது


மேசை என்றால் மேசை

 

 நான் ஒரு வயோதிபனைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இனி எந்த வார்த்தையுமே பேச மாட்டாத, சிரிக்கவும் கோபப் படவும் கூட சோம்பற் படும் தூங்கிப்போன முகங் கொண்ட ஒரு வயோதிபனைப் பற்றி. அந்தச் சிறு நகரின் ஒரு தெரு முனைச் சந்திக்கருகில் அவன் வீடு. அவனைப் பற்றி இன்னும் மேலதிகமாகச் சொல்லிக் கொண்டு போவதால் ஆகப்போவது எதுவுமில்லை. மற்றவர்களை விட அவனொன்றும் வித்தியாசமான ஆளுமில்லை. சாம்பல் நிறத் தொப்பி, சாம்பல் நிறப் பேண்ட், சாம்பல் நிற கோட்.


அம்பாடி

 

 முன்னொரு காலத்தில், இங்கிருந்து வெகுதூரத்தில் உள்ள ஒரு காவியத்தில், ஒரு பிரபு தம் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கே செல்வதற்கு ஒன்பது நாள் யானை மீதும், ஒன்பது நாள் பறக்கும் குதிரை மீதும், எட்டரை நாள் ரயிலிலும் பயணம் செய்யவேண்டுமென்று சொன்னால் தூரத்தின் ஓர் உத்தேச அளவு உங்களுக்குப் புரியுமல்லவா ? நல்ல முதல்தர உவமைகள் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருந்தது பிரபுவின் வீடு. முகப்பும் பூந்தோட்டமும் நானாவித அலங்காரங்களுடனும், படுக்கையறையும் கேளிக்கை அறையும் சுத்த சமஸ்கிருதத்தாலும் கட்டப்பட்டிருந்தன. குளியல்


ஆற்றின் மூன்றாவது கரை

 

 என் அப்பா ஒரு கடமை தவறாத , ஒழுங்கான, நேர்வழியில் போகிற ஆசாமி. நான் விசாரித்தறிந்தவரை இந்த அவர் குணங்கள் சிறு வயது தொட்டே வந்தவை. என் நினைப்பிலும் அவர் ரொம்ப மகிழ்ச்சியானவராகவோ அல்லது ரொம்ப சோகம் காப்பவராகவோ இருந்ததில்லை. கொஞ்சம் அமைதியான ஆள் தான். அம்மாதான் வீட்டில் அரசாட்சி. எல்லாரையும் – என்னை, என் தங்கையை, என் சகோதரனை – திட்டிக் கொண்டேயிருப்பாள். ஆனால் ஒரு நாள் என் அப்பா ஒரு படகு வாங்கலானார். அது


ஏசுவின் பாவம்

 

 விடுதியில் பணிப்பெண் அரினா. பிரதான மாடிப்படியின் கீழ் அவள் வாசம். துப்புரவுப் பணியில் உதவி செய்கிற செரெகா பின் படிக்கட்டின் கீழே வசித்தான். இருவருக்கும் இடையில் நாணத் தக்க உறவு. குருத்து ஞாயிறன்று செரெகாவிற்கு ஒரு பரிசளித்தாள் – இரட்டைக் குழந்தைகள். தண்ணீர் ஒடும், நட்சத்திரங்கள் மின்னும், ஆணுக்குக் காமம், அரினா மீண்டும் வயிறு பெருத்தவளானாள். ஆறாவது மாதம் இது. பெண்ணின் மாதங்கள் வேகமாய் நழுவுகின்றன. இப்போது செரெகா படையில் சேர வேண்டும். என்ன பிரசினை பார்.


ஒரு பளீர் முத்து

 

 என் தந்தையின் வயதில் ஒரு மணமான பணக்கார ஆண் வைப்பாட்டி வைத்துக் கொள்வது சமூகத்தின் பார்வையில் ஒரு குற்றம். தவிர, எங்களின் மூதாதைரின் வீடு ஏதோ ஒரு உள்ளடங்கிய பழமைமிகு ஊரில் இருந்தது. அப்பாவோ தூரத்து பெருநகரில் வியாபாரம் செய்தார். என் அம்மா, என் சகோதரி யாவரும் அந்தக் கிராமத்தில் வாழ்ந்தோம். அப்பா தனியாக தன் அனைத்து வியாபார விஷயங்களையும் கவனித்துக் கொண்டார். வீட்டிலும் சமூகத்திலும் ஒரு பெண் அவருக்கு வேண்டியிருந்தது என்பது ஒன்றும் பெரிய குற்றமாகத்


