Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

2364 கதைகள் கிடைத்துள்ளன.

உயர்ந்த மதிப்பு

 

 முருகனும், செந்திலும் மணலூரில் இருக்கும் இரு நண்பர்கள். அவர்கள் அவ்வூரில் எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு எப்படியோ வாழ்ந்து வந்தார்கள். ஒருமுறை வறட்சியால் அப்பகுதி வாடவே நண்பர்களிருவரும் பட்டணத்திற்குப் போய் பணம் சம்பாதிக்க நினைத்து தம் ஊரைவிட்டுக் கிளம்பிச்சென்றார்கள். பட்டணத்தில் இருவருக்கும் நல்ல வேலைகள் கிடைத்தன. இருவரும் நிறையச் சம்பாதித்துச் சேர்த்தும் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செந்தில் தன் நண்பனிடம் “நம் ஊருக்குப் போய் நம் அந்தஸ்து உயர்ந்ததைக் காட்டவேண்டும்” என்றான்.


தாமதமாக வந்த புன்னகை

 

 அன்றைக்குக் காலையில் எழுந்த – போதே அலுவலகத்துக்கு இன்று விடுப்பு சொல்லி விட வேண்டும் என்று அகில் தீர்மானித்து விட்டான். கடந்த பத்து நாள்களாக இருமல், நீர்க்கோவை, ஜாட்டியம் ஆகிய பாதிப்புகளால் அவன் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான். இனிமேலும் பொறுக்க அவனால் முடியவில்லை. தன் முடிவை அம்மா விடம் சொன்னான். “இன்னிக்கு லீவ் போட்டு டாக்டர பாத்துட்டு வந்துடறேன் மா. ஏதாவது மருந்து சாப்டா தான் சரியாகும்னு நினைக்கிறேன்” “ஆமாம் டா, நானே சொல்லணும்னு நினைச்சேன்.


நிழல்

 

 வேலை கெடைச்சா விடிஞ்சாப் பலன்னு நெறையப் பேரு நெனைக்கிறாங்க. முக்கியமா லேடீஸ். நிஜமா அது? அப்படி எல்லாம் ஒரு மண்ணுமில்லை. எனக்கும்தான் வேலை கெடைச்சது. சங்கம் பல்கலைக் கழகத்தின் பண்பாட்டு மையத்திலே மொழி பெயர்ப்பாளர். போதாக் குறைக்கு இருபத்தியேழு வயசாகியும் சலிக்காம பார்ட்-டைம்லே பி.எச்டி வேறே பண்ணிகிட்டிருக்கேன். இருந்தும் என்ன? நிம்மதியாவா இருக்கேன்… இல்லியே…சரியாச் சொல்லணுமின்னா வேலை கெடைச்சதிலே இருந்துதான் நிம்மதி இல்லாம இருக்கிறேன்னு சொல்லணும். அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்த அன்னிக்கு அம்மாவெல்லாம் அழுதே அழுதுட்டாங்க. பின்னே


ஸத்யாநந்தர்

 

 ராமாயண காலத்தில், தண்ட காரண்யத்திலே ஸத்யாநந்தர் என்றொரு ரிஷி இருந்தார். அவர் ஒரு சமயம், வட திசைக்கு மீண்டு மிதிலையில் ஜனகனுடைய சபைக்கு வந்தார். அப்போது அவ்விருவருக்கும் பின்வரும் சம்பாஷணை நடைபெற்றது : ஜனக மஹாராஜா கேட்கிறான்: “தண்டகாரண்யத்தில், ஹே, ஸத்யாநந்த மஹரிஷியே, தண்டகாரண்யத்தில் முக்கியமான குடிகள் எவர்?” ஸத்யாநந்தர் சொல்கிறார்: “ராட்சஸர்களும், பிசாசுகளும், குரங்குகளும்.” ஜனகன்:- “இவர்களுக்குள்ளே பரஸ்பர சம்பந்தங்கள் எப்படி?” ஸத்யாநந்தர்: “எப்போதும் சண்டை. குரங்குகள் ஒன்றையொன்று கொல்லுகின்றன. குரங்குகளை ராட்சஸர் கொல்லுகிறார்கள். இவர்கள்


அன்னயாவினும் புண்ணியம் கோடி…

 

 சூரியனின் சோம்பலான மஞ்சள்நிறக் கிரணங்கள், இப்போது தான் கீழ்வானைத் தடவத் துவங்கியிருந்தன. ஆனால், புதுப்பட்டிக் கிராமமோ எப்போதோ எழுந்துகொண்டு சுறுசுறுப்பை உலவ விட்டிருந்தது. அப்படி இருந்தால்தான் முடியும். நடுத்தர வர்க்கமும், அடித்தட்டு மக்களுமாய் நிரம்பி வாழ்கிற ஊருக்கு, சோம்பலைக் கொண்டாடவெல்லாம் நேரமும் கிடையாது, அது மாதிரியான சிந்தனையும் வராது. எழுந்து கொண்டதுமே வியர்வை சிந்தத் தயாராகி விடவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் நகரும். நகர்த்தவும் முடியும். சின்னத்தாயும், சில பெண்களுமாய் மலைப்பகுதியை நோக்கி நடக்கிறார்கள். ஃபாரஸ்ட் வாச்சர்


