கதைத்தொகுப்பு: தென்றல்

55 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் என்பது எதுவரை?

 

 மூர்த்தி அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து நிறுத்தினான். சில நிமிடங்கள் அப்படியே படுக்கையில் கிடந்தான். விளையாட்டாக அமெரிக்கா வந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஏனே அம்மாவின் ஞாபகம் வந்தது. வெகு விரைவில் ஒரு முறை சென்று வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். எழுந்து சென்று காலைக்கடன்களை முடித்து அலுவலகத்திற்குக் கிளம்பினான். மூர்த்தி 5′ 6” உயரம், மாநிறம், தெளிந்த முகம், பார்த்தவுடன் யாருக்கும் பிடித்துப் போகும் குணம் உடையவன். அலுவலகத்திற்குச் செல்லும் எண்ணமே அவனுக்குத்


தானம்

 

 ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு ராஜ்ய பாரம் செய்து கொண்டிருந்தார் சூர்ய பகவான். கீழே ஆளுக்கு ஆள் கட்டளைகளும் பதில்களுமாக ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. கல்யாண வீட்டில் இருக்கும் கலாட்டா சந்தடி கர்மம் நடக்கும் வீட்டிலும் இருக்குமோ? ஆனால் இது கல்யாணக் கருமம் தானே? யாருக்கும் துக்கம் துவண்டு போகவில்லை. ”தாத்தாவுக்கு அரவிந்த் மேல அலாதி ப்ரியம். அதனால்தான் அவன் வந்திருக்கும்


ரேடியோ

 

 நான் படுமோசமான நிலையில் இருந்தேன். என் விரல்முட்டி எரிந்தது. மைஸ் மகேஷ், என்னைப் புழுவைப்போலப் பார்த்தான். இன்னும் நான் கோலியை முட்டியால் உந்தித் தள்ள வேண்டிய தூரம் கொஞ்சம்கூடக் குறையாமல் இருந்தது. தள்ளிய கோலி என் எரிச்சலைப் பொருட்படுத்தாமல் குழியின் திசைக்குக் கோணலாய் எங்கோ போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் அப்பா என்னைக் கூப்பிட்டார், வீட்டு வாசலில் நின்றபடி. அவர் பார்க்கும் தூரத்திலிருந்து கோலி கண்ணில் படுவது கஷ்டம். கோலி விளையாடுவதைப் பார்த்துவிட்டால் தீர்ந்தேன் நான். அவசரமாய் கை


கர்த்தரின் கருணை

 

 மேரியின் வாழ்க்கை தினக்கூலியில்தான் ஓடுகிறது. ஒரே மகன் ஜான் சுரேஷ்தான் அவள் உயிர்நாடி. ஐந்து வருடங்களுக்கு முன், அவள் அழகில் மயங்கித் திகட்டாத இன்பத்துடன் தொடங்கிய வாழ்வு கசந்தவுடன், கணவன் ஜோசப் சுரேஷ், இன்னொரு பெண்ணின்மேல் மையல் கொண்டு ஓடிவிட்டான். இரண்டு வயது ஜான் மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ தற்கொலை பண்ணியிருப்பாள். அவனுக்காக மட்டுமே வாழ்ந்தாள். கல் உடைத்து சலித்து ஐந்து கிலோ வரை கொடுத்து, கிடைக்கும் கூலிப் பணம் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாகிவிடுகிறது. பண்டிகை நாட்கள்


ஆஹா! என்ன ருசி

 

 டிரிங்… டிரிங்… டெலிபோன் மணி சப்தம். வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டுக் கொண்டி ருந்த சுமதி வேகமாக வந்து எடுத்தாள். ஹலோ… சுமதி சுந்தர் வீடுதானே? ‘அடயாருடா இது தமிழ்ல பேசறது’ சுமதிக்கு ஒரே மகிழ்ச்சி. ”யா எக்ஸாக்ட்லி நீங்க யார் பேசறது?” ”மேடம் நான் இந்தியாவிலேர்ந்து வந்திருக்கேன். ஒங்க பிரதர் சிவராமன்னு மெட்ராசுல பாங்க்ல இருக்காரே அவர் கொஞ்சம் சாமான் கொடுத்து இருக்கார். நாங்க இப்ப எங்க டாட்டர் ரேவதி பாஸ்கர்னு இங்கே இருக்கா.. உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்…


தூது

 

