கதைத்தொகுப்பு: தினமலர்

454 கதைகள் கிடைத்துள்ளன.

பூவுலகம் போ !

 

 முன்னொரு காலத்தில் இந்திரத்யும்னன் என்ற அரசன் இருந்தான். அவன் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். முதுமை அடைந்த அவன் இறந்து போனான். சொர்க்கத்திற்கு வந்த அவனை இந்திரன் வரவேற்றான். “”பூவுலகில் உன் புகழ் பேசப்படும்வரை இங்கே தங்கி இருக்கலாம்!” என்றான் இந்திரன். எண்ணற்ற ஆண்டுகள் சென்றன. அவனை அழைத்த இந்திரன், “”பூவுலகில் எங்கும் உன் புகழ் பேசப்படுவதாக தெரியவில்லை. நீ இனிமேல் இங்கே தங்கியிருக்க முடியாது!” என்றான். அவன் வருந்துவதைப் பார்த்த இந்திரன், “”பூவுலகில் உன் பெயரைப்


பனிக்கட்டி தேவதை !

 

 மிக மிக நீண்ட காலத்துக்கு முன் ஆல்ப்ஸ் மலையின் சாரலில் ஒரு சின்ன நாடு இருந்தது. அது ஓர் பனி படர்ந்த நாடு. அந்த நாட்டை ஆண்டு வந்தான் மன்னன் ஒருவன். அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் அழகே வடிவானவள். அவளுடைய அழகு, உலகம் பூராவும் பேசப்படத் தக்க அழகாக இருந்தது. ஆகவே அவளை எப்படியாவது மணந்து கொள்ள வேண்டும் என்று பன்னாட்டு இளவரசர்களும் போட்டியிட்டனர். எனவே, தன்னை மணக்க வருபவர்களுக்கு அவள் போட்டி


இரட்டை கன்னம் !

 

 ரோட்டோ ஒரு விறகு வெட்டும் தொழிலாளி. மிகவும் நல்லவன். விறகுகளை அதீத லாபத்திற்கு விற்று பணம் சேர்க்க மாட்டான். கிடைத்த லாபம் போதும் என்ற நல்லெண்ணத்தால் வாடிக்கையாளர்களிடம், “நீங்கள் கொடுப்பதை கொடுங்கள்… நான் மகிழ்வோடு வாங்கிக் கொள்கிறேன்…’ என்பான். ஏழைகளை துன்புறுத்த மாட்டான். பாவம்… இத்தனை நற்பண்புடையவனுக்கு ஒரே ஒரு குறை… அவனின் இடது கன்னத்தின் மேல் மிகப் பெரிதாக மற்றுமொரு கன்னம் முளைத்திருக்கும். அது அவனின் முக அழகை வெகுவாக பாதித்தது. “”ஏன் தாத்தா! உனக்கு


ஆபத்து !

 

 ஒருதடவை முல்லா கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே கப்பலில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். கப்பல் பயணிகளில் பெரும்பாலோர் முடிந்தவரை உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லாருமே மது அருந்தியதால் நிலை தடுமாறியிருந்தனர். ஒருவருக்கொருவர் கேலிபேசியும், வேடிக்கைகள் செய்தும், சண்டை சச்சரவுகள் செய்தும் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் சில பயணிகள் முல்லாவைச் சூழ்ந்து கொண்டு கேலியும், கிண்டலும் செய்தனர். “”என்ன முல்லா அவர்களே! கடவுளோடு உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது! உம்முடன் உரையாடும்


தண்ணீர்… தண்ணீர் !

 

 முன்னொரு காலத்தில் துளசிதரன் என்ற பணக்காரர் இருந்தார். அவர் பல நிறுவனங்களின் அதிபர். எவ்வளவோ பேர் அவரிடம் வேலை செய்து வந்தனர். ஆனால், அவர்களது கஷ்ட, நஷ்டங்களைத் தெரிந்து கொள்ளாமல் கசக்கிப் பிழிந்து அவர்களிடம் வேலை வாங்கினார். அவர்களும் வேறு வழியின்றி பொறுமையுடன் வேலை செய்தனர். எருதின் புண்ணைப் பற்றி காக்கை கவலைப்படாமல் கொத்திக் கொண்டுதானே இருக்கும். அப்படித்தான் துளசிதரனும். அவரது மனைவி லட்சுமிக்கும், அவரது மகன் மணியனுக்கும் அவரது இந்த குணம் பிடிக்கவில்லை, இருப்பினும் என்ன


நண்டு மம்மிக்கு ஜே !

