கதைத்தொகுப்பு: நகைச்சுவை

471 கதைகள் கிடைத்துள்ளன.

நாயர் ஒரு டீ

 

 நாயர் டீ கடையில் வந்தமர்ந்தான் கார்த்திக். பேச்சுலர். சென்னையில் வந்து கடந்த 4 மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறான். காலையில் குடிக்கும் அந்த டீ தான் காலை உணவு. நாயர் ஒருத்தர் தான் கடன் கொடுப்பார். அதனால் அவர் விஷத்தைக் கொடுத்தாலும் அதை குடித்துதான் ஆக வேண்டும். ‘என்ன நாயர் டெய்லி நீங்க லிட்டர் லிட்டரா பால் வாங்குறிங்க, வாங்குற பாலெல்லாம் என்ன பண்றிங்க, டீ கேட்டா வெறும் டிக்காஷன் கொடுக்குறிங்க’ ‘ம், பால் இல்லாம் டீ


எதிரும் புதிரும் ராமசாமி

 

 குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் சாமி குத்தமாகிவிடும் என்பதை நிஜமாகவோ அல்லது வசதிக்காகவோ நம்பி நான்கு பெண் குழந்தைகளையும், ஒரு ஆண்குழந்தையையும் என மொத்தமாக 7 குழந்தைகளை (2 பிறந்து இறந்து விட்டது) பெற்றெடுத்தவர்தான் கிரேட் ராமசாமி. தொழில் விவசாயம். ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் என ஒரு குட்டி விலங்குகள் சரணாலயமே வைத்து பராமரித்து வருகிறார். இந்தியாவில் மகாத்மா காந்திக்கு போட்டியாக சட்டை போடாத இன்னொரு மனிதர். சூரிய உதயத்தை ஒரு நாள் கூட


யார் புத்திசாலி?

 

 அலுவலகத்தின் ஒட்டு மொத்த பார்வையும் ஒரே நேரத்தில் ஈர்க்கக் கூடிய ஆற்றல் அவளிடம் அப்படி என்ன இருக்கிறதெனத் தெரியவில்லை. அவள் என்னவோ பார்ப்பதற்கு சுமாரான அழகோடுதான் இருக்கறாள். சரி………சரி…… நான் பொய் சொல்ல மாட்டேன். (மானசீகமாக சத்தியம் செய்து கொண்டு 2 மாதங்கள் ஆகிறது. எல்லாவற்றிற்கும் காரணம் அந்த சத்திய சோதனை புத்தகம்தான்) அவள் சற்று கூடுதலான அழகோடுதான் இருக்கிறாள். அதற்காக ஒட்டு மொத்த அலுவலகமும் அவள் காலடியில் விழுந்துவிட வேண்டுமா என்ன?. அனைவரும் தன்னைப் பார்த்து


காற்றின் தீராத பக்கங்கள்

 

 இதைப்பற்றி ஏன் இவ்வளவு சிந்தித்து மருக வேண்டும்? வேலையில்லாதவனின் வேலை, யாரிடமும் சொல்லவும் முடியாது. சிரிப்பார்கள், கேலி செய்வார்கள், அல்லது கேவலமாய் ஒதுங்கிப் போவார்கள், ஏதேனும் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டவும் கூடும், அது அவரவர் தரத்தின் வெளிப்பாடாய் அமையும். அதற்கு, தான் காரணமாக அமையும் நிலை எழும். வலிய ஒரு வெற்றுச் சூழலை ஏற்படுத்திய நிலையில் இதில் ஆகப்போவது என்ன? அவனவனுக்கு அவனவன் கஷ்டங்கள். அவரவர் உணர்தலின் வெளிப்பாடாகவும், செயலுாக்கமாகவும் அமைகின்றன. இது வேண்டும், வேண்டாம்


உருகும் கிரிம், ஒழுகும் கனவு

 

 எட்டாவது மட்டுமே படித்த ஏழைப்பட்ட கிராமத்து கறுத்த இளைஞன் ஒருவன் எப்படியாவது நகரும் நகர்சார்ந்து இடத்திற்கு வந்து, ஒரு கோடிஸ்வரன் ஆகவே முடியாது என்று யாராவது நிச்சயமாய் சொன்னார்களானால் இப்பொழுதே ஏலாந்தூர் பஸ்டாப்பில் ஒரு கனவோடு பஸ் ஏறும் அந்தப் பையனை நிறுத்திவிட வேண்டியதுதான். நிச்சயமாய் சொல்வதென்றால், இப்பொழுது இருக்கும் கோடீஸ்வரர்களில் யாருமே ஏழையாகப் பிறக்கவில்லை, அவர்கள் பிறவிப் பணக்காரர்கள்தான், அவர்கள் கிராமத்தல் இருந்து வந்தவர்கள் கிடையாது, பூர்வீகமே நகரம்தான், எட்டாவது படித்தவர்கள் இல்லை எல்லோருமே பட்டம்


புறக்கணிப்பு

 

