கதைத்தொகுப்பு: நகைச்சுவை

474 கதைகள் கிடைத்துள்ளன.

ஹியூமன் பாம் அப்புசாமி

 

 அப்புசாமியைப் பெருமூச்சுகளே பெட்ரோலாகி இயக்க, அவர் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். தினமும் குறைந்த பட்சம் காலையில் நாற்பது நிமிஷமாவது நடக்க வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு. அப்புசாமி ஓர் ஐந்து நிமிஷம் தெரு முனை வரை நடந்து திரும்பிப் பக்கத்திலுள்ள பார்க் பெஞ்சில் ரிலாக்ஸாக உட்கார்ந்து, அங்கே காலையில் சின்னப்பயல்கள் விளையாடும் ·புட்பால் மாட்ச்சையோ, கிரிக்கெட்டையோ, அபூர்வமாக ஜாக்கிங் ரவுண்டு சுற்றும் சில யுவதி, யுவர்களையோ வேடிக்கை பார்த்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். வாலிப வயதில் அவர்


ஓட்டேரிப் பாதையிலே..

 

 அப்புசாமி, சீதாப்பாட்டியின் மோவாயைத் தொடாத குறையாகக் கெஞ்சினார். சீதாப்பாட்டியோ கைக்குட்டையால் மோவாயைத் துடைத்துக் கொண்டு. “என்னைக் சும்மா தொந்தரவு செய்யாதீர்கள். ஐ டூ க் லை டமில் பிக்சர்ஸ். ஆனால் இந்தப் படத்துக்கு மட்டும் ‘ப்ளீஸ்’ என்னைக் கூப்பிடாதீர்கள்,” என்று மறுத்தாள். சாதாரணமாகச் சீதாப்பாட்டி ஆங்கிலப் படங்கள்… முக்கியமாக ‘ஹிட்ச்காக்’ சீரீஸ்-தான் விரும்பிப் பார்ப்பது வழக்கம். அப்புசாமிக்கோ சினிமா என்றாலே பிடிக்காது. அது எந்த மொழிப் படமானாலும் சரி. அப்படிப்பட்டவர் இன்று தமிழ்ப் படத்துக்குத் தன்னைக் கட்டாயப்படுத்தியது


என்னிடம் வாலாட்டாதீர்கள்

 

 தற்செயலாக அங்கே வந்த சீதாப்பாட்டி, “எங்கே! எங்கே! இப்படித் திரும்புங்கள்,” என்று அப்புசாமியின் தோளைத் தொட்டுத் திருப்பினாள். ஜீப்பா, பனியன் இவைகளைக் கழற்றிவிட்டு, தனது தேக காந்தியைக் கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த அப்புசாமி, “ஏய், என்ன இது, ஆட்டு வியாபாரி பிடித்துப் பார்க்கிற மாதிரி கையைப் போட்டு என்னவோ திருகுகிறாயே?” என்றார். “என்ன ஆச்சரியம்!” என்றாள் சீதாப்பாட்டி. “பிரைமரி வாக்ஸினேஷன் தழும்புகூடக் காணோமே. உங்களுக்குக் குழந்தையில் அம்மையே குத்தவில்லையா?” அப்புசாமி சும்மா இருந்ததிருக்கக் கூடாதா? பெருமிதத்துடன்,


மறியல்

 

 அப்புசாமி வெகு மும்முரமாக எதையோ படித்துக் கொண்டிருந்தார், சீதாப்பாட்டி காப்பி கொண்டு வந்ததைக்கூடக் கவனியாமல். “அடேயம்மா, காப்பியின் ‘பிளேவர்’ கூட உங்களைக் கவரவில்லையே? அப்படி ‘டீப்’பாக எதில் முழுகி விட்டீர்கள்?” என்று சீதாப்பாட்டி அவர் கையிலிருந்த புத்தகத்தை வாங்க முயன்றாள். “பைட்டியே!” என்றார் அப்புசாமி. “வாட்!” என்று அதிர்ந்து போனாள் சீதாப்பாட்டி. “பாட்டியே” என்றா சொன்னீர்கள்?” “அட!” லடுக்கீ! ‘பைட்டியே’ என்றால் இந்தியில் ‘உட்காரு’ என்று அர்த்தம்!” இந்தி படிக்கிறீர்களா என்ன? எனக்கு சர்ப்ரைஸாக இருக்கிறதே!” என்று


நானா பைத்தியம்?

