கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

2110 கதைகள் கிடைத்துள்ளன.

செய்தி – ஒரு பக்க கதை

 

 கணேசன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து, ‘நாட்டு நடப்புகளை தினமும் தெரிஞ்சுக்கணும். அதனால் நாளையில இருந்து வீட்ல பேப்பர் போடச் சொல்லிட்டேன். தினமும் பேப்பர் படிங்க’ என்றார். பேப்பரை படித்த மனைவி சாந்தி, ‘பார்த்தீங்களா அந்த ஊரு பொண்ணு! புருஷன் ஆபீசுக்கு போன சமயம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரன் கூட தொடர்பு வச்சிருக்கா…’ என்றாள். மகள் திவ்யா, ‘அந்த ரவுடி கூரியர் பாய் மாதிரி அந்த வீட்ல போய் கொள்ளையடி்சிட்டு, வீட்டுக் காரம்மாவையும் அநியாயமா கொலை


வழக்கம் – ஒரு பக்க கதை

 

 ”அம்மனுக்கு அர்ச்சனை பண்ணின குங்குமத்தை இட்டுக்கம்மா!’ – மருமகள் ரேவதியிடம் அன்பாகச் சொன்னாள் பார்வதி ”வேண்டாம் அத்தை…வியர்வையில் அழிஞ்சுடும் ஸ்டிக்கர் பொட்டே வெச்சுக்கிறேன்.” ”இல்லம்மா …வெளியே போகும்போது ஸ்டிக்கர் பொட்டு வச்சுக்க…இப்போ வீட்ல தானே இருக்கே? அதோட, அர்ச்சனை குங்குமம் இட்டுக்கறதுதானே நம்ம வீட்டு வழக்கம்!” ”இல்லேம்மா…உங்க வழக்கத்தை என்மேல் திணிக்காங்க! ” – பட்டென்று ரேவதி இப்படிச் சொல்வாள் என பார்வதி எதிர்பார்க்கவில்லை. அன்று ரேவதியின் அம்மா, அப்பா வந்திருந்தார்கள் அவர்கள் புறப்படத் தயாரானபோது, பூஜையறைக்குள்


சமாதானம் – ஒரு பக்க கதை

 

 நாலைந்து நாட்களாகத் தெருத் தெருவாகத் திரிந்தும் ஓர் எச்சில் இலை கூடக் கிடைக்கவில்லை ஒரு கிழட்டு நாய்க்கு. அப்படியே கிடைத்தாலும் மற்ற நாய்களுடன் போட்டியிட்டு அதைத் தின்ன முடியவில்லை அதனால். ஆகவே பசி ஒரு பக்கமும், வயோதிகத்தால் ஏற்பட்ட வாட்டம் இன்னொரு பக்கமுமாக அது ஒரு நாள் ஒரு வீதி வழியே தளர் நடை நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதற்கு முன்னால் ஓர் எச்சில் இலை வந்து விழ, அதற்காக அந்தக் கிழட்டு நாயை முந்திக்


தனிமை – ஒரு பக்க கதை

 

 புதிதாகக் கட்டப்போகும் வீட்டின் பிளானைப்பற்றி, ஓய்வு பெற்ற கட்டிட இன்ஜினியர் சபேசனோடு விவாதித்துக் கொண்டிருந்தான் வேணு. ”எனக்கும் மனைவிக்கும் தனி படுக்கை அறை, மகனுக்கு ஒன்று, வரவேற்பரை, பூஜையறை…” என்று வேணு தன் தேவைகளை விளக்கிக் கொண்டிருக்க, ”தாத்தா-பாட்டிக்கு தனியா ரூம் வேண்டாமா..?” என 5 வயது மகன் இடைமறித்தான். ‘குழந்தை சொல்றதில நியாயம் இருக்கு’ என்றார் சபேசன் ‘கண்வன்-மனைவிக்கு தனி அறை பிரைவேசிக்காக. பையனுக்குப் படிப்பதற்காக. வயசானவங்களுக்கு அந்த அவசியம் இல்லையே…சின்னப்பையன் தெரியாம சொல்றான்’ என்றான்


தந்திரம் – ஒரு பக்க கதை

 

 நந்தினி எதற்கெடுத்தாலும் சிடுசிடு வென்றிருந்தாள். வெளியே அழைத்துச் சென்றாலும் அதே சிடுசிடு. படுக்கையிலும் அதே. புரிந்தது. தனிக்குடித்தனத்திற்கு. … “அம்மா நாங்க வேற வீடு பார்த்துக்கறம்’ என்றான் அம்மாவிடம். “ஒரு தந்திரம் பண்ணியிருக்கேம்மா. நான் வீடு பார்த்திருக்கற ஏரியாவில் எப்பவும் கொலை, கொள்ளை நடக்கற இடம், வீட்ல தனியா இருக்கற பொண்ணுங்களுக்கு ஆபத்தான இடம்’ “புரியலைபபா..’ சிரித்துக் கொண்டு வந்த நான்… “புது ஏரியாவில் கொலை கொள்ளை பயத்தினால் தனியாக இருக்க பயந்துகொண்டு நம் அப்பா அம்மாவை


