கதைத்தொகுப்பு: தினமலர்

456 கதைகள் கிடைத்துள்ளன.

தேங்காய்ப் பிச்சை!

 

  ஊருக்குள் ஒரு வாடகைக்கார் வந்து நின்றது. மருத்துவமனைக்கு சென்றிருந்த அருணாச்சல வாத்தியார், வீடு திரும்பி விட்டாராம். அவர் காரைவிட்டு இறங்குமுன், நலம் விசாரிக்க ஊரிலுள்ள ஆண்களும், பெண்களும் கூடி விட்டனர். விஷயம் தெரிந்ததும், தெருவிற்குள் ஓடோடி வந்தார் தேங்காய்ப்பிச்சை. “”என்ன விஷயம்?” எதிர்ப்பட்ட பெண்களிடம் கேட்டார். “”மேலத்தெரு அருணாச்சலம் வாத்தியார், ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருக்காராம்.” “”அவருக்கென்ன செஞ்சது?” “”அது தெரியாதா ஒங்களுக்கு?” “”தெரியாதே… நான்தான் சென்னைக்குப் போயிட்டு, முந்தா நாள்தானே வந்தேன்?” “”ஓ… அப்படியா? அவருக்கு வயித்துல


மனசே… மனசே… கதவைத்திற!

 

 அனு, ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்… இந்த வேதனையை சுமக்க மனதிலும், உடலிலும் தெம்பில்லை எனத் தோன்றியது. உண்மையை, நந்துவிடம் சொல்லி விட்டால், நிம்மதியாகவாவது இருக்கலாம் என்ற எண்ணம், அவளை தூண்டியது. மொபைல் போனில், குறுஞ்செய்தியில் வந்த முகவரியை, மீண்டும் சரி பார்த்து, ஆட்டோவை விட்டு இறங்கினாள். எதிரே, நிறைய மரங்கள் சூழ, அந்தக் கட்டடம் உள்ளடங்கி நின்றது… “சிலு சிலு’வென லேசான காற்று, வேப்பம்பூ மணத்தை ஏந்தி வந்து, நாசியில் மோதியது. பக்க வாட்டிலிருந்து, “அனு…


தலைகீழ் வாழ்க்கை!

 

 “”சந்திரன் மாமாவை வரச் சொல்லு ஹரிஷ்…” என்றான் சரவணன், மகனிடம். டூ-வீலரை துடைத்துக் கொண்டிருந்த ஹரிஷ், “”ஏன்?” என்று கேட்டான். சரவணனுக்கு, சுருக்கென கோபம் மூக்கு முனைக்கு வந்தது. சமீப காலமாக ஹரீஷின் போக்கு, சரவணனை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. “”காரணம் சொன்னால் தான் செய்வியோ?” என்று சீறினான். “”ஏன் கோபப்படறீங்க… நானும் இந்த வீட்டைச் சேர்ந்தவன். காரணம் தெரிஞ்சுக்கறதுல என்ன தப்பு?” “”எதிர்த்து பேசாம சொன்னதை செய்டா. இப்பவே குடும்பத் தலைவனாக நினைக்காதே.” “”அடக் கடவுளே… காலங்காத்தால


பாலியல் தொழிலாளி!

 

 “எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்…’ என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி. காவல் துறையில், இடமாற்ற உத்தரவு வாங்குவது, அவ்வளவு சுலபம் இல்லை; அதற்கு, பல லட்ச ரூபாய் செலவாகும் என்று அவளுக்கு தெரியும். மதுரையில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரியும் அவள் கணவன், கை நிறைய சம்பளமும், பை நிறைய, “கிம்பளமும்’ வாங்குபவன். எத்தனை லட்ச ரூபாய் ஆனாலும், தானே கொடுத்து விடுவதாகச் சொல்லி இருந்தான். திருமணமாகி, ஓர் ஆண்டு தனி தனியாக


பிரவீணாவின் மாணவி!

 

 அலுவலக அறை நோக்கி, வேகமாக ஓடி வந்தாள் பிரவீணா. அட்டென்டெண்சில் கையெழுத்துப் போட்டு, மணியைப் பார்த்தாள்; 8:38.”அப்பாடா…’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். கண்களை ஒருமுறை மூடித் திறந்து, புன்னகையுடன் சக ஆசிரியர்களைப் பார்த்து, “குட் மார்னிங்…’ சொன்னாள். அனைத்து ஆசிரியர்களும், 8:40க்குள், கையெழுத்துப் போட வேண்டும். ஒரு நிமிடம் லேட் ஆனாலும், லேட் அட்டென்டெண்சில் தான் கையெழுத்துப் போட வேண்டும். பிறகு, பள்ளி தாளாளரைப் பார்த்துவிட்டு வந்தால் தான், மெயின் அட்டென்டெண்சில் கையெழுத்துப் போட முடியும்.


