கதைத்தொகுப்பு: நகைச்சுவை

471 கதைகள் கிடைத்துள்ளன.

கனவுமாமணி அப்புசாமி

 

 அப்புசாமி இரண்டு மூன்று நாளாகவே மனைவியைப் பலவிதமான கோணங்களில் எட்ட இருந்து ரகசியமாகவும் வெளிப்படையாகவும் கவனித்துக் கொண்டிருந்தார். “வாட் ஹாப்பண்ட் டு யூ… ரெண்டு நாளாக உங்கள் பார்வையே சரியில்லை. எதையோ பார்த்துப் பயந்துகிட்ட மாதிரி முழிக்கிறீர்கள ?” என்றாள் சீதாப்பாட்டி. “என்னவாவது வம்புகிம்பிலே மாட்டிக் கொண்டிருக்கிறீர்களா? யாருக்காவது பைசா தரணுமா?” அப்புசாமி தலையை இல்லையென்று ஆட்டினார். “ஒண்ணுமில்லே… வந்து வந்து… ஒரு பயங்கரக் கனா கண்டேன்… ஆனால் அந்தக் கனவை அமிதாப்பச்சன் மாதிரி கோடி ரூபாய்


ஒரு ராதையும் ஒரு ராவணனும் அப்புசாமியும்.

 

 அப்புசாமிக்கு அபூர்வமாகத்தான் டெலிபோன் கால் வரும் அந்த அபூர்வத்தையும் சீதாப்பாட்டி அவரிடம் சொல்ல மறந்து விடுவாள். இரண்டு நாள் கழித்துச் சாவகாசமாக, ‘உங்களை யாரோ டெலிபோனிலே டே பி·போர் யெஸ்டர் டே கூப்பிட்டாங்க. சொல்ல மறந்து விட்டேன்,’ என்று மேட்டர் ஆ·ப் ·பேக்டாகச் சொல்வாள். அந்த அறிவிப்பில் ஒரு ‘ஸாரி’ யோ, மிடியோ, மினியோ எதுவும் இருக்காது. மனைவியின் அராஜக, அலட்சிய, அகங்கார, அக்கிரம, அநியாய, அழிச்சாட்டிய மனப்போக்கு அவருக்குப் பழகி விட்டது. அன்றைய தினம் அப்புசாமி


ஆ! காஸ்!

 

 அப்புசாமி ஒரு வெற்றுத் தாளையும் பேனாவையும் கொண்டு வந்து சீதாப்பாட்டியிடம் நீட்டினார். “உன் கையெழுத்தை மட்டும் போடும்மே” என்றார். வெற்றுக்காகிதத்தில் கையெழுத்துப் போட்டுத் தர சீதாப்பாட்டி முட்டாளுமல்ல. எம்.எல்.ஏ.வுமல்ல. ஆகவே, “எது எதை எப்போது செய்ய வேணும்னு எனக்குத் தெரியும். உங்க ட்யூனுக்கெல்லாம் ஐ கான்ட் டான்ஸ்” என்று கறாராக மறுத்துவிட்டாள். அப்புசாமி தனது கால்விதியை நொந்துகொண்டே நொண்டியவாறு படுக்கைக்குச் சென்றார். சில தினங்களுக்கு முன் அவருக்குக் காலில் ஒரு எதிர்பார்த்த விபத்து நடந்துவிட்டது. விபத்துக்களில் இரண்டு


சீதாப்பாட்டி விட்ட சவால்!

 

 அப்புசாமி கோபாவேசமாகக் கத்தினார்: “சரிதான் போடா! பெரிய சந்தன வீரப்பன் இவுரு! உன் மாட்டை அவுத்து விட்டுடுறேன் பார். அப்பத்தாண்டா உனக்கு புத்தி வரும்.” பால்கார நாதமுனி, மாட்டுக்கு ‘சத்தக்’ என்று ஊசி போட்டான். பால்காரர்கள் இரண்டு வகை. பருத்திக் கொட்டை வைத்துச் சில பால்காரர்கள் பால் கறப்பார்கள். சில பேர் ஊசி போட்டுப் பால் கறப்பார்கள். ஸிரிஞ்சை மாட்டின்மீது வைத்து ஓர் அழுத்து அழுத்திவிட்டுக் காதில் பென்சில் வைத்துக் கொள்வதுபோல அதை வைத்துக் கொண்டு விட்டு


அப்புசாமிக்கு ஆயில் தண்டனை

 

 அப்புசாமி சீதாப்பாட்டியின் தூதுவராக மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார். முதல் தடவை பச்சைத் தண்ணீரைப் பல திக்குகளிலிருந்து ஜல்ஜலார் என்று வீசினார். பலனில்லை. இரண்டாம் சுற்றில் சின்னஞ்சிறு தரமான கற்களைப் பொறுக்கி ஏவினார். ஊஹ¥ம். இலக்கை அவை அடையவில்லை. மூன்றாவது சுற்றில் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்து வந்து காருக்கடியில் கொடுத்து நாலா திசைகளிலும் லொட லொட செய்தார். காருக்கடியில் இருந்து ‘உர்ர்ர்’ என்று ஓர் உறுமல் மட்டுமே வந்தது. கை எட்டின மட்டும் விட்டு வாக்கிங்


அப்புசாமியும் ஸ்வீட் ஸிக்ஸ்டீனும்!