 பிள்ளையார்பட்டி கோயில் கல்யாண மண்டபம் களைகட்டி இருந்தது. கெளரி அக்காவுக்கும் சங்கர் மாமாவுக்கும் கல்யாணம். தாலி கட்டுவதற்கு அரை மணி நேரம் இருந்தபோது அந்தச் செய்தி வந்தது. சங்கர் மாமாவின் சித்தப்பா மும்பாயில் இறந்துவிட்டார். அவசர அவசரமாக கெளரி அக்காவின் அப்பாவிடம் சங்கர் மாமாவின் அப்பா ஏதோ சொல்ல முன்னவரின் முகம் வாடியது. போட்டது போட்டபடி கிடக்க சங்கர் மாமாவின் குடும்பத்தினர் மும்பாய் செல்ல ஏற்பாடுகள் செய்யத் துவங்கினார். கெளரி அக்கா அழுதாள். பெரியம்மா சமாதானம் செய்தாள்.


அம்மா!

 

 மணி எட்டு. இன்னும் அரைமணி நேரத்திற்குள் பெருக்கித் துடைத்து முடிக்க வேண்டும். கமலத்தின் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. 9.30 மணிக்கு விழா ஆரம்பம். 8.45க்கெல்லாம் ஸ்வர்ணா வந்து விடுவதாகச் சொல்லியிருந்தாள். லயன்ஸ் கிளப் தலைவி ஸ்வர்ணா. அவளுடைய குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் ஆயாவின் சிபாரிசின் மூலம்தான் இந்த லயன்ஸ் கிளப் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள் கமலம். ஸ்வர்ணாவிற்குக் கமலத்தைப் மற்றபடி எதுவும் தெரியாது. வேகம் வேகமாகப் பெருக்கி முடித்த கமலம், டெட்டால் கலந்த தண்ணீர் வாளியுடனும்


க்ரீன் கார்டு

 

 “பயணிகளின் கவனத்திற்கு, இன்னும் பதினைந்து நிமிடங்களில் விமானம் சென்னை விமான நிலையத்தைச் சென்று சேரும்” – பைலட்டின் அறிவிப்பு என் உடலைச் சிலிர்க்க வைத்தது. ஆயிரம்தான் தேசம் தேசமாகப் பறந்தாலும் நம் தாய்மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற எண்ணமே என்னைச் சிறு குழந்தை போலத் துள்ளவைத்துவிடும். ‘சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போலாகுமா?’ சென்னை நகரம் நான் போன வருடம் விட்டுச் சென்றபடியே இருந்தது. உறவினர்கள், அண்டை அயலாரின் விசாரிப்புகள், வேலைக்காரப் பெண்மணியின் உதவியுடன் வீட்டை


சாருமதியின் தீபாவளி

 

 இன்று தீபாவளி! வாசலெங்கும் வண்ணக்கோலங்கள். தெருமுனை வரையிலும் சரவெடி அமர்க்களம். “எத்தனை வேலை இருந்தாலும் கவலை இல்லை. எப்போதும் புத்தகமும் கையும்தானா?” அம்மாவின் குரல். “சாரூ… சமையலில் உதவக் கூடாதா? நல்ல நாளுன்னு கிடையாதா, குளிச்சிட்டுப் புதுச் சேலையை எடுத்துக் கட்டும்மா” பாடல் தொடர்ந்தது. தொலைக்காட்சியும் தன் பங்கிற்கு புதுப்படப் பாடல்களை அலறிக்கொண்டிருந்தது! ஆனாலும் தன்னைச் சுற்றி எதுவுமே நடக்காதது போல, பிரத்யேக உலகில் சந்தோஷமாய் சஞ்சரிக்கும் சாருமதி! மீராவோ, மேத்தாவோ – கவிதைகளில் நுழைந்து விட்டால்


எதிர்பார்ப்புகள்

 

 நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல் கிடந்தது. அன்று மதியம் கல்யாண சத்திரத்திற்குக் கிளம்பு கிறார்கள். இரவு மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் கல்யாணம். வீட்டில் உற்வினர்கள் கூட்டமாய் கூடியிருந்தார்கள். ஆனால் நிவேதாவின் முகத்தில் சந்தோஷமே இல்லை. மாறாக மிகுந்த கவலையுடன் இருந்தாள். இந்தக் கல்யாணத்தில் அவளுக்குத் துளியும் இஷ்டமேயில்லை. அவள் அப்பா அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையைத்தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன் பார்க்க நன்றாகத்தான்