கதைத்தொகுப்பு: தென்றல்

55 கதைகள் கிடைத்துள்ளன.

தீபாவளி?

 

 டிரிங்…டிரிங்.. தொலைபேசி அந்த நேரத்தில் சிவாவுக்குத் தொல்லை பேசியாகத் தான் தோன்றியது. மணி எட்டாகப் போகிறது. இன்னும் 15 நிமிடங்களில் அவன் அலுவலகத்தில் இருக்க வேண்டும். 8.30 மணிக்கு conference call. அவன் ரிஸீவரை எடுக்கவேயில்லை. அது அடித்துப் பார்த்துப் பின் நின்று போயிற்று. கார் சாவியை எடுத்துக் கொண்டு பறந்தான். ‘சீ இதென்ன வாழ்க்கை ஒரு நாளைப்போல பறந்து பறந்து…? ஹைவேயில் போய்க் கொண்டிருந்த சிவாவின் மனத்தில் ஓடிய கேள்வி இது. அடுத்த மாதம் தீபாவளி.


தீபாவளிப் பரிசு

 

 இன்று தீபாவளி. எனக்கு நிலை கொள்ளாத தவிப்பு. அமெரிக்காவில் வாழ்க்கை தொடங்கி இது பதினெட்டாம் தீபாவளி. வருடந்தோறும் மூச்சுக் காட்டாமல் வந்து போகும் தீபாவளிக்கு இந்த வருடம் ஒரு விசேஷமுண்டு. பெண்ணுக்குத் திருமணம் நெருங்குகிறதென்றால் தாய்க்கு மகிழ்ச்சி இருக்காதா? ராகேஷ், ஜானகியின் நண்பன். இன்று டின்னருக்கு வருகிறான். ”நாங்கள் இவனை மாப்பிள்ளையாக்கிக் கொள்ளப் போகிறோம். இது நாங்கள் உனக்குக் கொடுக்கும் தீபாவளிப் பரிசு” இப்படிச் சொன்னால் ஜானகி ஆச்சரியப்படுவாளா, வெட்கத்தில் சிணுங்குவாளா? என் மனம் தத்தளித்தது. இம்மாதிரி


மறைமுகம்

 

 அன்று ஞாயிற்றுக்கிழமை. நிதானமாக எழுந்து, குளித்து, டிபனை முடித்து, ஈசிசேரில் அமர்ந்து ஒரு வாரப்பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தார் கேசவன். 52 வயதாகும் கேசவன் ஒரு தனியார் கம்பெனியில் நல்ல பதவியில் இருப்பவர். மனைவி பாக்யம் உள்ளே சமலறையில் அடுத்த வேளை உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். முன்நெற்றியில் முடி நரைத்து, வயதுக்கு அழகு சேர்க்கப் பார்க்க நன்றாகவே இருந்தாள். படித்துக்கொண்டே இருந்தவர் திடீரென்று “கலி முத்திடுச்சு பாக்யம், என்னவெல்லாம் கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க பாத்தியா?” என்றார். இதைக் கேட்ட


பரம்பரைச் சொத்து

 

 காதில் ஈயமெனப் பாய்ந்த கடிகாரத்தின் உசுப்பலை முனகியவாறே நிறுத்தினாள், பாரதி. இரண்டு நாட்களாக, குளிரின் காரணமாக விடிகாலையில் எழுந்திருக்க முடிவதில்லை. சாதகமும் செய்ய முடியவில்லை. இன்று எழுந்தே ஆகவேண்டும். ‘ஜில்’ என வந்தக் குழாய் நீரைத் திட்டிக்கொண்டே முகத்தை அலம்பினாள். அடுப்படியிலிருந்து டிக்காக்ஷன் வாசனை மூக்கைத் துளைத்தது. அந்தக் குளிரில் அம்மா சுடச்சுடத் தந்த நுறைத் ததும்பிய காப்பி தொண்டைக்கு இதமாக இருந்தது. தாமதிக்காமல் குளித்துவிட்டுக் கிளம்பினாள். “வரேம்மா”! பாட்டுப் புத்தகங்களை எடுத்துக் கொண்டாள். ஸ்கூட்டியில் சாவியை


லே ஆஃப்

 

 சதீஷ் வழக்கம் போல் சீக்கிரம் எழுந்து ஆபீசுக்குத்தயாரானான். முதல் நாள் ராத்திரி சமைத்தவை, குளிர்பெட்டியில், தனித்தனி மைக்ரோவேவ் பாக்சில் தயாராக காத்துக் கொண்டிருந்தன. ஆம், ப்ரீமான்டிலிருந்து காலை சானோசே போகவேண்டும். மதியம், சாப்பாட்டிற் காக வீட்டிற்கு வரவா முடியும்? வந்தால்தான் மனைவி இருக்கிறாளா சூடான சமையல் எதிர்பார்க்க? அவளும் தான் ஒரு பிரபலமான கம்பெனியில் வேலை பார்க்கிறாளே! கார் பூல் இருப்பதால் சவுகரியம். ஆனால் இவள் சீக்கிரம் எழுந்தால் தானே! “என்ன லாவூ, எழுந்து ரெடியாகு. எப்படியும்


