கதைத்தொகுப்பு: விகடன்

370 கதைகள் கிடைத்துள்ளன.

யாருக்கும் நான் தேவையில்லே-ஜோ

 

 “கம்பனி லா” புத்தகத்திலிருந்து முக்கியமான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்த புஷ்பா தலை நிமிர்ந்தாள். “என்ன வேலாயுதம்?” “கார்லே, முன்பக்க டயர் பஞ்சர் ஆயிருக்குங்க…”. “பஞ்சர்-ஆ? இல்லே, காத்து இறங்கி இருக்குதா?” “பஞ்சர்தான்….ஆணி அடிச்சிருக்கு….” “சரி; டயரை மாத்திடு” “மாத்திட்டேங்க….போய் பஞ்சர் ஒட்டிட்டு வந்திடவா?” புஷ்பா கடிகாரத்தைப் பார்த்தாள். அது எட்டே கால் என்றது. “சுருக்கப் போயிட்டு வந்திடு வேலாயுதம்…பத்து மணிக்குள்ள ஹாஸ்பிடல்லே இருக்கணும். ஐயா இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வரார்…” “உடனே வந்திடறேங்க…” இரண்டடி வைத்தவனை “வேலாயுதம்”


புவிராஜசிங்கி

 

 தேதி19 – வெள்ளி. சென்னை வாட்ஸ்அப் வீடியோ அழைத்தது. விடாமல் இசைத்த அதன் ஒலி சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுடைய தூக்கத்தைக் கலைத்தது. இருட்டில் தடவி மேசை விளக்கைத் தட்டியதும் அறையில் ஒளி பரவியது. கைப்பேசியைப் பார்த்தான். அஞ்சுவிடமிருந்து அழைப்பு. “தூங்கிட்டு இருக்கேனே, படுக்கறதுக்கு முன்னாடிதானே பேசினேன். என்ன அவசரம்?” “இருக்கு. உன் தூக்கத்தை ஒட்டுமொத்தமாகத் தொலைக்கப்போறே.” வலி நிவாரணத்திற்குச் சாப்பிட்ட மாத்திரையின் போதையும் விண்பயணத்தின் களைப்பும் கலந்து கசங்கிக் கிடந்தவனின் மனத்தினுள் மெல்லிய அச்சம் தோன்றி


தனிமைப்படுத்தப்பட்ட பகுதி

 

 இரவு தூங்கி எழுந்ததும் மனம் ஆடை களைந்திருந்தது. ‘இப்படியே ஷவர் முன்னால் நின்றால் ஒரு தெளிவு கிடைக்கும்’ என்று நினைத்தான் கதிரேசன். உஷாவும் ராகேஷும் இன்னும் எழவில்லை. ஷூ அணிந்தபடி நடைப்பயிற்சி கிளம்பினான். ஐந்தே நிமிடங்களில் மனக்குரங்கு அலைபாய்ந்து பேன் பார்க்கத்தொடங்கியிருந்தது. இன்னமும்கூட ராகேஷ் நடந்துகொள்ளும் விதத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. 16 வயதாகிறது. இந்தப் பதினாறு வயதில் கதிரேசன் பைக் ஓட்டக்கூடக் கற்றுக்கொண்டதில்லை. ஆனால் ராகேஷ் வெப்சீரிஸ், வித்தியாசமான செயலிகள், ஆன்லைனில் விநோதமான தளங்கள் என்றிருக்கிறான்.


அம்மை பார்த்திருந்தாள்

 

 ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து வெளிக்குப் போய், நாச்சியார் புதுக்குளத்தில் இருந்து தத்திப் பாய்ந்துவரும் ஓடையில் கழுவியாயிற்று. பாலக்கலுங்கில் வந்து அமர்ந்தான் சுப்பையா. ஆலமரத்து நிழல். பாலத்துக்குக் கீழே பாயும் தேரேகால் ஆற்றின் சலசலப்பு. ஆலமரத்துக்கு எதிரில் கிழக்குப் பார்த்து


கடைசியர்கள்

 

 முத்துக்குமார், தேனுக்குள் விழுந்து, இறக்கை நனைந்து தவிக்கும் வண்டு போலவே கிடந்தான். சுருட்டி வைக்கப்பட்ட போர்வைத் துணி போல், உடம்பு முழுவதையும் சுற்றிக்கொண்டு உருளை வடிவமாக கட்டிலில் கிடந்தான். இவ்வளவுக்கும் கொட்டும் பனிக்காலத்தில் கூட, மின் வி சிறியின் சுழற்சிக்கு கீழே, முடிச்சவிழ்ந்த லுங்கியோடு திறந்தவெளி மார்போடு, கைகால்களை விரித்துப் போட்டு மல்லாக்க கிடப்பவன். மின்காற்று வீச்சில், நாற்றங்கால் போன்ற தலைமுடிக் கற்றைகளும், மார்பில் பதியமான மென்முடிகளும் பனித்திவலைகளோடு அசைந்தாடுவதில் சுகம் காண்பவன். சொந்த அம்மாவை விட,