 

 முன்னொரு காலத்தில் ஜப்பான் கடற்கரையோரத்தில் ஒரு நண்டு வசித்து வந்தது. பாவம் சில நாட்களாக அதற்கு சரியான ஆகாரம் ஏதும் கிடைக்கவே இல்லை. “நிறைமாத கர்ப்பிணி நான் இப்படி பட்டினிக்கிடந்தால் என் வயிற்றிலுள்ள என் குழந்தைகள் என்ன ஆவது? நானும் இறந்தால் என் அருமை குழந்தைகளும் இறந்து விடுமே!’ என்று கவலையில் மூழ்கியது. அப்போது கீழ்த்தரமான புத்தியுள்ள குரங்கு ஒன்று கையில் செக்கச் செவேல் என்ற ஒரு பழத்தை வைத்து மிகவும் ருசித்து தின்று கொண்டிருந்தது. பாவம்


தன்னை மறந்த கொல்லர்

 

 முன்னொரு காலத்தில் சாந்தப்பன் என்ற கொல்லன் இருந்தான். ஊருக்கு வெளியே அவன் உலைக்களம் இருந்தது. பொறுப்பாகத் தொழில் செய்ததால் அரண்மனை வேலையை அவனிடம் ஒப்படைத்தனர். அவன் வீரர்களுக்கு வாள், வேல், கவசம் போன்றவற்றை செய்துக் கொண்டிருந்தான். அப்போது அந்நாட்டு அரசர் வீரர்கள் சூழ ஆரவாரமாக அந்த வழியாக வந்தார். வேலையிலேயே கவனமாக இருந்த அவன் அரசர் வந்ததை அறியவில்லை. அரசரின் பார்வை தற்செயலாக உலைக்களத்திற்குள் சென்றது. அங்கே ஒருவன் தனக்கு வணக்கம் செய்யாமல் அமர்ந்து இருப்பதைப் பார்த்தார்.


கல்வி தந்த உயர்வு !

 

 சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி என்னும் ஊர், வரலாற்றுப் புகழ்பெற்ற நகரம். அந்நகரத்தைத் தலைநகராகக் கொண்டு, கர்நாடக நாட்டை ஆட்சி புரிந்த மன்னர்கட்குச், “சுந்திரகிரி மன்னர்கள்’ என்று பெயர். அம்மன்னர்களது ஆட்சியை, அவர்களுடைய அழிந்த கோட்டைகளும், அகழியும் நினைவுபடுத்துகின்றன. அவற்றைச் சார்ந்துள்ள மலைக்கு, “சந்திரகிரி’ என்று பெயர். அந்த மலைச்சரிவில் அமைந்த தலைநகரும், சந்திரகிரி என்னும் பெயரையே பெற்றிருந்தது. அந்நகரத்தில், நாகம்மாள் என்னும் பெண்மணி வாழ்ந்து வந்தாள். அப்பெண்மணி ஓர் அந்தணனின் மனைவி. நாகம்மாளின் நல்வினைப் பயனால்,


உதவி

 

 பத்தூர் என்ற ஊரில் ரஞ்சித் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். இவன் பிறருக்கு உதவி செய்வதில் வல்லவன். மிகவும் இரக்க குணம் கொண்டவன். ஒருநாள் அவனுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வந்தது. “புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தால் வளமாகவும், பெருமையாகவும் வாழலாம்!’ என்று நினைத்தான் அவன். நேர்முகத் தேர்விற்குச் செல்வதற்காக நல்ல உடைகளை அணிந்து கொண்டான். நேரத்தோடு செல்ல வேண்டும் என்பதற்காக வேகமாக நடந்தான் ரஞ்சித். வழியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பெண்மணி


பாறை !

 

 சைலாதி முனிவர் சிறுவனாக இருந்தபோது அவர் வீட்டிற்குத் துறவி ஒருவர் வந்து பிச்சை கேட்டார். கேலி செய்ய நினைத்த சைலாதி அந்தத் துறவியின் பிச்சைப் பாத்திரத்தில் ஒரு கல்லைப் போட்டார். உணவுடன் அந்தக் கல்லையும் சாப்பிட்டு விட்டார் துறவி. ஆண்டுகள் உருண்டோடின. துறவி ஆனார் சைலாதி. ஒரு சமயம் அவர் எமலோகத்திற்குச் சென்றார். எமனின் இருக்கைக்குப் பக்கத்தில் ஒரு பெரிய பாறை கிடந்தது. “”எதற்காக இவ்வளவு பெரிய பாறை இங்கே கிடக்கிறது?” என்று கேட்டார் சைலாதி. “”உங்களுக்காகத்தான்