கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

2172 கதைகள் கிடைத்துள்ளன.

கெட்டது – ஒரு பக்க கதை

 

  அந்த வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்வையிட நுழைந்தான் அஸிஸ்டென்ட் மேனேஜர் மாதவன். ஒரு லாக்கருக்குக் கீழே மினுமினுப்பாக ஏதோ தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தால் தங்க மோதிரம். சற்று முன்பு லாக்கரைத் திறந்து தன் பொருட்களை எடுத்த வாடிக்கையாளர்தான் விட்டிருக்கிறார் என்பது மாதவனுக்கு உறுதியாகத் தெரிந்தது. இதை அவரிடமே ஒப்படைக்க வேண்டுமா? சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. மோதிரம் அரை பவுன் தேறும். லாக்கரில் வைக்கும் நகைகளுக்கு கஸ்டமர்களே


நைட்டி – ஒரு பக்க கதை

 

 ‘இந்தப் பெருசுக ரெண்டும் ஒத்துமையா இருந்தா நமக்குத்தான் ஆபத்து. சண்டை மூட்டி விடணும்…’ – சமந்தா செயலில் இறங்கினாள். ‘‘சேலைக்குப் பதிலா நைட்டி யூஸ் பண்ணுங்க அத்தே. உங்க உடம்புக்கு அது ரொம்ப அழகா இருக்கும். என்கிட்ட ரெண்டு புது நைட்டி இருக்கு. தர்றேன்… இப்பவே போட்டுக்கங்க…’’ மாமியார் யோசிக்கும் முன்பே நைட்டிகளை எடுத்துக் கொடுத்தாள். அடுத்த ஐந்தாம் நிமிடம் சமந்தா மாமனார் முன்… ‘‘மாமா, அத்தை பண்ற கூத்தைப் பாருங்க… இந்த வயசில போய் நைட்டி


அடிமை – ஒரு பக்க கதை

 

 ‘‘எனக்குக் கல்யாணமாகி இந்த மூணு வருஷமா, என் மாச சம்பளத்தை அப்படியே என் மனைவிகிட்டதான் கொடுக்கறேன். வீட்டுச் செலவு எல்லாம் அவ பொறுப்புதான். தினமும் நான் ஆபீஸுக்கு வரும்போது பஸ் சார்ஜும் கைச்செலவுக்கு பத்து ரூபாயும் தருவா. மேற்கொண்டு என் கையில பத்து பைசா புரளாது!’’ – அலுவலக நண்பன் பாலாஜியிடம் புலம்பினான் தினேஷ். ‘‘இந்த அளவுக்கா உன் மனைவிக்கு அடிமையா இருப்பே! இனிமேலாவது உன் சம்பளம்… உன் உரிமைங்கற தாரக மந்திரத்தை கடைப்பிடி!’’ – உசுப்பேத்தி


ஓகே – ஒரு பக்க கதை

 

 ‘‘நாம கஷ்டப்பட்டு மகன்களை படிக்க வச்சோம். வேலைக்குப் போயிட்டானுக! ஆனா, நம்ம இஷ்டப்படி நல்ல வசதியான இடமா பொண்ணு பார்த்து அவனுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது போலிருக்கு. பையனுக்கு பெண் பார்க்கலாமான்னு கேட்டேன். நான் ஒரு பெண்ணை லவ் பண்றேன்ங்கறான்!’’ – பக்கத்து விட்டு ராமசாமியிடம் கவலையோடு பேசினார் நடராஜன். ‘‘என்ன சார்… இதுக்குப் போய் ஃபீல் பண்றீங்க? இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம். வேலைக்குப் போய் வர்ற இடத்துல, ஆணும் பெண்ணும் சந்திச்சுப் பேசி


நெகிழ்வு – ஒரு பக்க கதை

 

 ‘‘என்னது? பதினஞ்சு நாள் அத்தை இங்க வந்து இருக்கப் போறாங்களா! இப்படி திடுதிப்புன்னு சொன்னா எப்படி? என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க வேணாமா? அப்பப்பா, அந்தப் பதினஞ்சு நாளும் நான் கஷ்டம் அனுபவிக்கணுமே!’’ உமா சொன்னதைக் கேட்ட தினேஷ், அதிர்ச்சியானான். ‘‘உமா! நீயா இப்படிப் பேசுறே? இத்தனை நாளா என் அம்மாவை உன் அம்மா மாதிரிதானே நினைச்சுப் பழகினே! இப்ப எங்க அம்மா வந்தா உனக்குக் கஷ்டம்ங்கறே..?’’ – அவன் கவலை, வார்த்தைகளாய் வந்து விழுந்தன. ‘‘அய்யோ,


வேப்பமரம் – ஒரு பக்க கதை

 

