Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைத்தொகுப்பு: தினமலர்

449 கதைகள் கிடைத்துள்ளன.

நல்ல இடத்து சம்மந்தம்

 

 நந்தினி கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். வயலட் நிற ஷிபான் புடவை, அதில் சின்னச் சின்ன வெள்ளி நட்சத்திரங்கள். அதே கலர் ரவிக்கை. ஒற்றை முத்து தோடுகள். முத்து வளை. கழுத்தில் மூன்று முத்துக்கள். வெள்ளை கைப்பை வெள்ளை குதிகால உயர்ந்த ஷூ. வில்லாக இருந்த மெல்லிய புருவங்களின் கீழே வயலட் ஐ ஷேடோவை மெல்ல தீற்றினாள், ஐ லைனர், ஆழ்ந்த நிற லிப்ஸ்டிக், அதே நிற பொட்டு. திருப்தியுடன் தன்னை முழுமையாக கண்ணாடியில் ஒரு முறை


மாற்றம்

 

 ” ஏய்.. பூஜா,, எழுந்திருடி.. மணி ஏழாகுது.. எருமை மாடு மாதிரி தூங்கிகிட்டிருக்கா….” கத்திவிட்டு கிச்சனுக்குள் வருவதற்குள் பால் பொங்கி வழிந்தது. ” என்னங்க வண்டியை துடைக்க ஆரம்பிச்சிட்டா அதிலேயே உட்காந்துவிடுவிங்களே…?” அந்த பிசாசை எழுப்பி குளிக்க வைங்க. ஹாட் பேக்கை பைக்கில் மாட்டி கொண்ட தினேஷ், ” ரேவதி எட்டாயிடுச்சி.. நான் கிளம்பறேன்.. ஈவ்னிங் அம்மா வருவாங்க ஏதாவது வீட்டுக்கு வேணும்னா போன் பண்ணு..” பூஜாவிற்கும் , தனக்கும் லஞ்ச் பேக்கை ரெடி பண்ணி, கிச்சனை


கண் திறந்தது

 

 ” ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு… இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம் கலக்கணும்…..” அவள் கையிலிருந்து சம்மட்டியை வேண்டுமென்றே உரசியபடி பிடுங்கி சலித்த மணலை அள்ளி கொட்டிவிட்டு பின்னால் நின்று அவள் இடுப்பை வெறித்து பார்த்து கொண்டிருந்த மேஸ்திரி நல்லக்கண்ணுவின் மீது ஆத்திரமாய் வந்தது பொன்னிக்கு. ” பேருதான் நல்லக்கண்ணு… பார்வை எல்லாம் நொள்ளை’ என மனதுக்குள் முனகிக்கொண்டாள். ச்சே.. கட்டினவன் ஒழுங்கா இல்லாம குடிச்சிட்டு திரியறதால வேலைக்குன்னு வந்து


காதல்

 

 தஞ்சாவூரில் உள்ள ஒரு மருந்து விநியோகநிறுவனத்தில் வேலைசெய்வதால் என்னுடைய முக்கியப்பணியே ஊரில் உள்ள அனைத்து மருந்து கடைகளுக்கும் சென்று ஆர்டர் எடுப்பதுதான். அன்று வழக்கம்போல் நான் அந்த மருந்துக்கடைக்குச் சென்றபோது வாசுதேவன் என்னைப்பார்த்து புன்னகைத்துவிட்டுக் கிளம்பினார். “என்ன இந்த ஆளு…ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கடையில மருந்து வாங்கிட்டு திரியிறாரு? எல்லா கடையிலயும் கடன் சொல்லிட்டுப் போறாரோ?” என்று நான் சாதாரணமாகத்தான் கேட்டேன். “டேய் ராமமூர்த்தி…உடம்பு வலியால ராத்திரிஎல்லாம் தூங்கமுடியலை.நாங்க வலிதாங்காம கத்திகிட்டு இருக்குறதால மத்தவங்களுக்கும் தூக்கம் கெடுது.என்னால அடிக்கடி


அம்மாவுக்காக…

 

 ராஜூவுக்கு வியப்பாக இருந்தது. மேனேஜர் எதற்காக, தன்னை கூப்பிட்டு இருப்பார். வேலைக்குச் சேர்ந்து, ஒரு மாதம் தான் ஆகியிருக்கும் நிலையில், வேறு யாரிடமும் இல்லாத அளவுக்கு, தன்னிடம் மட்டும் அவர் தனியாக அக்கறை எடுத்துக் கொள்வதாக தோன்றியது. பல முறை, அவனே அதை கவனித்தும் இருக்கிறான். உடன் பணிபுரிபவர்கள் கூட, சில முறை அவனிடம் கேட்டு இருக்கின்றனர். ஆனால், ராஜூ பதில் சொன்னதில்லை. அது, அவனுக்கும் தெரியாது. ஒருவித குழப்பத்துடன் லேசாக கதவைத் திறந்தான். கண்ணாடிக் கதவு


கமலியின் கதை!

