கதைத்தொகுப்பு: த்ரில்லர்

141 கதைகள் கிடைத்துள்ளன.

சேதி வந்தது

 

 கதை ஆசிரியர்: வாஸந்தி. பூஜாரி விட்டல் ராவின் வீடு தெருக்கோடியில் இருந்தது. ஐந்து மணிக்கு அவரைப் பிடிக்கணும் என்று கனகம்மா தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.இப்பொழுது மணி நான்கு தான். விட்டல்ராவ் சரியாக நாலரை மணிக்குக் கோவிலுக்குக் கிளம்பிவிடுவார். கிளம்பும் சமயத்தில் போய் நின்றால் ஏகமாய் பிகு செய்துக் கொள்வார்.ஆபீஸுக்குக் கிளம்பும் சமயத்தில் ஏதாவது விவரம் கேட்க எதிரில் சென்றால் ரமணாவின் அப்பாவுக்குக் கோபம் வருமே அதுபோல.வெங்கடாசலபதிதான் விட்டல்ராவின் எஜமானர். தேமேனென்று நிற்கும் கற்சிலை.வாயைத் திறந்து ஏன் தாமதமாக வந்தீர்


ஜோதியும் ரமணியும்

 

 புதிய பெண் லெக்சரர், ரமணியை எப்படி சமாளிக்கப்போகிறாள் என்று கதி கலங்கிப்போனோம். ரமணி என்று பெயர் இருந்தால் ஒருவன் எப்படி இருப்பான்? குழந்தை முகம், பெண்மை மிளிரும் தேக அமைப்புடன்தானே? தப்பு. இவன் மிலிட்டரி மீசையுடன் காட்டாகுஸ்தி பயில்வான் போல இருந்தான். போதாமல் பலத்த குரல். யாரையாவது விளித்தால் ஹாஸ்டலே அதிரும். சிரிக்கும்போது மட்டும் கண்களில் ரமணி தெரிவான். மற்றபடி காட்டான். ஒரு மாதம் லேட்டாகத்தான் சேர்ந்தான். முதலில் அவனை சர்வே கிளாசில் வெளியே ஹாஸ்டலைச் சுற்றி


ஃபிலிமோத்ஸவ்

 

 மந்திரி வந்திருக்க வேண்டும். எல்லோரும் தேர்தல் உற்சவத்தில் கவனமாக இருந்ததால் டில்லி அதிகாரி ஒருத்தர் மட்டுமே வந்திருந்தார். வெள்ளைக்கார டைரக்டர்கள் சிலர் வந்திருந்தார்கள். எதற்கெடுத்தாலும் ‘வெரி நைஸ்’, ‘வெரி நைஸ்’ என்றார்கள். மற்றொரு ‘கல்யாணராம’னைத் தேடி தமிழ் சினிமா டைரக்டர்கள், கதாசிரியர்கள், பத்திரிக்கையாளர் என்று பல பேர் டேரா போட்டிருந்தார்கள். சகட்டுமேனிக்கு சினிமா பார்த்தார்கள், குடித்தார்கள். விலை போகாத ஹிந்தி நடிகர்கள், குறுந்தாடி வைத்த புதிய தலைமுறை டைரக்டர்கள், புதுக் கவிஞர்கள், அரசாஙக் அதிகாரிகள், கதம்பமான கும்பல்.


நிதர்சனம்

 

 திரும்பி வந்துகொண்டு இருந்தபோது, ஆஃபீஸர்ஸ் கிளப்பை அடுத்து இருந்த ஹாஸ்டல் வாசலில் கூட்டமாக இருந்தது. கம்பெனி லாரி நின்றிருந்தது. செக்யூரிட்டி ஆசாமிகள் சிகரெட் புகைத்தபடி அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பேசாமல் வீட்டுக்குப் போயிருக்கலாம். ஏதாவது திருட்டாக இருக்கலாம் என்று அருகே சென்று விசாரித்தேன். ”மேலே போய்ப் பாருங்க! மாடில வலது பக்கம் கடைசி ரூம்.” தயக்கத்துடன் மாடி ஏறினேன். எதிர்பார்த்ததை மனசு விரும்பவில்லை. உடம்பு பூரா ஒரு தரிசனத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்க, படிப்படியாக இஷ்டமின்றி ஒருவிதமான


புலிக்கட்டம்

 

 கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன். அவன் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. தன்னைச் சுற்றிலும் உள்ள புறவெளியில் பனி இறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். திரட்சி திரட்சியாக வெண்மை படர்ந்து நிரம்புகின்றது. குளிரின் குணத்தால் வீடுகள் கூட உருமாறத் தொடங்குகின்றன. சிவப்பு நாழி ஓட்டு வீடுகள் வளைவுகள் இறங்கும் வெம்பா வீட்டின் செங்கற்களை ஈரமாக்கி வெறிக்கச் செய்கின்றன. மூன்று தெருக்களும் பிரியும் முனையில் இருந்தது அந்த மைதானம். அவனைத் தவிர அந்த மைதானத்தில் இப்போது நின்றுகொண்டிருப்பவை இரண்டு மரங்கள்தான். அவன் கைகள் புங்கை