45வது வார்டு வேட்பாளர்

 

 மார்கழிப் பனி பொழிந்து கொண்டிருந்தது. இருள் சூழ்ந்திருந்த மயானம், பராஅத் (புதுக்கணக்கு) அன்று ஒளி மயமாகக் காணப்பட்டது. புதைகுழிகளில் கிடக்கும் உற்றார் உறவினர்களைப் பார்த்து, நீங்கள் முந்தி விட்டீர்கள், நாளை நாங்களும் உங்களோடு வந்து சேருவோம்’ என்று கண் கசியாமல் ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு மயானத்தி லிருந்து திரும்புவார்கள். இனி, அங்கு செல்வது அடுத்த ஆண்டில் இதே பராஅத் இரவில். உருண்டு போன ஓர் ஆண்டிற்குப் பின் மீண்டும் வந்த பராஅத் இரவில் மயானத்திற்குச் சென்று ஆறுதல்


ரஞ்சனி

 

 ஸார்! நான் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை தான் படிச்சேன். அதற்கப்புறம் படிப்பு ஏறலே. நான் எங்கப்பாவுக்கு இரண்டாவது பையன். என் அண்ணா நல்ல வேலையில் இருக்கான். படிச்சு நெட்டுருப் போட்டு, பரீட்சை எழுதிப் பாஸ் பண்ண எனக்குச் சிரத்தை இல்லை; பொறுமை இல்லை; வரலை. அம்மா அப்பாவுக்குக் கவலையா இருந்தேன். எங்க குடும்பத்திலே சங்கீதம் கிடையாது. ஆரத்தி எடுக்கறபோது கூட எங்கம்மா பாடினது கிடையாது. எங்கப்பா நியூஸ் கேக்கறதுக்கு மட்டும்தான் ரேடியோ வைத் திருப்புவார். அப்படி இருக்க எனக்கு


சிறுமை

 

 பஸ் வந்து நின்றதுமே, ஏறுவதற்கு புஷ்பவனம் பிள்ளை மிகவும் அவசரப்பட்டார். “ஏறாதே! எறங்கறவங்களுக்கு வழி விடு” என்ற கண்டக்டரின் மரியாதையான(!) அறிவிப்பு அவரைச் சற்றுத் தயங்கவைத்தது. அது ஒரு டெர்மினல். அத்துடன் நின்று திரும்ப வேண்டிய பஸ்தான் அது. இன்னும் பதினைந்து நிமிஷங் களுக்கு மேல் நிற்கும். கும்பலும் இல்லை. இருந்தாலும் பிள்ளையின் இயல்பான ஜாக்கிரதையுணர்வு காரணமாய் முன்னதாக ஏறிவிடத் துடித்தார். எல்லோரும் சாவகாசமாக இறங்கி, கண்டக்டரும் டிரைவரும் டீ குடிக்கப் போகும் வரை, பிள்ளை பொறுமையின்றித்


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 “காமத்துப்பாலில் ஒரு சுவாரசியமான குறளைச் சொல்லி அதுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா?” – திருக்குறள் ஷோஜோவிடம் கேட்டார் புள்ளி. “வெல்லப் பிள்ளையாரில் எல்லாப் பக்கமும்தான் இனிக்கும். அதுபோல எல்லாக் குறளுமே சுவாரசியம் தான். ஒரு குறள் சொல்றேன், கேளுங்க.” தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. “இதுக்கு என்ன அர்த்தங்க?”-புள்ளி கேட்டார். “தாம் காதலிக்கின்ற பெண்ணின் மிருதுவான தோள்களைத் தழுவிக்கொண்டு படுத்திருப்பதை விடத் தாமரைக் கண்ணனாகிய திருமால் உலகம் இன்பமுள்ளதா


சென்றது மீளாது

 

 ஐந்து வயதுடைய ஒரு ஏழை சிறுவன் அவன் பெயர் ஆதித்தன். அம்மாவின் பெயர் சாந்தி, ஆதித்தன் துரு துருவென்று இருப்பான். தன் நண்பர்களுடன் ஒற்றுமையுடனும் இருப்பான். ஆதித்தன் பள்ளியில் சேர்க்கப்பட்டு படிக்க ஆரம்பித்தான். படிப்பில் முதல் மாணவனாக இருப்பான். ஆதித்தன் நான்காம் வகுப்பு அடி எடுத்து வைக்கிறான். தன் நண்பர்கள் தன்னை விட்டு விலகி செல்கிறார்கள். ஆதித்தன் அழுக்கு முகத்துடனும், கிழிந்த சட்டையுடனும், செம்பட்டை தலையுடனும் இருப்பான். மற்றவர் பார்ப்பதற்கு அழகாக தெரியமாட்டான் . ஆதித்தனுக்கு ஒன்றும்