தனிச்சிறை

 

 ஆங்கில மூலம்: சீமமாண்டா என்கோஸி அடீச்சி தமிழில்: ஜி. குப்புசாமி நைஜீரியாவின் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் முதன்மையானவர். நைஜீரிய இலக்கியவாதிகளின் பிதாமகரான சினுவா ஆச்சிபீ, நோபல் பரிசு பெற்ற வொலே சொயிங்கா, மிகப்பிரபலமான பென் ஓக்ரி போன்ற மகத்தான கலைஞர்களை 1977இல் பிறந்த அடிச்சீ தன் முதல் நாவலான Purple Hibiscus மூலம் மிக எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார். நைஜீரிய ராணுவம், ரத்தக்களறியான போரில் நைஜீரியாவின் எண்ணெய் வளமிக்க பயாஃப்ரா பகுதியின் தனிநாட்டுக்கான-சுதந்திரத்திற்கான கனவைச் ஆங்கில –


தன்மயியின் விடுமுறை

 

 ஜெயந்த் காய்கிணி கன்னடத்திலிருந்து தமிழில்: நஞ்சுண்டன் இந்தக் கோடை விடுமுறையில் தார்வாட் தாத்தா வீட்டுக்குத் தன்மயி வந்தபோது வீட்டில் விசித்திரமான மேகங்கள் சூழ்ந்திருந்தன. எப்போதும்போல விடுமுறையின் மகிழ்ச்சி தென்படவில்லை. ஸ்டேஷனுக்குக் குஷீ சித்தியும் மஞ்சுவும் வந்திருந்தார்கள். குதிரை வண்டியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தபோது தாத்தாவும் பாட்டியும் பாசத்தோடு உடம்பைத் தடவினாலும், சித்தப்பா ‘இந்தத் தடவை விடுமுறையைக் கொண்டாட முடியாது. படிக்கணும். எங்க மஞ்சுவுக்கும் இந்தத் தடவை எஸ்எஸ்எல்சி. அவன் படிப்பையும் கெடுக்கக் கூடாது’ எனத் தீவிரத் தொனியில்


காதலை மீறி நிலைத்திருக்கும் மரணம்

 

 கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் க்ரிகோரி ரபாஸாவின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில்: முரளிதரன் செனட்டர் ஓனெசிமோ சான்செஸ் இறப்பதற்குச் சரியாக ஆறு மாதம் பதினோரு நாட்கள் மிச்சமிருந்தபோது வாழ்க் கையிலேயே தான் மிகவும் விரும்பிய பெண்ணைச் சந்தித்தார். ரோஸல் டெல் வெர்ரி கிராமத்தில் அவளைச் சந்தித்தார். அந்தத் தீவைப் பகல் நேரத்தில் பார்த்தால், பாலைவனத்தில் கடல் நீர் புகுந்திருக்கும் பகுதியைப் போலக் காட்சியளிக்கும். இரவு நேரத்தில் கடத்தல்காரர்களின் கப்பல்களுக்கான இறங்குதளமாக இருக்கும். யாருடைய வாழ்வையாவது மாற்றியமைக்கக்கூடிய யாராவது அங்கே


சுளுக்கு வலி

 

 காவ் ஸின்ஜியான் தமிழில்: ஜெயந்திசங்கர் ஆங்கில மொழிபெயர்ப்பு: மேபல் லீ ஓவியங்கள்: காச வினய்குமார் வலி. அவன் வயிறு முறுக்கி வலிக்க ஆரம்பித்தது. நிச்சயம் தன்னால் மேலும் அதிகத் தொலைவு நீந்திவிட முடியுமென்றே நம்பினான். ஆனால் கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே அவன் வயிறு வலிக்கத் தொடங்கியிருந்தது. நகர்ந்துகொண்டே இருந்தால் வயிற்றுவலி மறைந்துவிடுமென்றுதான் முதலில் நினைத்தான். ஆனால் மீண்டும் மீண்டும் முறுக்கி வலித்தபோது நீந்துவதை நிறுத்திவிட்டுக் கையால் தொட்டுப் பார்த்தான். வலது புறத்தில் ஏதோ கெட்டியாக