கதைத்தொகுப்பு: ராணி

6 கதைகள் கிடைத்துள்ளன.

உறுத்தல்

 

 நல்ல இருட்டு. காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் ரொம்ப தூரத்துக்கு நெடுஞ்சாலை தெரிந்தது. எதிரே அவ்வப்போது தொடர்ந்து வந்த லாரிகளின் எதிர் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த வேண்டி, விளக்குகளை அணைத்து அணைத்து ஓட்டுவது குமரனுக்குப் பெரும் துன்பமாய் இருந்தது. சில லாரிக்காரர்கள் தங்கள் ஹெட்லைட்டுகளை அணைக்க மறுத்ததால், வேகத்தைக் குறைத்து, சாலை சரியாக இருக்கிறதா என்று கவனித்ததில் காரின் வேகத்தைச் சீராய் எண்பது கிலோ மீட்டரில் வைப்பது கஷ்டமாக இருந்தது. மணிக்கட்டைத் திருப்பிக் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் குமரன். பதினொன்று. எட்டு


வீட்டுப்புழுவல்ல கூட்டுப்புழுவல்ல…!

 

 காலையில் எழும்போதே நல்ல தலைவலி. ‘இன்று வேலைகள் அதிகம். எப்படி சமாளிக்கப் போகிறோம்?’ என்ற அயர்ச்சி வந்தது. “என்ன ராதா… எழுந்திரிக்கலையா?” என்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கேட்டான் விக்ரம். “இல்ல! இன்னைக்கு என்னவோ ஒரே தலைவலியா இருக்கு. ஆனா, ஆபீஸ்ல இன்னைக்கு ஒரு ‘பிளானை’ முடிச்சாகμம். நேத்தே சொல்லிட்டாங்க.” விக்ரம் ஒரு ‘எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர்’. ஒரு பெரிய ‘கம்பெனி’யில் வேலை செல்கிறான். இரண்டு தங்கைகளுடன் பிறந்தவன். ராதா அவன் மனைவி. அவள் ஒரு ‘ஆர்க்கிடெக்ட்’. கட்டுமான


இடைப் பிறவி

 

 பதினைந்து வயது நிதீஷின் மனம் நிலை கொள்ளாமல் அலைந்தது. தான் சாதாரணமாக இல்லை என்று அவனுக்குப்புரிந்தது. “என்ன தவறு என்னிடம்? ஏன் என் மனம் பெண்களின் அருகாமையை நாடுகிறது? அவர்களின் நடுவே இருப்பது தான் பாதுகாப்பாக இருப்பது போலத் தோன்றுகிறது. அவ்வளவு ஏன்? அவர்களை எல்லா விதத்திலும் பின் பற்ற உத்வேகம் பிறக்கிறது. ஏன் அம்மா என்னை ஆணென்று சொல்கிறாள்? உடற் கூறுகளின் படி பார்த்தால் நான் கண்டிப்பாக ஆண் தான். ஆனால் என் மனம் அதை


நெஞ்சத்திலே….

 

 அந்தி மாலை நேரம் ஹோட்டல் லாபியில் நின்றபடி கைகடிகாரத்தையும் வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ரலேகா. “ஹாய் சித்து…” என்றபடி வந்தான் மிதுன். “ஹாய்…” என்று பதிலுக்கு உரைத்தவளின் பதிலில் கொஞ்சம் கூட சுரத்தே இல்லை. “என்ன டியர்? ரெண்டு வருஷம் கழித்து பார்த்துக்கொள்ளும் லவர்ஸ் மாதிரி பேசமாட்டேன்ற?” என புன்னகைத்தான். “சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்….” என்றவள் உள்ளே திரும்பி நடக்க மிதுன் யோசனையுடன் அவளை பின் தொடர்ந்தான். சித்ரலேகா ஒரு டேபிள் அருகில் சென்று நின்றாள். “மிதுன் மீட் மிஸ்டர்.


கரிசல் காட்டு காதல் கதைகள்! – 7

 

 வில்லாயிரத்துக்கு அப்படி ஒரு தங்க குணம். யார் மனசும் நோகடிக்கப் பேச மாட்டாரு. அவருக்கு ஒரே மகன், தருமராசு. அவனும் அவங்கய்யா மாதிரியே அம்புட்டுக்கு நல்லவன். அவுகளுக்கு சொத்து, பத்துனு ஊரைச் சுத்தி நாலு திக்கமும் நஞ்சயும், பிஞ்ச யும் அப்படி கெடக்கு. அது போதாதுனு தருமராசு படிச்சி சர்க்காரு வேலை வேற பாக்கான். ஆளும் அழகான ஆளு. அந்த ஊருல இருக்கற கொமரி பொண்ணுகள்லாம் அவனுக்கு வாக்குப்படணுமின்னு கோயில், கோயிலா படி ஏறி கும்புட்டு வராக.


கனவு காணும் மனங்கள்

 

 பேருந்திலிருந்து நான் இறங்கியபோதே டீ கடைக்காரர் பார்த்து விட்டார். ”வாங்க தம்பி…டீ குடிச்சிட்டு போங்க..”என்றார். இதைக் கேட்டதும் மகிழ்ந்தேன். குறுக்காய் கிடந்த பலகையில் அமர்ந்தேன். முண்டா பனியனுடன் அமர்ந்திருந்த ராமசாமி.”அட இது யாரு…நம்ப கோவாலு மகன் தானே நீ?”என்றார். ”ஆமா..” ”எப்படி இருக்கே..பட்டணத்துல படக் கம்பெனியில வேல செய்யறதா சொன்னாங்க..அந்த செல்வராசு தானே..’ ”ஆமா..இப்ப நான் என் பெயரை சிட்டி ராஜான்னு மாத்திட்டேன்..” ”பெயரை மாத்திட்டியா…செல்வராசுங்கறது எவ்வளவு நல்ல பேரு..ஆமாம் நம்ம நமீதா எப்படியிருக்கு…?” முண்டா ராமசாமியின்