இரக்கம்

 

 அன்று ஞாயிற்றுக்கிழமை அலுவலக விடுமுறை. பகல் உணவிற்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும் போல் இருந்தது. ஒரு வாரமாகவே ஆபீஸில் வேலை அதிகம். வருடாந்திர கணக்கு முடிவு. கம்ப்யூட்டரின் முன்னே மணிக்கணக்காக உட் கார்ந்து இருந்தது கண்ணில் எப்போதும் பூச்சி பறக்கின்ற உணர்வு. கூடவே முதுகு வலியும். மனைவி வேறு பிறந்த வீடு போயிருந்தாள். இவ்வளவு வேலைகளுக்கு இடையே ஆஸ்பித்திரி போகவேண்டியது ஆயிற்று. என்னுடைய நெருங்கிய நண்பன் மூர்த்தியின் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. தலைவலி


பாவம் பரந்தாமன்

 

 பரந்தாமனின் பைக்குள் இருந்த இரண்டு ரூபாய் அவரைப் பரபரக்க வைத்தது. வெகு நாளாகவே அவருக்குத் தெருமுனை ஐயர் கடையில் சாயங்காலம் விற்கும் வடையைச் சுடச்சுட வாங்கிச் சாப்பிட ஆசை. யாருக்கும் தெரியாமல் கிளம்பிவிட்டார். மருமகளுக்குத் தெரிந்தால் வீடே அமளிதுமளிப்படும். அவள் கிடக்கட்டும், தான் தூக்கி வளர்த்த தன் பையன் நாராயணனுமல்லவா இப்படி மாறிப்போய் விட்டான். எல்லாம் தலையணை மந்திரத்தின் வேலை. உப்புச் சப்பில்லாத விஷயத்துக்கு என்ன பாடு படுத்தினான் அவன்! “வயசான காலத்தில ஏம்பா இப்படிப் படுத்தறேள்?


படிக்காத குதிரை!

 

 ஸ்கூட்டரில் நானும் நண்பனும் போய்க் கொண்டிருக்கிறோம். வண்டி, கிண்டி குதிரைகள் ஆஸ்பத்திரியைத் தாண்டியது. மொழுமொழுவென்று, ஆரோக்கியமான பளபளப்புடன் வரிசையாகக் குதிரைகள் தார்ச்சாலையில் குளம்பொலி கிளப்பித் தாளம் தப்பாமல் நடைபயின்று சென்றன. ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று திரும்புகிறார்கள். பாரவண்டிக் குதிரையா! பந்தயக் குதிரையாயிற்றே! உயரமான அரபுக் குதிரை. ஒவ்வொன்றின் முதுகே ஒரு மனிதனின் சராசரி உயரத்துக்கும் மேல் இருக்கும். கண்டு கண்டாக முறுக்கேறித் திமிறும் தசைகள் புடைத்துத் தெறிக்கும்படியான கால் அசைவு. சீராக வெட்டிவிடப்பட்ட பிடரி மயிரும், வாலும்.


தீ

 

 (இந்தக் கதை கணையாழியில் வெளியாகி 1990ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. டெல்லியைக் கதைக்களனாகக் கொண்டது. இந்திரா காந்தி அம்மையார் கொலை செய்யப்பட்ட அன்று நடைபெறும் ஒரு சம்பவத்தைச் சித்தரிப்பது. அதிலிருந்து ஒரு பகுதி…) சாதாரண விஷயமானால் பூனம் இந்நேரத்துக்கு இங்கு வரமாட்டாள். நிஷாவிடம் டெலக்ஸ் வேகத்தில் பேசிக்கொண்டிருப்பாள். பொருள்: மாமியார் கொடுமை – பாகம் 1466. முதல் நாள் மாலை 5 மணியிலிருந்து இன்று காலை 10 மணிக்கு ஆபீஸுக்குப்


காலநதி

 

 “இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து கொள்ளப்படாதவளாயும் என்னிலிருந்து வேறுபட்டவளாயும் காண்பித்துக் கொள்வது தொடரும்.” இளம்பதின்ம வயது (‘டீனேஜ்’) மகளுடனான சிக்கலான உறவு பற்றி ஒரு தாய் சொல்வதாக எனது சிறுகதையில் இடம் பெறும் வரிகள் இவை. 1998-2003 காலகட்டத்தில், தாய்-மகள் உறவு பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. சிறுகதைகள் மட்டுமல்ல. 2001-இல் எழுதிய “இக்கரையில்…” நாவல் கூடப் பல