இள வயது – ஒரு பக்க கதை

 

 நாலு வயது மகளோடு பீச்சுக்குப்போய் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து, கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன். மகள் முதலில் ஐஸ்கிரீம் வேண்டுமென்று கேட்டாள். ‘தொண்டையில் பூச்சி வந்துவிடும்’ என்று பயமுறுத்தினேன். லாலிபாப் கேட்டவளை, ‘வயிற்றில் பூச்சி வந்துவிடும்’ என்று சொல்லி சமாதாப் படுத்தினேன். அந்தப் பக்கமாக பலூன்காரர் வந்து நின்றார். மகள் பலூன் வேண்டுமென்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள். ‘அதெல்லாம் வெடிச்சுவிடும். நீ பெரியவளாப்புறம் வாங்கிக்கலாம்’ என்று சற்று உரக்கச்சொல்லி அவளை சமாதானப்படுத்த முயற்சித்தேன். ‘சார்…குழந்தைக்கு வயசானப்புறம். பலூன் கிடைக்கும்.


எங்கே போனாள் ராதா..! – ஒரு பக்க கதை

 

 அற்பக் காரணத்திற்காக ராதாவுடன் சண்டைபோட்டு விட்டு, டிபன் கூடச் சாப்பிடாமல் அலுவலகம் வந்து விட்டது ஜெகனை உறுத்திற்று. மணியைப் பார்த்தான். பதினொன்று ஆகி இருந்தது . வீட்டில் ராதா வேலகைளை முடித்து விட்டு ஓய்வாகத்தான் இருப்பாள். போன் செய்து ‘சாரி டியர்’ என்று சொல்லி விடலாம் டெலிபோனைத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டு எண்களைச் சுழற்றினான். எங்கேஜ்ட் சத்தம் கேட்டது பத்து நிமிடம் கழிந்ததும் மறுபடி முயற்சிதான். எங்கேஜ்ட். சிறிது நேரம் சென்றதும் மீண்டும் முயற்சிக்க அதே


தொடாதே – ஒரு பக்க கதை

 

 “தோ பார், தொடாமல் உட்கார்.’ “கொஞ்சநாழி சும்மா இருக்க மாட்டியா.’ “ஒரு தடவை சொன்னா புரியாதா?’ “அப்படி என்ன அவசரம், சித்த நேரம் பொறுக்க மாட்டியா…?’ “எங்கெங்க கை போகுது பாரு!’ “சுத்தி இவ்வளவு பேரு இருக்காங்களே, உனக்கு மட்டும் என்ன அவசரம்? அலையிறியே, காணாததைக் கண்டுவிட்ட மாதிரி.’ “இன்னும் சித்த நேரம் கழித்தே உன்னை கூப்பிட்டிருக்கலாம். அவசரப்பட்டுட்டேன்.’ “நான் ஒன்னும் உன்னை ஏமாத்தமாட்டேன், இருக்கிறது எல்லாம் உனக்குத்தான்; ஒரு கட்டுப்பாடு வாணாம், மனதை அடக்கிக்கோ.’ “ஏய்,


புகை – ஒரு பக்க கதை

 

 தீபாவளிச் சலுகையில் வீட்டு உபயோகப் பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இருவீட்டார் எதிர்ப்புடன் காதல் திருமணம் செய்துகொண்ட லதா, மகேந்திரன் தம்பதிகளுக்கு இதுதான் தலை தீபாவளி. “அந்தச் செருப்ப வாங்காமலே வந்துட்டீங்களே, ஏன்?” கேட்டாள் லதா. “அது தரமான ரகமா தெரியலை. வேற நல்லதா வாங்கிக்கலாம்னு விட்டுட்டேன்” “அதுபோகட்டும். அந்த அயர்ன் பாக்ஸையாவது வாங்கியிருக்கலாமே?” “இதோ பார் லதா! உனக்கு இதெல்லாம் புரியாது. பார்க்குறதுக்குத்தான் அது நல்லாயிருக்கு. கியாரண்டி கிடையாது. சீக்கிரமே பல்லிளிச்சிடும்!”


புதுமுகம் – ஒரு பக்க கதை

 

 என்ன சொத்துக்களை எல்லாம் விக்கப் போறீங்களா? நான் விடவே மாட்டேன்! – பேயாட்டம் ஆடிய மனைவி பார்வதியை அடியோ அடி என்று அடித்து, வீட்டை விட்டு வெளியேற்றினான் பரமசிவன் அடுத்த இரண்டாம் நாளில் கோடிகளோடு அவன் கோடம்பாக்கத்தில்! ”தம்பி, உதவி இயக்குநராகவே எவ்வளவு காலம்தான் குப்பை கொட்டுவே? நான் உன்னை இயக்கநர் ஆக்குறேன். ‘நச்’ னு ஒரு காதல் படம் எடுத்துக் கொடு…!” என்றதும் உதவி இயக்குநருக்குத் தலைகால் புரியவில்லை ”கேட்டுக்கு தம்பி…படத்துக்கு பணம் போடறதால நான்தான்