அப்பா

 

 “டண், டண், டண்…’ என, சேகண்டி மணியடிக்கும் சப்தம். தூக்கிவாரிப் போட விழித்து கொண்டேன். சட்டென்று எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை. வியர்வையில் சட்டை தொப்பலாக நனைந்திருந்தது. லேசான நெல் வாசம். அரையிருட்டில் எதிர் சுவற்றில் கண்ணாடி சட்டம் போட்டு மாட்டியிருந்த அண்ணன் – அண்ணி கல்யாண புகைப்படம், நான் ஊரில் இருப்பதை நினைவுப்படுத்தியது. பத்தாயத்தின் மேல் சாய்ந்தவாறே, என்னையறியாமல் தூங்கி இருக்கிறேன். வாயில் கோடாக வழிந்திருந்த எச்சிலை, கைலியால் துடைத்தபடியே, மெதுவாக எழுந்து நிலைவாசலில் இடித்துக் கொள்ளாதவாறு


தாம்பத்யம்

 

 “வாசலிலே… உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்… வந்தவுடன் உன் ஆசை முகத்தை பார்த்திருப்பேன்…’ என்ற பழைய பாடல், எத்தனையோ ஆயிரம் தம்பதிகளுக்கு, மிக, மிக பொருந்தவே செய்கிறது. ஜெயராமன், தன் செருப்பை கழற்றி ஓரமாக வைக்கவும், ஜானகி வாசல் கதவை திறக்கவும் சரியாகவே இருந்தது. கணவன் உள்ளே செல்ல, மீண்டும் கதவை சாத்தி தாளிட்டு, கணவனை பின் தொடர்ந்தாள் ஜானகி. ஜெயராமன், “உஸ்’ என்றவாறே, ஹாலில், ஒரு நாற்காலியில் அமர, மின் விசிறியை சுழல விட்டாள் ஜானகி.


சுடும் உண்மை சுடாத அன்பு!

 

 இருபது வருடங்கள் கழித்து தன் மகனைப் பார்க்க நிர்மலா சென்னைக்கு வந்திருக்கிறாள். இந்தத் தீர்மானம் அவளால் சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. மிகவும் கொடுமையான அனுபவமாக இந்த பயணம் இருக்கப் போகிறது என்பதை அவள் நன்றாகவே அறிவாள். போகும் இடத்தில் மகனால் ஒரு புழுவை விடக் கேவலமாக அவள் பார்க்கப்படுவாள், நடத்தப்படுவாள் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை. ஆனால் எத்தனையோ காலமாய் அவள் சுமந்து கொண்டிருந்த ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைக்காமல் இறக்க அவளுக்கு மனமில்லை என்பதால் சகல தைரியத்தையும்


தொலைந்து போன உறவுகள்!

 

 ஆச்சரியத்துடன், அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் பிறந்த, 24 ஆண்டுகளில், பார்க்காத ஒரு புது அம்மாவை, இப்போது பார்ப்பது போல் தோன்றியது. அம்மாவின் முகத்தில், இதுவரை பார்த்திராத ஒரு சந்தோஷம், நிறைவு எல்லாம் தெரிந்தது. தந்தை வழி உறவினர்களிடம், அம்மா இன்முகத்தோடு பழகித்தான் பார்த்திருக்கிறாள். மற்ற சித்திகள், பெரியம்மாக்களும், அத்தைகளோடு நல்லுறவு வைத்துக் கொள்ளாத போது, அம்மா மட்டும் எல்லாருடனும் நல்லுறவே வைத்திருந்தாள். அம்மா அடிக்கடி தன் இளமைப் பருவத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறாள். தன்னுடைய


வேஷம்

 

 வீட்டு நடையில் சலீம் காலடி எடுத்து வைக்கும் போது, நடையின் ஓசையின் மூலம் அவனது வருகையை தெரிந்து கொண்ட அவனது உம்மா பாத்திமா, “”டேய் சலீம்… நில் அங்கேயே… வீட்டுக்குள்ளே வராதே… உன்னை பெத்த என் வயித்துல பிரண்டைய வச்சுதான் கட்டணும். ஏண்டா என் வயித்துல வந்து பொறந்து, எங்க உயிரை வாங்குற. எங்களால இந்த தெருவுல தலை நிமிர்ந்து நடக்க முடியலைடா… நீ பண்ணிட்டு வந்திருக்கிற காரியத்துக்கு, நம்ம குடும்பத்தையே ஜமாஅத்தை விட்டு தள்ளி வச்சிருக்கணும்.