 

 காலை நேர பரபரப்பில் இருந்தேன். ஒரு பக்கத்து அடுப்பில், கூட்டுக்கு தாளிப்பு, அடுத்ததில், அம்முவுக்காக நாலு அப்பளம் பொரிக்க வைத்த எண்ணெய். இரண்டிலும், கவனம் இருந்தாலும், மனம் மட்டும், பத்திரிக்கையில் படித்த ஒரு விஷயத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. “உங்கள் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்!’ என்ற தலைப்பில், அதில் இருந்த விஷயங்கள் மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாகயிருந்தன. சிறுமிகளுக்கு ஆபாசப் படங்களை, “டிவி’யில் போட்டுக் காட்டி, பின், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஆசிரியர், ரெட்டை சடை


பாலத்தை உடைத்து விடு!

 

 புழுதி கிளப்பியபடி வந்து நின்றது, 11.00 மணி பேருந்து. பலரும் இறங்கினர். சண்முகமும் இறங்கினான். 28 வயது; முதிர்ந்த முகம். முன் தலையில் வழுக்கை விழத் துவங்கி இருந்தது. தோளில் கையகல துண்டு போட்டிருந்தான். வாயில் பப்பிள்கம்மோ, என்னமோ மென்ற வண்ணம் இருந்தான். முன்பு பாக்கு போடுவான். இப்போது நிறுத்தியிருக்கிறானோ என்னவோ. பஸ்சை விட்டு இறங்கியதும், தலை கவிழ்ந்தபடி, வீடு நோக்கி நடந்தான். “”சண்முகம்…” என்ற குரல், அவனை தடுத்து நிறுத்தியது. நிமிர்ந்தான். குணநாதன் சார். அசட்டு


பேரம்

 

 மதுரை அரசு பொது மருத்துவமனை எதிரிலுள்ள டாக்சி ஸ்டாண்ட். நான்கு டாக்சிகள் வரிசையாக நின்றன. கடைசி டாக்சி அருகே, மணியும், ஜெகதீசும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். “”உனக்கென்னடா, ஜாலியா துபாயில் வேலை பார்க்கிறே… நான் பாரு தினமும் பொணங்களை ஏத்திக்கிட்டு போய் பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்கேன்,” என்றான் மணி. “”இதுவும் வேலைதானடா, மாப்ளே… நான் வெளிநாட்டுல வேலை பார்க்கறேன்னா ஏதோ ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கேன்னு நினைச்சிடாதே. காலையில் ஐந்து மணிக்கு எந்திருச்சா, ராத்திரி பதினொரு மணிக்குத்தான் படுக்க


பயணம்

 

 பிருந்தா மாமியின் முதல் ஆண்டு திதி, மூன்று நாட்கள் நடந்து முடிந்த பத்தாம் நாள், பிருந்தாவின் கணவர் மகாதேவன் காணாமல் போனார். சென்னையின் புறநகர் பகுதியொன்றின், தனி வீட்டில் தன் மூத்த மகன் ரவியுடன் இருந்தார் மகாதேவன். ரவி, ரவியின் மனைவி உஷா இருவருமே, வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுக்கு, 10 வயதில் ஒரு மகன், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். மகாதேவனின் இரண்டாவது மகன் குமார், மும்பையில் வேலையாக இருந்தான். அவன் மனைவி இந்துவும், வேலைக்குச் செல்லும் பெண்ணே.


குரு தெய்வம்!

 

 பத்து நாட்கள் ஜுரத்துல படுத்து, ஸ்கூலுக்கு லீவு போட்டிருந்த ஆனந்தி, அன்று தான் அரைப் பரிட்சை ஆரம்பம் என்பதால், பள்ளிக்கு வந்திருந்தாள். “”ஆனந்தி… தமிழ் பரிட்சைக்கு நல்லா படிச்சுட்டீயா? நம்ப சுகுணா இந்த முறை உன்னை பின்னுக்கு தள்ளி, பர்ஸ்ட் ராங்க் எடுத்துடணும்ங்கிறதில் குறியா இருக்கா. நீயும் உடம்பு சரியில்லாம பத்து நாளா ஸ்கூலுக்கு வரலை. எப்படி படிச்சி இருக்கே?” சகதோழி கேட்டாள். “”ம்… நல்லா படிச்சிருக்கேன், ” சொன்னவள் மனதில் பயம் ஏற்பட்டது. “இவ்வளவு நாள்