கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

2170 கதைகள் கிடைத்துள்ளன.

சாவதும் ஒரு கலை

 

 உங்களுக்கு சில்வியா பிளாத் பற்றித் தெரியுமா? எனக்கு ஷோபனாவைத் தெரியும் வரை சில்வியா பிளாத் தெரியாது. ஷோபனாவை எப்படித் தெரியும் என்பதும் சொல்ல வேண்டிய விஷயம்தான். அருண்ஜவர்லால் எனது முக்கியமான நண்பர்களில் ஒருவர். ஜவகர்லால் இல்லை-ஜவர்லால். என்னோடு வேலூரில் படித்தவர். தற்பொழுது, பெரும்பான்மைப் பொறியாளர்களைப் போலவே, சென்னையில் உள்ளதொரு மென்பொருள் நிறுவனத்தில் பணி. என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார், பெண்களோடு பழகுங்கள், சுவாரசியம் இருக்கிறது, அதுதான் வாழ்க்கையை மேலும் ரஸிக்க வைக்கும் காரணியென. வாஸ்தவம்தான். பெண்களுடன் அறிமுகம் ஆவதில்தான்


சம்முவம்

 

 அய்யய்யோ! எஞ்செல்லம்! நீ எங்கடா கண்ணே கீற?. இந்தப் பாவிக்கு தெரியலியே கண்ணூ! டேய் சம்முவம்! ராசா!.” “தே! தூரப் போம்மா. ச்சூ! உள்ள வராதன்னு சொல்றேன்..இன்ஸ்பெக்டர் ஐயா பார்த்தாரு அவ்வளவுதான். தூரப் போ.” “ஐயா…ஐயா! எம்புள்ள மொவத்த பார்க்கணும்யா. எப்பிடி சோர்ந்து போய் கெடக்கிறானோ?, தெரியலியே. ஒரு வேளை கூட பசி தாங்கமாட்டானே. கூழுன்னாலும் வயிறு முட்ட குடிக்கணும்யா அவனுக்கு. இந்த நாலுநாளா இன்னா சாப்டானோ?. அய்யோ டேய் சம்முவம்! இந்தக் கோலத்தில உன்னைப் பார்க்கவா


அர்ச்சகம்

 

 சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை, இன்றோடு கைகழுவிவிட்டு ஓடிவிட வேண்டுமென்று, அவன் மனம் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. அதற்காகத் தான் பிச்சுமணி ஐயருக்காக, சரவணன் காக்க வேண்டியதாகி விட்டது. அந்த கிழவர் இன்று எப்படியும் வந்தே தீருவாரென்று நம்பினான் சரவணன்.”ஐயர் வந்தவுடன் அவர் மனம் உருகுமாறு பொய் சொல்லி நடித்தாக வேண்டும். அப்போது தான் பயப்படாமல் இந்த கோவிலின் சாவியை வாங்கிக் கொள்வார். இரண் டொரு நாட்களில் திரும்பி விடுவதாக சொல்லிவிட்டு


ஒரு எம்.எல்.ஏ டிக்கெட்

 

 உன்னைத்தான்.. எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்றேன்.. பேசாம இருந்தா எப்படி ஹும் அப்படின்னா உனக்கு சந்தோஷம் இல்லையா ? என்ன பெரிய சந்தோஷம் வேண்டியிருக்கு.. சம்பாதிச்ச காசையெல்லாம் இப்படியே அழிக்கப் போறீங்க.. கவலைப்படாதே.. தனியா இல்லே கூட்டணிதான். கூட்டணியா ? யார் யாரோட ? ‘சே.ப.க’ வோட ரொம்ப அழகுதான், சுத்த தகராறு செய்ற பார்ட்டியோட கூட்டாக்கும் ? உருப்படாப்பலதான். பயப்படாதே.. அதனாலதான் இ.தி.க வையும் சேர்த்திருக்கு. சே.ப.க வை சமாளிச்சுடலாம். எப்படி பிரிக்கப் போறீங்க


காதல்

 

 அவன் செத்துக் கிடந்தான். அரசாங்க ஆஸ்பத்திரியின் அழுக்கான வார்டு. ” ஸ்டார்வேஷன் டெத். நாலு நாளா கொலைப்பட்டினி கிடந்திருப்பான் போல. பசி மயக்கத்தில் கிறங்கி, நடு ரோட்டில் மயங்கி விழுந்துட்டான். ” ஏட்டிடம், ” இவன் பாக்கெட்டை சோதனை போடு. ” என்றார் இன்ஸ்பெக்டர். சர்ட் பாக்கெட்டில் ரொனால்ட்ஸ் பேனா. பல்லவன் பஸ் டிக்கட். கசங்கிப் போன ஓர் இன்லேண்ட் லெட்டர். அழகான நெளிவுகளோடு நீல இங்க் எழுத்துக்கள். ” லெட்டரைப் படி. ” ” அன்புள்ள


