கதைத்தொகுப்பு: நகைச்சுவை

496 கதைகள் கிடைத்துள்ளன.

மேக்கிங் ஆஃப் கல்ச்சுரல் புரொக்ராம்

 

 நாட்கள் இருந்தபோதெல்லாம் ஓ.பி அடித்துவிட்டு, கடைசி நாளில் தீவிரமாக பரிட்சைக்கு பிரிப்பேர் பன்னும் மாணவனின் மனநிலையில் ஒயிட் போர்டில் கிருக்கிக் கொண்டிருந்தார் இருந்தார் ‘ஃப்ரீயா வுடு ரங்கராஜன்’ சார். மூன்று நாட்களில் மாடல் எக்ஸாம். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முடிக்க வேண்டிய ஏழு டாப்பிக் இன்னும் முடிக்கவில்லை. “இன்னைக்கி OS மராத்தான்-தான். IP மேடத்தோட பீரியடையும் சேத்து வாங்கியிருக்கு சனியென்!” மோகன் மெல்லமாக சொன்னபோது எனக்குத் தலைசுற்றியது. பக்கத்தில் சச்சின் தன்னுடைய கனவில் புல்லட்டில் சீறிப்பாய்ந்து கொண்டிருதான் என்று


எருமைச் சவாரி!

 

 ‘எச’ ராமசாமியை நான் சந்திப்பேன், அதுவும் நான் பயணித்-துக்கொண்டு இருக்கும் விமானத்தின் பைலட்டாக அவன் இருப்பான் என்று நான் கற்பனையில்கூட எண்ணிப் பார்த்தது இல்லை. அந்த ஒல்லிக்குச்சி ஏர்ஹோஸ்டஸ் என்னை நோக்கி வந்தாள். பவ்யமாகக் குனிந்து, ‘‘எங்கள் கேப்டன் டி.ஜி.ராம்சே உங்களைச் சந்திக்க ஆவலோடு இருக்கிறார்’’ என்றாள். நான் ப்ளூ க்ராஸ் ராகவன் என்று மரியாதையோடும், மாட்டு சாணி, பூனை மூத்திரம், கொக்கு, குரங்கு, ஈ, கொசுக்களோடு வசிப்பவன் என்று வசையோடும் அழைக்-கப்படுபவன். அதைப் பற்றி நான்


புரொபசர் சகல சந்தேக நிவாரணி!

 

 பக்கத்து வீட்டில் ஒரு புரொபசர் இருந்தார். புரொபசர்னா புரொபசரே அல்ல; அசிஸ்டென்ட் லெக்சரர் & ஒரு தனியார் கல்லூரியில்! சென்னையிலிருந்து ரெண்டு பஸ் பிடித்து, ரெண்டு மணி நேரம் பிரயாணம் செய்தால், அவரோட காலேஜ் இருக்கிற கிராமம் தெரியும். அப்புறம் பொடி நடையா கால்மணி நடந்து, சரியா 11 மணிக்கு காலேஜை அடைந்து விடுவார். அங்கே ஃபிசிக்ஸ் டிபார்ட்மென்ட்டில் ஏறக்குறைய எடுபிடி மாதிரி. வயசு ஆயிட்டுது நாற்பதுக்கும் பக்கமா! எங்கள் காலனி மீட்டிங்குக்கு அநேகமாக அவர்தான் தலைமை


ஒரு விஷயமாக!

 

 ‘வாழ்க்கை என்பது சஸ்பென்ஸ்களின் தோரணம்!’ என்ற பொன்மொழியை எங்கோ, எதிலோ படித்திருக்கிறேன். நூற்றுக்கு நூறு அந்தப் பொன்மொழி சரியே! மறுக்கிறவர்கள் தயவு செய்து டி.வி&யில் வரும் மெகா சீரியல் களைப் பார்க்கவும். ஒவ்வொரு எபிஸோடின் இறுதியிலும் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் கட்டாயம் இருக்கும். அது சாதா சஸ்பென்ஸாகக்கூட இருக்கலாம். ஆனாலும், அது கூட நமது ஆவலை எக்கச்சக்கமாகத் தூண்டிவிட்டு விடும். உதாரணமாக, ஒரு ஆட்டோவில் இளம் பெண் ஏறுகிறாள். ஆட்டோக்காரர் அவளைத் திரும்பிப் பார்க்கிறார். தொடரும். அந்த


தாமரை பூத்த தடாகம்

 

 என் வாழ்க்கையில் நான் பல பருவங்களைக் கடந்து வந்திருக்கிறேன். பருவங்கள் என்றால் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்று நீங்கள் நினைக்கலாம். அல்லது மேல்நாடுகள்போல இலையுதிர், பனி, இலைதுளிர், கோடை என்றும் எண்ணலாம். நான் சொல்வது வயதுப் பருவம். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு காதல் எனக்கு இருந்தது. ஒரு பருவத்தில் திடீரென்று என்னை இசை மோகம் பிடித்து ஆட்டியது. அதற்கு காரணம் என் நண்பரும் குருவுமான வேலுச்சாமி என்றே நினைக்கிறேன். வேலுச்சாமிக்கு வயது 20