முதிர் கன்னி

 

 “எழுந்திருங்க அப்பா…” இனிப்பு வகைகளை உள்ளடக்கிய பொன் நிற அட்டைப் பேழையை, அருகேயுள்ள தொலைக்காட்சிப் பெட்டிமேல் வைத்துவிட்டு, கிதா, ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த தந்தை அருணாசலத்தை, அதட்டல் பாவலாவில் கூவி, கையை பிடித்திழுத்தாள். வாசிப்பைக் கலைக்கும் எவரையும் கடுகடுப்பாய் பார்ப்பவர் அப்பாக்காரர். இப்போது, அந்தக் கலைப்பை ஏற்படுத்தியவள், அந்த வாசிப்பைவிடச் சுவையான மகள் என்பதால், முகத்தைச் சுருக்க வைத்து, உதடுகளை துடிக்க விட்ட அந்தக் கடுகடுப்பு, வாய் கொள்ளாச் சிரிப்பாய், மாறியது. அந்தச் சமயம்


முகம் தெரியா மனுசி

 

 தண்டோராக்காரன், தான் செல்வதற்கு, அந்த குக்கிராம குடிசை மண்டிக்கு தகுதியில்லை என்று கருதியதுபோல், ஊருக்கு புறம்பாக உள்ள மயானத்தில் நின்று நெளித்தபடி, டும் டும் ஒலிகளோடு, திருவாங்கூர் சமஸ்தான அரச அறிவிப்பை வெளியிட்டான். “ஸ்ரீ உத்திரம் திருநாள் மகாராஜா திருமனஸ் அவர்கள், ஸ்ரீ பத்மநாபதாச வஞ்சிபால மார்த்தாண்ட வர்மா குலசேகர கிரீடபதி, மன்னை சுல்தான் மகாராஜா, ராஜ்ய பாக்கியோதைய ராமராஜா பகதூர்ஷம் ஷெர்ஜங் மகராஜா, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத் தேர்விழாவை தரிசிக்க நாளை மறுநாள் வந்து, ரெண்டு


ஸுசீலா எம்.ஏ.

 

 நமது கதை 1941-ஆம் வருஷத்தில் ஆரம்பமாகிறது. இது கதை என்று வாசகர்களை நம்பச் செய்வதற்கு எனக்கு வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. இந்த நாளில் நிஜத்தை நிஜம் என்று நம்பச் செய்வதே கடினமாயிருக்கிறது. கதையை, கதை என்று நம்பச் செய்வது அதை விடக் கஷ்டமானதல்லவா? ஸ்ரீமதி ஸுசீலா அந்த 1941-ம் வருஷத்திலேதான் எம்.ஏ. பரீட்சையில் புகழுடன் தேறினாள். 1939-ம் ஆண்டில் ஸுசீலாவுக்கு பி.ஏ. பட்டம் கிடைத்து விட்டது. அத்துடன் திருப்தியடையாமல் மேலே எம்.ஏ. பரீட்சைக்குப் படிக்கத் தீர்மானித்தாள்.


மாஸ்டர் மெதுவடை

 

 அவருடைய உண்மைப் பெயர் அப்பாசாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம், “மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி….” என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது ஷூட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின் பூர்வாங்க விளம்பரங்களிலும் அதே பெயர் தான் காணப்பட்டது. ஒரு விளம்பரம் மெதுவடை சுடப்படுகிறது!” என்று மணிபிரவாள சிலேடையில் ஆரம்பமாயிற்று. இந்த சிலேடைக்கு வியாக்யானம் தேவை என்று தோன்றுகிறது. சாதாரணமாய், இங்கிலீஷில் டாக்கி படம் பிடிப்பதைக் குறிப்பிடும்போது, ‘ஷூட்


பால ஜோசியர்

 

 1 பிரசித்தி பெற்ற பால ஜோசியம் பட்டாபிராமன் பி.ஏ.யைப் பற்றி அநேகர் கேள்விப்பட்டிருக்கலாம். அவனுடைய ஜோசிய விளம்பரங்களையும் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். பட்டாபிராமன் நல்ல புத்திசாலி; குணவான்; யோக்யன்; சுறுசுறுப்புள்ளவன்; யாருக்கும் கெடுதல் நினைக்காதவன்; எல்லாரும் ஒன்றாயிருக்க வேண்டுமென்று நினைக்கப் பட்டவன். இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். எனக்குத் தெரிவதற்குக் காரணம் இருக்கிறது. ஏனெனில் அந்தப் பிரசித்தி பெற்ற பாலஜோசியம் பட்டாபிராமன் என்பது அடியேன் தான்! இந்தக் காலத்தில் சில பேர் “ஜோசியர்” என்று பெயர்