கதைத்தொகுப்பு: நகைச்சுவை

471 கதைகள் கிடைத்துள்ளன.

கூழுக்கொரு கும்பிடு

 

 ஒரு மாபெரும் பொறுப்பை சீதாப்பாட்டி அப்புசாமியிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக உள்ளே படுத்திருந்தாள். ஆடி மாசம் என்றாலே சீதாப்பாட்டிக்கு ஓர் அலர்ஜி. விடியற்காலையிலே ஒலிபெருக்கி மூலம் எல்.ஆர்.ஈஸ்வரி, வீரமணி, வீரமணி ஜூனியர், மகாநதி ஷோபனா, மீரா கிருஷ்ணா, தேவி போன்றவர்களின் பக்திப்பாடல்கள் ‘ரொய்ங்ங்ங் ‘ என்று காதில் பாயும். ‘கூழு ஊத்தறோம்’ என்று கையில் ரசீது புத்தகத்துடன் கோஷ்டி கோஷ்டியாக வந்து கொண்டிருப்பார்கள். ‘ஒன்றே அம்மன், ஒருவனே வசூலிப்பவன்’ என்றிருந்தால் பரவாயில்லை, ஒரே அம்மனுக்குப் பற்பல கோஷ்டிகள், பற்பல


வாய்வா? தாய்வா?

 

 அப்புசாமி ‘ஆ!’ என்றார் தோளைப் பிடித்துக் கொண்டு. தோளில் தென் வடலாக நாற்பது டிகிரி கோணத்தில் ஒரு வலி சுரீர் என்று எங்கோ சென்றது. மீண்டும் வடகிழக்காக அது திரும்பி, கிழமேற்காக மையம் கொண்டது. அப்புசாமிக்கு நன்றாகத் தெரிந்தது, நிச்சயம் அது வாய்வுதான் என்று. கொஞ்ச நாளாக அவர் உடம்புக்குள் ஏதோ ஒரு வாய்வு. மந்திரி மாதிரி அடிக்கடிச் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தது. ‘கடற்கரைக்கு நான் காற்று வாங்க வந்தால், கூடவே இந்த ‘வாயு’வும் காற்று வாங்க


ஆகஸ்ட் தியாகி அப்புசாமி

 

 அப்புசாமி குறிபார்த்து தவறான இடத்தில் சாலையைக் கடக்க முயன்றார். க்ரீச் என்று அலறலுடன் ஆட்டோ ஒன்று நின்றது. யோவ்! பெரிசு! வூட்டிலே சொல்லிகிணு வந்திட்டியாய்யா. சாவு கிராக்கி!’ என்று மாமூல் வாசகங்களைச் சொல்லி ஆட்டோக்காரன் முறைத்தான். இன்ன எண்ணுக்கு இன்ன வாழ்த்துத் தந்தி என்பது போல வாகன ஓட்டிகளுக்குச் சில திட்டுக்கள் உண்டு. அப்புசாமி இந்த மாதிரி சந்தர்ப்பத்துக்குத் தானே காத்திருந்தார். என்னென்ன எதிர் வசனம் பேச வேண்டும் என்பதை எல்லாம் முன்கூட்டியே அவரும் செட்டப் செய்து


சீதே ஜே.பி.

 

 “என்ன தாத்தா! எவ்வளவு நேரமாகக் கை தட்டிக் கொண்டே பின்னால் வருகிறேன்.  திரும்பியே பார்க்க மாட்டேன் என்கிறீர்களே…ஹ¥ம்… என்ன இருந்தாலும் ஒரு கெளரவ மாஜிஸ்திரேட்டோட கணவரில்லையா? புதுப் பெருமையினால் பழைய சினேகிதர்களெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை…” என்று பெருமூச்செறிந்தான் ரசகுண்டு. “என்னது? கெளரவ மாஜிஸ்ட்ரேட்டோட புருஷனா? என்னடாப்பா பேத்தறே?” அப்புசாமி திகைத்தார். “சரிதான், உங்களுக்கே தெரியாதா? பாட்டிக்கு இப்போ கெளரவ மாஜிஸ்திரேட் பதவி கிடைத்திருக்கிறதாமே. பாட்டி உங்களை மதித்து எப்போதாவது, ஏதாவது சொல்லியிருந்தால்தானே தெரியும்? பேப்பர்லே கூடச்


செடி நட்டவர் தண்ணீர் ஊற்றுவார்

 

 அப்புசாமிக்குப் பல விஷயங்கள் ஆரம்பத்தில் புதிராகத்தான் இருக்கும். ஆனால் சீதாப்பாட்டி லாரி ஒன்று அழைத்துக்கொண்டு வருமாறு ஒரு நாள் காலையில் கட்டளையிட்டது அப்புசாமிக்கு விளங்கவேயில்லை. மேஜைமீது நாலைந்து வருட வரவு செலவுக் கணக்குப் புத்தகங்கள் பிரித்துப் போடப்பட்டிருந்தன. அப்புசாமி சொன்னார்: ”ஓ! வருமான வரி ஆபீசுக்கு இந்தக் கணக்குகளையெல்லாம் எடுத்துப் போகவா?” என்றவர், ”இந்த நாலைந்து புத்தகங்களுக்காகவா ஒரு லாரி?” என்றார். ”எந்த இன்கம்டாக்ஸ் ஆபீசுக்கும் நாம் இப்போது போகவில்லை. கலெக்ஷனுக்காகப் போகிறோம்,” என்ற சீதாப்பாட்டி மேஜை