ஸார், நாம போயாகணும்

 

 மின் நகரைக் கடக்கும்போது ஒரு கும்பல் பாதி ரோட்டை மறித்து வேகமாகக் கையை அசைத்தது. தயானந்த் அவசரமாய் பிரேக்கை மிதித்தான். ஜன்னலைப் பார்த்தான் வரது. ஜன்னல் கண்ணாடியில் தலைகள் திரண்டன. நாற்பது வயதுக்காரர் ஒருவர் பதட்டத்துடன் சொன்னார். ” தண்ணித் தொட்டிக்குள்ள குழந்தை விழுந்துருச்சுங்க. அரை மணி நேரமா உயிருக்குப் போராடுது. ஆஸ்பத்திரில விட்டுருங்கய்யா… ” வரது ஜன்னல் கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டே, ” நாங்க அவசரமா போயிட்டிருக்கோம். வேற வண்டி பாருங்க. ” தயானந்த்தின்


கசங்கல்கள்

 

 இவன் கவலையோடு அண்ணாந்து பார்த்தான். மழை வருகிற மாதிரி இருந்தது. இருட்டை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தது வானம். வரும், இன்று மழை வரும். அதன் எல்லா அழகுகளுக்குப் பின்னாலும் இருக்கிற சோகங்களை நினைவுபடுத்துகிற மாதிரி, மழை அதன் சோகங்களுடனும் வரும். இன்றும் மழை வந்துவிட்டால் இந்தச் சட்டை காயாமல் போய் விடுமோ என்று பயமாகவும் இருந்தது. நாளைக்கு இன்டர்வியூவுக்குப் போக இந்தச் சட்டையைத்தான் நம்பியிருந்தான். இந்தச் சட்டைதான் கிழிசல் இல்லாமல், காலர் நைந்து போகாமல், கலர் மங்கிவிடாமல்


காணாமற் போனவர்கள்

 

 எங்களை, ‘ வயலினின் மூன்று தந்திகள், என்று யார் சொன்னார்கள் என்பது இப்போது ஞாபகம் இல்லை. ஆனால், அதுதான் அன்று உண்மை. அந்த மூன்றில் கொஞ்சம் முரட்டுத்தனமாகப் பேசுகிற தந்தி – அருணா. ஆளைப் பார்த்தால் அந்த முரட்டுத்தனம் தெரியாது. முகத்தில் எப்போதும் பூ மலர்ந்திருக்கும். வாடவே செய்யாத சூரியகாந்திப் பூ. உற்றுப் பார்ப்பவர்களுக்குக் கண்ணில் குறும்பு மிதப்பது தெரியும். பின்னால் இருந்து பார்த்தால் நடையில் குதிரை தெரியும். குதிரை இவளானால் அதன்மீது அமர்ந்து போகிற இளவரசி


பெண்மை வாழ்கவென்று

 

 இடுப்பில் ஒரு உதைவிட்டான் சங்கரன். சின்னிக்கு உடம்பு சிலிர்த்தது. உதை விழுந்த இடத்தை வருடிக் கொண்டாள். மெல்லச் சிரித்தாள். நட்ட நடு ரோட்டில் ஆபீஸ் போகிற அவசரத்தில், ஒரு பெண் தனக்குத் தானே சிரித்துக் கொள்வதை பஸ் ஸ்டாண்டின் கண்கள் உறுத்துப் பார்த்தன. மறுபடி ஒரு உதை. “ அடேய் ! சங்கரா ! ” என்று தெரிய இன்னும் ஒன்றரை மாதம் போக வேண்டும். அப்போதும் சங்கரனாய் இராது. சங்கரியும் இல்லை. சங்கரன், சுப்புணி, வைத்யநாதன்


ஆடுகள்

 

 ஹார்பரில் தொடங்கி, பாரி கட்டடம் தாண்டியும், தீப்பெட்டியை அடுக்கி வைத்தாற்போல பெட்டி பெட்டியாய் கடைகள். ஒரு ஆள் உட்கார்ந்துக் கொள்ளலாம்.அப்படி இப்படி கையை காலை அசைக்க முடியாது. பர்மாவிலிருந்து புகலிடம் தேடி, தாய் மண்ணுக்கு ஓடி வந்த அகதிகளுக்கென்று உருவான பஜார், இன்று பிஸியான பர்மாபஜார். இங்கே ஊசி முதற்கொண்டு எல்லாமே கிடைக்கும். கப்பல், ப்ளேனைத் தவிர. அதைக் கூட நிறுத்த இடமிருந்தால் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள்.. வெளிநாட்டு தயாரிப்பு விலாசத்துடன் இருக்கும் பொருட்கள் செலாவணியாகுமிடம்..