 ‘‘ஏங்க, இன்னிக்காவது இந்த வேப்ப மரத்தை வெட்டச் சொல்லப் போறீங்களா இல்லையா?’’ – காலையிலேயே ஆரம்பித்தாள் என் மனைவி ஜமுனா. ‘‘சொல்றேன்!’’ ‘‘ஆமா, ஆறு மாசமா இதையேதான் சொல்றீங்க… மரம் வளக்குறது பக்கத்து வீட்டுக்காரங்கன்னுதான் பேரு. ஆனா, வேர் மட்டும்தான் அவங்க வீட்ல இருக்கு. மீதியெல்லாம் காம்பவுண்டு சுவர் தாண்டி நம்ம பக்கம்தான் இருக்கு. தினமும் நம்ம வீட்டு வாசல்ல காஞ்சு விழுற இலையெல்லாம் பெருக்கித் தள்றதுக்குள்ள உயிரே போகுது. அவங்ககிட்ட பேசுங்கன்னு எவ்வளவு சொன்னாலும் காதுல


ராகிங் – ஒரு பக்க கதை

 

 ‘‘இங்கே புதுசா சேர்ந்தவர்களை ராகிங் பண்ணுவாங்களா..?’’ ‘‘சேச்சே! அப்படியெல்லாம் இல்லை… யார் சொன்னது?’’ ‘‘புதுசா சேர்ந்த ஸ்டூடன்ட்ஸ் தலையில் தண்ணி ஊத்துவாங்கன்னு கேள்விப்பட்டேன்…’’ ‘‘அதெல்லாம் எப்போவோ நடந்தது… இப்போ அது மாதிரி இல்லை. ரொம்ப டிசிப்ளினா இருப்பாங்க…’’ ‘‘பேப்பரை கிழிச்சு தலையில் போடுவாங்களாமே?’’ ‘‘அப்படி எல்லாம் இல்லை!’’ ‘‘ஜூனியர்ஸோட லன்ச் பாக்ஸைத் திறந்து மத்தவங்க சாப்பிடுவாங்கன்னு புகார் இருக்காமே?’’ ‘‘மேடம்… யாரோ ஒருத்தன் எப்பவோ செய்ததை வெளியில இருக்குறவங்க பெரிசு பண்ணிப் பேசுறாங்க. எங்க நிறுவனத்துக்கு கெட்ட


பெருமிதம் – ஒரு பக்க கதை

 

 இரண்டு நாள் கழித்து பெண்ணை தனியாக சந்தித்துப் பேசிய சுந்தர், ஒரு முடிவுக்கு வந்தான். ‘‘சாரிப்பா… இந்தப் பொண்ணு வேண்டாம்!’’ ‘‘டேய்… அன்னிக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்ன? அதுவும் இல்லாம 40 பவுன் நகையும் ஐந்து லட்சம் ரொக்கமும் தர்றதா சொன்னாங்க. அப்புறம் ஏன் வேண்டாங்கற!’’ – புரியாமல் கேட்டார் அப்பா. ‘‘அப்பா… அண்ணனுக்கு போன வருஷம் திருமணம் பண்ணினப்போ, நாம எதுவும் கேக்கலைன்னாலும், முப்பது பவுன் நகை, மூணு லட்ச ரூபாய் ரொக்கம்னு அண்ணிக்கு சீர்


சண்டை – ஒரு பக்க கதை

 

 ஆபிஸ் முடிந்து வீடு திரும்பினேன். உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக அம்மா பொங்கினாள். ‘அடேய்! இனி ஒரு நிமிஷம் கூட உன் மனைவியோட நான் இருக்க மாட்டேன். என்னை லட்சுமி வீட்டுல விட்டுடு!’ லட்சுமி என் தங்கை. ‘ஏம்மா…என்ன பிரச்னை’ என்றேன். பதிலே இல்லை. ‘எல்லாம் உன் மனைவி சொல்லுவா. கேட்டுக்க. அவ பேச்சைக் கேட்கிறவன்தானே நீ!” என என்னை ஒரு இடி இடித்து விட்டு ‘நீ என்னடா கொண்டு போய் விடறது? நானே போய்க்கிறேன்!’ என்று உடனே


நியாயமே! – ஒரு பக்க கதை

 

 பத்தாயிரம் ரூபாயை பார்த்திபன் வைத்தபோது, நன்கொடைவ சூலிக்க வந்தவர்கள் வாயைப் பிளந்தனர். அந்த ஊரில் பண்டிகை, புத்தாண்டு, பொங்கல், தலைவர்கள் பிறந்த நாளெனவிழாக்கள் நடக்கும். அப்போது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். நான்கைந்து குழுவினர் தனித்தனியே நன்கொடை வசூலிப்பர். ஆர்க்கெஸ்ட்ரா, நாடகம், கூத்து, நடனம் நடத்தி ஊரையே அமர்க்களப்படுத்துவர். ஆனால் இதுவரை ஒருரூபாய் தந்ததில்லை பார்த்திபன். சரித்திரமே மாறியதோ? பத்தாயிரம் ரூபாயை எண்ணி வைக்கிறாரே!” ”உங்க பெயருக்கு ரசீதுதந்திடலாமா சார்?” ”எழுதுங்க அதுக்கு முன்னால நீங்க ஒருவிஷயத்துக்கு சம்மதிச்சா”