மாபெரும் பயணம்

 

 கதை ஆசிரியர்: ஜெயமோகன். பொள்ளாச்சி தேசிய நெடும் பாதையருகே ஒரு பழைய லாட்ஜில் தங்கியிருந்தான். கீழே பலசரக்கு மணம் வீசிய கடைகள் மூடிவிட்டாலும் ஒரு லாரிப்பட்டறை தூங்காமல் விழித்து தட் தட் தடால் என்று ஓசையிட்டுக் கொண்டிருந்தது. கொசுக்கடியும் உண்டு .தூக்கம் வராமல் பிசுக்கு படிந்த மெத்தை மீது படுத்து என்னவோ யோசித்துக் கொண்டிருந்தான். தூக்கம் வராத ந்டு இரவுகளில் சிந்தனைகள் மிகவும் பயமுறுத்துகின்றன .வழக்கமாக நாம் தூங்கிய பிறகு உடலில் இருந்து கிளம்பி இரவில் உலாவும்


கோமதி

 

 கோமதிசெட்டியாருக்கு வயசு முப்பது. அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண்குழந்தை என்று நினைத்துத்தான் கோமதி என்று பெயர் வைத்தார்கள். அவனுக்குமுன் பிறந்த ஏழும் அசல் பெண்கள். இவனுக்கு சிறு பிராயத்திலிருந்தே ஜடைபோட்டு பூ வைத்துக் கொள்வதிலும், வளை அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை. உருவம் ஆணாக இருந்தாலும், இயல்பு அச்சு அசல் பெண்ணாகவே வளர்ந்து வந்தான். நீட்டி, நீட்டி தலை அசைத்துப் பேசுவது அவனுக்கு குழந்தையாக இருக்கும்போதுதான் பொருத்தமாக இருந்தது. பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக விளையாடப் போவான்.ஆண்களோடு விளையாடவேண்டியது ஏற்பட்டுவிட்டால்


எல்லா நாட்களையும் போல

 

 கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன். ஒரு சிறிய தவறு அது. காலையில் வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்ற அலுவலக பணத்தை பறிகொடுத்துவிட்டேன். இவ்வளவிற்கும் பணத்தை செலுத்துவதற்கு துணையாக என்னோடு பழனியப்பனும் வந்திருந்தான். எப்போதும் போலவே வங்கியின் வாசல் வரை ஒன்றாக வந்தோம். அப்போது பழனியப்பனின் செல்போன் அடித்தது. அவன் இரைச்சல் சப்தத்தை விட்டு ஒரமாக நின்று பேச துவங்கினான். கையில் பணப்பையை வைத்து கொண்டு நான் எப்போதும் போலவே கண்ணாடி கதவை திறந்து வங்கியின் உள்ளே நுழைந்தேன்.


ஹசர் தினார்

 

 கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன். அவனுக்குப் பெயர் கிடையாது.அவனை விலைக்கு வாங்கியவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவனது பெயர் மாறிக் கொண்டேயிருந்தது. கடைசியாக அவனை விலைக்கு வாங்கிய வணிகன் ஆயிரம் தினார் விலை கொடுத்து வாங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனை ஹசர் தினார் என்று அழைக்கத் துவங்கினார்கள். அந்த வணிகனிடம் அவனைப் போல இருபதுக்கும் மேற்பட்ட இளவயது ஆண்களிருந்தார்கள்.தேசம் முழுவதுமே ஆண் மோகம் கொண்டவர்கள் அதிகமாகியிருந்தார்கள்.அழகான பெண்களை அடைவதை விடவும் ஆண்களோடு உடல் உறவு கொள்வதற்கே ஆசைபட்டார்கள். ஹசர் தினாரின்


காதிலே கடுக்கன்

 

  கதை ஆசிரியர்: மாதவி அந்தச் செதியைக் கேட்ட நேரத்தில் இருந்து கடுக்கனைத் தேடுகிறேன் காணவில்லை. நெஞ்சு விறைக்கிற மாதிரி கனக்கிறது. தோழுக்கு மிஞ்சினால் பிள்ளைகளுடன் தோழனாகப் பழகவேண்டும் என்று பல மேடைகளில் முழங்கியிருக்கிறேன். ஆனால் என் சொந்த மேடையில், அப்படிக் கடுக்கனை நினைத்துப்பார்க்க முடியவில்லை. கடுக்கன் என் மகன் தான் என்னுடைய மூக்குக் கூட அவனுடைய தோழுக்கு கீழ் தான். என்ன செய்துவிட்டான் என்று நான் கடுக்கனுக்கு அடித்தேன். என் பாட்டனார் போட்ட கடுக்கனைச் சற்று