 

 அப்புசாமி உறிஞ்சிப் பார்த்தார், அட்டைப் பெட்டிகளின் மணத்தை. தூக்கிப் பார்த்தார் கனத்தை. நொந்து கொண்டார் தலை எழுத்தை. வெறுத்தார் மனைவியின் அராஜகத்தை. விரும்பவில்லை அவளுடைய சிக்கனத்தை. ஸ்வீட்டுகளின் நறுமணம் கமகமவென்று அவர் நாசியில் புகுந்து சரளி வாசித்தது. மெட்ரோ வாட்டர் டாங்க் கன்னாபின்னாவென்று கசிவது போல எச்சில் தளும்பி வழிந்தது. பஞ்ச பாண்டவர்கள் தங்கள் பஞ்ச காலத்தில் கேட்டது போல அவர் யாசித்தது, நேசித்தது ஒரே ஒரு ஸ்வீட் பெட்டியை, ஈவிரக்கமில்லாமல் சீதாப்பாட்டி மறுத்து விட்டாள். “நத்திங்


ஒரு ஆக்ரோஷமான மோதல்

 

 சீதா பாட்டிக்கு ரத்தம் கொதித்தது. அப்புசாமியோ அவள் எதிரே அமைதியாக நின்று கை கட்டிக்கொண்டு, “தப்பென்ன?” என்றார். “ஆர் யூ நாட் அஷேம்ட் – முன்பின் தெரியாதவர்கள் வீட்டில் போய்ச் சப்பாத்தி சாப்பிட?” “அந்தக் கிழவியைத்தான் எனக்குத் தெரியாதே தவிர, அவள் பேரனை எனக்குத் தெரியுமே. அவன்தான் கையைப் பிடித்து இழுக்காத குறையாக டிபன் சாப்பிட்டுப் போகணும் சார் என்று கட்டாயப்படுத்தினான். சாப்பிட்டேன்.” “வாட் பிஸினஸ் உங்களுக்கு, அந்த வீட்டுப் படி ஏற?” “பூ! பூ பிஸினஸ்தான்.


வளவளா வைரஸ்

 

 “டைனிங் டேபிள் மேலே காப்பி வைச்சேன். குடிக்கிறதுக்கென்ன?” என்றாள் சீதாப்பாட்டி. “சீதே! காப்பி என்கிறது ஒரு குடும்பத்துக்குள்ளே ஒற்றுமையை வளர்க்கிறது. அதைக் குடிக்கிறப்போ உடம்பும், உள்ளமும் தெம்பாயிருக்கு. எப்போ நம்ம உடம்பும் மனசும் தெம்பா இருக்குதோ அப்போது நாம செய்யற காரியமும் நல்ல விதமாக இருக்கும்கிற உண்மையை யார் மறுக்க முடியும்? ஓட்டலிலே கட்டைவிரல் உயரத்துக்கு ஒரு டம்ளர்லே காப்பி தர்ரான். ஆறு ரூபா விலை. வீட்டுக் காப்பின்னா விலை மலிவு. அளவும் அதிகம். வீட்டுக் காப்பிலேயும்


கிராப் மகோத்ஸவம்

 

 “சாமீய்! சாமீய்!” என்ற குரல் விடிகாலை ஐந்து மணிக்கு அப்புசாமியை எழுப்பியது. குரலிலிருந்து ஆசாமி யார் என்று சீதாப்பாட்டிக்குத் தெரிந்துவிட்டது. அப்புசாமியை எழுப்பினாள், “எழுந்திருங்கள். அவர் வந்திருக்கிறார்…குட் காட்! ஒன் ஆப்டர் ஒன்னாக எத்தனை போர்வை? சீக்கீரம் எழுந்து முகம் கழுவிக்கொண்டு போய் உட்காருங்கள்,” என்றாள் சீதாப்பாட்டி. அப்புசாமியின் தூக்கமும் துப்பட்டியும் உயிரும் உடம்பும் போல. ஒன்று இல்லையேல், மற்றொன்று இயங்க முடியாது. ஆகவே முனகலுடன் துப்பட்டியை மீண்டும் தேடினார். “ஹி இஸ் வெய்ட்டிங் ஐ ஸே!”


பிரியமான கடிதம்

 

 பிரியமுள்ள கணவருக்கு, வீட்டைப் பத்திரமாகப் பூட்டிக்கொண்டு போகிறீர்களா? புழக்கடையிலேயே சோப்பை வைத்துவிட்டுப் போய் விடாதீர்கள். வெய்யிலில் அது சாந்து மாதிரி ஆகிவிடும். வலை பீரோவை நன்றாகக் கவனிக்கவும். ஏதேனும் எறும்புகள் தென்படுகின்றனவா? வலை பீரோவின் கால்களுக்கு மறக்காமல் தண்ணீர் ஊற்றவும். கொஞ்சம் நெய் வைத்துவிட்டு வந்திருந்தேன். அதை என்ன செய்தீர்கள்? ஊறுகாய் கெடாமலிருக்கிறதா? சலவைக்காரன் வந்தானா? பழைய பாக்கி துணிகளில் இரண்டு கொண்டு வரவேண்டும். மூன்றரையணா அவனே நமக்குத் தரவேண்டும். இந்தத் தடவை மொத்தமாக எத்தனை துணி