 

  பிற்பகல் மூன்று மணி. அலாரம், ‘கிர்ர்…’ என்று அடித்தது. அதைத் தொடர்ந்து, “ஊம்…போதும் தூங்கினது. வேக்கப்! இரண்டு விஷயம்! மத்தியான்னத் தூக்கம் ஆயுளைக் குறைக்கும். இரண்டாவது, வேலை இருக்கிறது,” என்று சீதாப்பாட்டி, காப்பி ஒரு கையிலும் அலாரம் டைம்பீஸ் ஒரு கையிலுமாக, இதுவரை எந்தப் பக்தனுக்கும் தோன்றியிராத ஒருவகைத் தெய்வம் மாதிரி தன் முது கணவரின் முன் வந்து காட்சி அளித்தாள். அப்புசாமி கண்ணைத் திறக்க விரும்பவில்லை. ஆனால் சீதாப்பாட்டி விட்டுவிடத் தயாராக இல்லை. கணவரை எழுப்பி


சுண்டல் செய்த கிண்டல்

 

 சீதாப்பாட்டி அப்புசாமியின் பாதங்களைப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். பத்துத் தினங்களாக அப்புசாமியின் பாதங்கள் பன் ரொட்டி போல் வீக்கத்துடன் காட்சி அளித்ததே காரணம். சீதாப் பாட்டிக்கு யானை என்றால் பயம். அதிலும் முக்கியமாக யானைக்கால் என்றால் யானைக்குப் பயப்படுவதைப் போல் நாலு மடங்கு பயப்படுவாள். யானைக்கே யானைக்கால் வந்தால் கூட சிகிச்சை செய்யக் கூடிய ஒரு ‘எலிபண்டயாஸிஸ் ஸ்பெஷலிஸ்ட்’டிடம் சீதாப்பாட்டி அப்புசாமியை கூட்டிப் போனாள். அவர் சிரித்துவிட்டு, “இந்த வீக்கத்துக்குக் காரணம் நீர்” என்றார். “ஐயோ நானா?”


பிறந்த நாள்

 

 அப்புசாமியைப் போன்ற துரதிருஷ்டக் கட்டையை எந்தக்       காட்டில்  தேடினாலும் சரி, விறகு டிப்போவில் தேடினாலும் சரி, கண்டுபிடிக்க இயலாது. விடிந்தால் அவரது எண்பத்து மூன்றாவது பிறந்த நாள். அப்புசாமி தன் பிறந்த நாள் பற்றிய இன்பக் கற்பனைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் சீதாப்பாட்டி ஒரு பெரிய ‘கோபால்ட்’ குண்டைத் தூக்கி அப்புசாமியின் இனிய கற்பனைகளில் போட்டாள். “அடி! கைகேயி!” என்று இரண்டே வார்த்தைகளில் தன் ஆத்திரம் முழுவதையும் வடித்துவிட்டு, ‘உனக்கு இது அடுக்குமா? வேண்டாம் இந்த அநியாயம். ஒரு


பார், பார்! சிபாரிசு

 

 எந்தச் சங்க இலக்கியத்துக்கும், எந்த இருபதாம் நூற்று¡ண்டு இலக்கியத்துக்கும் கட்டுப்படாத ஒரு புது தினுசான கூத்தை ஆடிக் கொண்டிருந்தார், அப்புசாமி. “ஒய் இஸ் திஸ் ஓல்ட் மான் ஜம்ப்பிங்!” என்று சீதாப்பாட்டி, அப்புசாமி காதுபட முணுமுணுத்தாள். அப்புறம் உற்று நோக்கியபோது, அப்புசாமியின் கையில் ஒரு கடிதம் இருப்பது தெரிந்தது. ‘இந்திய ஜனாதிபதி இவரை ஏதாவது திடீரென்று பத்ம பூஷண், பத்ம விபூஷண் அல்லது பாரத ரத்னா பண்ணிவிட்டாரோ?’ சீதாப்பாட்டி கொஞ்சம் தன்னைக் குழப்பிக் கொண்டாள். பிறகு, “ஹாப்பி!


விடாப்பிடி

 

 “எனக்கு ஏதாவது லெட்டர்ஸ் உண்டா?” என்று அப்புசாமியைச் சீதாப்பாட்டி விசாரித்தாள். அவர் ஒரு இன்லண்ட் லெட்டரைத் தப்பாகக் கிழித்துவிட்டு, எதை, எந்தப் பகுதியோடு இணைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருந்தார். “எப்போதும் உங்களுக்கு ‘ஹேஸ்ட்’ தான். இப்படி தாறுமாறாகவா கிழிப்பது?” என்று அதை வாங்கிச் சரிசெய்து படித்தவள் அடுத்த கணம், “ஆ! கெட்டது குடி!” என்று கூவியவாறு சோபாவில் இடிந்துபோய் உட்காந்துவிட்டாள். மலை குலைந்தாலும், நிலைகுலையாத தன் மனையாட்டியைக் கலகலத்துப் போய் உட்கார வைத்த அந்தக்


அலங்காநல்லூர் அப்புசாமி

 

 “கொம்பைச் சீவறானா? எதுக்குடா, ரசம்?” பதறினார் அப்புசாமி.   ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந்தேகம் கேட்டான். “ஏன் தாத்தா, ‘வீர’வுக்கு ‘ற’ வா? ‘ர’ வா?” இலக்கணப் பிழை பற்றிக் கவலைப்படும் நிலையில் அப்போது அப்புசாமி இல்லை. இலக்கணம் பிழைக்கிறதோ இல்லையோ, தாம் உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். “கொம்பை ஏண்டா சீவறான்? அதைச் சொல் முதலில்.” ரசகுண்டு கையிலிருந்த பெயிண்ட்டிங் பிரஷ்ஷைத் தூக்கி எறிந்துவிட்டுக் கோபத்துடன் அவரருகே வந்தான். “வேலை செய்ய