 வா சார் ப்ரெஸ்ஸா..? இன்னா மார்னிங் நியுசா ஈவினிங் நியுசா….? இந்தியா அஸ்த்ரெலியான ஒட்ன என்ன க்ரவுடு பார். சும்மா ஜெ ஜென்னு கீது. ஜனத்த போட்டோ புடிக்கோ சொல்லோ அப்டியே என்னையும் ஒரு போட்டோ புடி சார், நானும் கிரிகெட் பிளேயர்தான். மெய்யாலுமேதான் சார். மெரீனா கிரவுண்டு கீதுல்ல, அதுக்கு அண்ணாண்ட கீற கூவத்துல தாந் எந் வூடு. தின்திக்கும் அந்த கிரவுண்டே கெதியாக் கெடந்தேன். நல்லா பேட் பண்ணுவேன், பாஸ்ட் போலர் சார். எவ்வளோ


பேரண்ட வெளிச்சம்

 

 பல் துலக்குவதற்கு வேப்பங்குச்சியை ஒடிக்கக் கை உயர்த்தியபோது, அதுவரை வாகாய்த் தாழ்ந்திருந்த மரம், ‘சொய்ங்’கென்று மேலே போய்விட்டது. எப்போதும் குச்சியொடிக்கும் மரம்தான், அது. இதற்குமுன், இப்படி நிகழ்ந்ததில்லை. நிகழ்ந்ததாக, நான் கேள்விப்பட்டதுமில்லை. கோபித்துக் கொண்ட சவலைப்பிள்ளை முகம் தூக்கிக்கொள்வதுபோல நெடிதுயர்ந்துவிட்ட மரம், குச்சியொடிக்க முடியாத உயரத்தில், தனது கிளைகளை இருத்திக்கொண்டது. ஏணி வைத்தோ, மாடியில் ஏறியோக்கூட ஒடிக்க முடியாத உயரம், அது! கொல்லிமலை முனிவர் ஒருவர், ‘தினமும் வேப்பங்குச்சியால்தான் நீ பல்துலக்க வேண்டும்’ என்று என் கனவில்


தாத்தா பேரன்

 

 தாத்தா இது அவ்வளவு சாதாரணமான விஷயமாகத் தோன்றவில்லை. இதுகுறித்து முழு விசாரணை நடத்தியே ஆகவேண்டும். யோசித்துப் பார்த்தால் உலகில் சகஜமாக நடக்கக் கூடிய விஷயமாகத்தான் தோன்றியது. ஆனால் அவன் சற்று எல்லை மீறியிருக்கிறான். அதை எப்படி சொல்வது. இந்த தள்ளாத வயதில் என்னை அசிங்கப்படுத்துவதில் அவனுக்கு அப்படி என்ன ஆசையோ. அவன் கூறியிருக்கிறான். எனக்கு நிற்காமல் போய்க் கொண்டிருக்கிறதாம். அதனால் நான் சாகக் கிடக்கிறேனாம். அந்த மடவாத்தியாருக்காவது தெரிய வேண்டாம், எனக்குப் பேதியென்றால் அவனுக்கு எதுக்கு லீவு


மிஸ்டர் மாறார்

 

 எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஒருவேளை இருந்திருப்பின் (இப்படி ஒருவேளை என்று சிந்திப்பதில் நான் பழக்கப்பட்டுவிட்டேன்) நான் இதைத்தான் வேண்டியிருப்பேன். கடவுளே அந்த காமன் மேன் ஊருக்குள் குண்டு வைத்துவிட்டு போன் செய்வதற்கு என்னை தேர்ந்தெடுக்கக் கூடாது. ஒருவேளை என்னை தேர்ந்தெடுத்திருந்தால், கடவுளே நான் அன்று விடுமுறையில் வெளிநாடு சென்றிருக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு வெளிநாட்டிற்கு சென்றிருக்கவில்லையெனில் கடவுளே அவனுக்கு டவர் கிடைக்காமல் போய்விட வேண்டும். துரதிஷ்டவசமாக ஒருவேளை டவர் சரியாக கிடைத்துவிட்டால், அன்று மழைபெய்ய வாய்ப்பில்லை


யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்

 

 ஒருவனுக்குக் கோடி காசு இருக்கலாம்; கொஞ்சும் குழந்தை இருக்கலாம்; பிடித்தமான மனைவியோ, காதலியோ இருக்கலாம்; வாழ்க்கையில் விரும்பியது கிடைக்கலாம். ஆனால், உறக்கமற்ற இரவுக்காரனுக்கு நிம்மதி இருக்காது. தலையில் புண் வந்த மிருகம் போல அவதிப்பட வேண்டியதுதான். படுத்த பத்தாம் விநாடி குறட்டை ஒலியால் வீட்டைப் பெயர்க்கும் இவன், இன்றுதான் உறக்கமற்றுப் புரண்டான். அடிக்கடி பீரோவைத் திறந்து, அந்த பத்தாயிரம் ரூபாய் இருக்கிறதா என்று பார்த்தான். மீண்டும் முள் படுக்கையில் படுத்துக்கொண்டான். ‘‘தூங்காம அடிக்கடி எங்கே எழுந்து போறீங்க?’’