.23 சதம்

 

 கனடிய டொலர் .23 சதம். இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் 15.00, இந்திய ரூபாயில் 8.00. இத்தாலிய லீராவில் 333, யப்பானிய யென்னில் 20. அது அல்ல முக்கியம். கனடிய அரசாங்கம் இந்த .23 சதத்தை எனக்கு தரவேண்டும். பல வருடங்களாக. அதை எப்படித் தருவது என்று அரசாங்கத்துக்கு குழப்பமாக இருக்கிறது. எனக்கும் எப்படி வாங்குவது என்பது தெரியவில்லை. G8 என்று சொல்லப்படும் உலகத்து முக்கிய நாடுகளில் ஒன்றான கனடா நாடு இப்படி கேவலம் .23 சதத்துக்கு


பிரபல லீலை சாமியார் சுத்தானந்தாவின் கதை

 

 விஜயாநகர் காலனியின் மூன்றாவது தெருவில் ஒரு பச்சை நிற வீடு இருக்கிறது. நீங்கள் இதுவரை அந்த வீட்டை கவனித்திருக்கவில்லையென்றாலும் கூட அடுத்த முறை அவ்வழியாகப் போகும் போது அங்கிருக்கும் நாயை பார்த்துவிட்டு வாருங்கள். செம்மி நிற நாட்டு நாய் அது. பெரும்பாலும் வாயில் நீர் ஒழுக தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களை பார்த்துக் கொண்டிருக்கும். *** அப்பொழுது கணேசனுக்கு படிப்பு மண்டையில் ஏறவில்லை என்று அவனது ஆத்தா ஏறாத கோயில்களே சுற்றுவட்டாரத்தில் இல்லை. அவள் ஏறியதில் கோயில் படிக்கட்டுகள்


லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன்

 

 ஆதினத்தின் கனவுகளில் மட்டும்தான் சிவபெருமான் வருவார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நானும் மாரியப்பனும் ஜவாப்தாரியாக முடியாது. மாரியப்பனின் கனவில் வந்த சிவபெருமான் பேசாமலாவது போய் இருக்கலாம் ஆனால் ”நீ முயற்சி செய்தால் லிண்ட்சே லோஹனுக்கு கணவனாக வாழ்க்கைப்படலாம்” என்று லிட்டர்கணக்கில் பெட்ரோலை ஊற்றி கொளுத்திப்போட்டுவிட்டார். பெட்ரோல் விலை லிட்டருக்கு வெறும் 27 ரூபாயாக இருந்த 2002 ஆம் ஆண்டில்தான் மாரியப்பனுக்கு இந்தக் கனவு வந்தது. அதற்கும் இரண்டரை வருடங்களுக்கு முன்பாக வள்ளியாம்பாளையத்தில் இருந்து எண்ணெய்த் தலையும்


குஜால் தேசத்தில் சிக்கிக் கொண்ட ரங்கநாதன்

 

 மூன்று நாள் தாடியோடு அலுவலகம் வந்திருந்த ரங்கநாதனுக்கு அவனது மேலாளர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. இன்ப அதிர்ச்சிதான். இரண்டு வார காலத்திற்கு ரங்கநாதன் ஃப்ரான்ஸ் போய் வர வேண்டுமாம். கேட்ட வினாடியில் இதயம் உச்சந்தலைக்கும் அடிவயிற்றுக்கும் குத்தாட்டம் போட்டது. அத்தனை குஜால்களுக்கும் ஃப்ரான்ஸில் இடம் உண்டு என்று யாரோ அவனிடம் கொளுத்திப் போட்டிருந்தார்கள். அந்த ’கொளுத்தல்’ அவனது உற்சாகத்திற்கு காரணமாக இருந்தது. தெற்கு ப்ரான்ஸில் இருக்கும் மாண்ட்பெல்லியே என்ற ஊரில் ரங்கு பணியாற்றும் நிறுவனத்தின் கிளை அலுவலகம்


போலீஸ் என்கவுண்ட்டர்

 

 ” உங்களை ரவுண்ட் அப் செஞ்சிருக்கோம். வெளியே வந்துடுங்க. இல்லாட்டி ஃபயரிங் செய்ய வேண்டியிருக்கும்” “வேளச்சேரி பேங்க் ராப்ரி, தாம்பரம் காலேஜ் பொண்ணு ரேப் அண்ட் மர்டருக்காக உங்க நாலு பேரையும் அரெஸ்ட் செய்ய ஆர்டர் இருக்கு. நீங்க கோ-ஆப்ரேட் செய்யலைண்ணா என்கவுண்ட்டர் செய்வோம்” “அசிஸ்டெண்ட் கமிஷனர் பேசறேன். உங்க உயிருக்கு நான் க்யாரண்டி. கம் அவுட்” “பாஸ், போலீஸ் அட்டாக்கை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நாம ஆரம்பிச்சுடலாமா” “…………” “வேண்டாம். ரொம்ப குறைவான போலீஸ்காரங்கதான் வெளியே இருக்காங்க.