கங்கைக் கரைத் தோட்டம்…

 

 பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதற்கு 23-மணி 56 நிமிடம் 4.095 வினாடி ஆகுமென்று எல்லாக் கலைக் களஞ்சியங்களும் கதறுவதைச் சீதாப்பாட்டி நன்கு அறிவாள். ஆனாலும் தபால்காரன் கொடுத்துச் சென்ற கடிதத்தைப் பிரித்ததும் கலைக் களஞ்சியங்களின் ஆய்வு அத்தனையும் பொய்யோ என்று அவள் அஞ்சினாள். பூமி ஒரு மணிக்கு இருபத்து மூன்றாயிரம் தடவை சுற்றுகிறது என்று நம்பினாள். தலை கிர்ரென்று சுற்றப் பிரித்த கடிதத்துடன் பொத்தென்று சாய்வு நாற்காலியில் வீழ்ந்துவிட்டாள். பழங்கவிஞர்கள் இருப்பார்களேயானால், சீதாப்பாட்டி விழுந்ததைப் பார்த்து


அப்புசாமிக்குள் குப்புசாமி

 

 புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்பது பழமொழி. அப்புசாமி ஒரு புலியல்லவாதலால் அவர் புல்லைக் கிள்ளிக் கிள்ளித் தின்று கொண்டிருந்தார். ‘சீதாவுடன் ஒரொரு வேளைக்கும் டிபன் போராட்டம் நடத்துவதைவிட (வரும்போது கூட ஒரு கடினமான மெது பக்கோடா போராட்டம்) இப்படி அக்கடாவென்று பார்க்கில் வந்து உட்கார்ந்து புல்லைத் தின்பது எவ்வளவோ மேல்’ என்று எண்ணியவாறு புல்லைக் கிள்ளி அதன் பசுமையான பால் ருசியை அனுபவித்தவாறிருந்தார். சிந்தனை வசப்பட்டு இருக்கிறேன் என்ற சாக்கில் ஓர் இரண்டு கால் பிராணி


ஹியூமன் பாம் அப்புசாமி

 

 அப்புசாமியைப் பெருமூச்சுகளே பெட்ரோலாகி இயக்க, அவர் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். தினமும் குறைந்த பட்சம் காலையில் நாற்பது நிமிஷமாவது நடக்க வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு. அப்புசாமி ஓர் ஐந்து நிமிஷம் தெரு முனை வரை நடந்து திரும்பிப் பக்கத்திலுள்ள பார்க் பெஞ்சில் ரிலாக்ஸாக உட்கார்ந்து, அங்கே காலையில் சின்னப்பயல்கள் விளையாடும் ·புட்பால் மாட்ச்சையோ, கிரிக்கெட்டையோ, அபூர்வமாக ஜாக்கிங் ரவுண்டு சுற்றும் சில யுவதி, யுவர்களையோ வேடிக்கை பார்த்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். வாலிப வயதில் அவர்


ஓட்டேரிப் பாதையிலே..

 

 அப்புசாமி, சீதாப்பாட்டியின் மோவாயைத் தொடாத குறையாகக் கெஞ்சினார். சீதாப்பாட்டியோ கைக்குட்டையால் மோவாயைத் துடைத்துக் கொண்டு. “என்னைக் சும்மா தொந்தரவு செய்யாதீர்கள். ஐ டூ க் லை டமில் பிக்சர்ஸ். ஆனால் இந்தப் படத்துக்கு மட்டும் ‘ப்ளீஸ்’ என்னைக் கூப்பிடாதீர்கள்,” என்று மறுத்தாள். சாதாரணமாகச் சீதாப்பாட்டி ஆங்கிலப் படங்கள்… முக்கியமாக ‘ஹிட்ச்காக்’ சீரீஸ்-தான் விரும்பிப் பார்ப்பது வழக்கம். அப்புசாமிக்கோ சினிமா என்றாலே பிடிக்காது. அது எந்த மொழிப் படமானாலும் சரி. அப்படிப்பட்டவர் இன்று தமிழ்ப் படத்துக்குத் தன்னைக் கட்டாயப்படுத்தியது


என்னிடம் வாலாட்டாதீர்கள்

 

 தற்செயலாக அங்கே வந்த சீதாப்பாட்டி, “எங்கே! எங்கே! இப்படித் திரும்புங்கள்,” என்று அப்புசாமியின் தோளைத் தொட்டுத் திருப்பினாள். ஜீப்பா, பனியன் இவைகளைக் கழற்றிவிட்டு, தனது தேக காந்தியைக் கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த அப்புசாமி, “ஏய், என்ன இது, ஆட்டு வியாபாரி பிடித்துப் பார்க்கிற மாதிரி கையைப் போட்டு என்னவோ திருகுகிறாயே?” என்றார். “என்ன ஆச்சரியம்!” என்றாள் சீதாப்பாட்டி. “பிரைமரி வாக்ஸினேஷன் தழும்புகூடக் காணோமே. உங்களுக்குக் குழந்தையில் அம்மையே குத்தவில்லையா?” அப்புசாமி சும்மா இருந்ததிருக்கக் கூடாதா? பெருமிதத்துடன்,