Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைத்தொகுப்பு: தினமலர்

444 கதைகள் கிடைத்துள்ளன.

கனவுகளும், நிஜங்களும்!

 

  தெய்வசிகாமணி என்ற அபூர்வமான பெயர் கொண்ட அந்த இளைஞன், கறுப்பாக, வெடவெட என்று இருந்தான். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு, “டக்டக்’ என்று திருத்தமாக பதில் கூறினான். 1,200 ரூபாய் ஸ்டைபண்டாக ஒரு ஆண்டு பெற்று, பயிற்சி பெற அரசாங்கம் அளித்துள்ள வாய்ப்பின் கீழ், நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த அந்த, கெமிக்கல் இன்ஜினியரிங் மாணவனின் ஆர்வமும், திறமையும் எனக்குப் பிடித்திருந்தது. அவன், அந்த ஓராண்டு பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டான். திருநீர்மலைக்கு அருகில் இருந்த ஒரு கிராமத்தில், மளிகைக் கடை


வெளிச்சத்துக்கு வராதவள்!

 

 இந்துவின் மனதில்தான், அந்த எண்ணம் முதலில் தோன்றியது. அன்று, ஞாயிற்றுக்கிழமை. மதிய உணவுப் படலத்திற்குப் பின், ஹாலில் கிடந்த சோபாவில், சாவகாசமாகச் சாய்ந்திருந்தாள் இந்து. எதிரேயிருந்த சுவரில் தொங்கிக் கொண்டிருந்த மாதக் காலண்டரில், பார்வை பதிந்திருந்தது. ஆகஸ்ட் மாதத் தேதிகளை, பெரிய பெரிய எண்களாய் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த அந்தக் காலண்டரின் மத்தியப் பகுதியில், விடுமுறையை அறிவிக்கும் விதமாய், சிவப்பு வண்ணத்தில் பளீரிட்டது அந்த ரெட்டை இலக்க எண்கள். அந்த எண்களை பார்த்த மாத்திரத்தில், இந்துவின் விழிகளில், ஒரு


இதுவும் மழலைதான்!

 

 சியாமளாவிற்கு, தான் நடந்து கொள்ளும் விதத்தை நினைத்தால், அவளுக்கே வெட்கமாக இருந்தது. சுத்தமாகப் பேச்சே வராத, இரண்டு வயது குழந்தையை தன்னுடைய ஜென்ம விரோதி போல் நினைத்து, நடந்து கொள்வது, ஒன்றும் பெருமைப்படக் கூடிய செயலல்லவே. இத்தனைக்கும் அந்தக் குழந்தை, இந்த வீட்டிற்குள் வந்தது முழுக்க முழுக்க இவளுடைய விருப்பத்திற்காகவும், வற்புறுத்தலாலும் என்று சொன்னால், கேட்பவர்க்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கும். சியாமளாவுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பே கிடையாது என்பது, அவளுக்கு மணமான, இரண்டாவது ஆண்டே தெரிந்து விட்டது.


திக்கு தெரியாத காட்டில்

 

 மெதுவாக எழ முயன்றாள் வைதேகி. ஆனால், உடல் ஒத்துழைக்க மறுத்து, கீழே சாய்ந்தது. அயர்ச்சியுடன் கண்களை மூடினாள். உடனடியாக செய்ய வேண்டிய வேலைகள், வரிசையாக நின்று பயமுறுத்தின. பல்லைக் கடித்தபடி எழ முயற்சித்தவள், முடியாமல் மீண்டும் படுத்து விட்டாள். நாலைந்து நாட்களாகவே, அவளுக்கு தலை சுற்றல் இருந்தது. முதல் நாள் மகனும், மருமகளும், ஒரு திருமணத்திற்கு குழந்தைகளுடன் காலையிலேயே சென்று விட்டதால், இவளுக்கும், இவள் கணவர் வீரராகவனுக்கும் மட்டுமே சமையல் செய்ய வேண்டும். அப்படியும் வீரராகவனுக்கு கீரை


தரிசு நிலம்!

 

 இன்று, நகரங்கள் ஆதிக்கம் செலுத்தி, கிராமங்களின் வளத்தை கறந்து விடுகின்றன. இதனால், கிராமங்கள் நாசம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கம் மறைந்து, கிராமங்களுக்கு, நகரங்கள் துணையாக இருந்து உதவ வேண்டும் என்று, என்னுடைய மனோபலம் எனக்குக் கூறுகிறது. கிராமங்களைச் சுரண்டுவது, திட்டமிட்டு நடைபெறும் பலாத்காரம் தான். அகிம்சையின் அடிப்படையில், சுயராஜ்யத்தை தீர்மானிப்பதற்கு கிராமங்களுக்கு ஓர் இடத்தை நாம் அளித்தாக வேண்டும்! — மகாத்மா காந்தி, “அரிஜன்’ இதழில். (20.1.1940) காந்தி ஜெயந்தி அன்று, பஞ்சாயத்து அலுவலகம் முன்,


வீரமும், விவேகமும்!

 

 மாலை ஐந்து மணி. நானும், பாலாவும், இனியனும், கோவில் திடலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சம்பத்தும் வந்து சேர்ந்தான். “”என்னடா… நம்ம வீராதி வீரரைக் காணோம். நமக்கு முன்னாடியே வந்து உட்கார்ந்திருப்பாரே?” என்றான் பாலா. அவன், “வீராதி வீரன்’ என்று குறிப்பிட்டது, கண்ணன் சாரை தான். “”எங்காவது போர் மூண்டிருக்கும். அவர் அங்கே போய் களத்தில் இறங்கி, வாள் வீசிக் கொண்டிருக்கிறாரோ என்னமோ,” என்றான் இனியன். “”அப்படியே இருந்தாலும், பொழுது சாயும் நேரத்தில், போரை நிறுத்தி அவரவர்


வாழைக்கன்று கல்யாணம்!

 

 அழகான அந்திப் பொழுது எப்படி சென்று மறைந்ததென, யாருக்கும் தெரியாதது போல், எனக்கும், விஜயராகவனுக்கும், எப்போது, எப்படி அன்பு ஊடுருவியது என்று, சொல்லத்தெரியவில்லை. நட்புக்கு வயது வரம்பில்லை என்பதற்கு உதாரணமாய், அவர் அறுபதில் இருந்தார்; நான் இருபதில் இருந்தேன். அண்டை வீட்டுக்காரர்களான நாங்கள், மாலைப் பொழுதுகளில், ஈசிசேரில் எதிரெதிரே அமர்ந்து, பேசிக் கொண்டிருப்பதை பார்க்கலாம். அவரிடம் நிறைய வித்தியாசமான அணுகுமுறைகள் உண்டு. துளசி, ஜாதி பத்திரி, திண்ணீர் பத்திரி, மரிக்கொழுந்து என, மூலிகைச் செடிகள், அவர் கொல்லைப்


நாலு பேரு கூடி வாழ்த்த…

 

 பிலால் சொன்ன அந்த நல்ல சேதியைக் கேட்டதும், அவரை நெஞ்சோடு அணைத்து, முஸாபா செய்தார் அப்துல்லா. “”நல்ல சேதி சொன்னீங்க பிலால்… அல்லாவுடைய கருணை, இப்பதான் நம்ம மேல பட்டிருக்கு… என் மகள் யாஸ்மீனைவிட, உங்க மகள் ஆயிசா, இரண்டு வயசு மூப்பு… ஆனா, என் மகளுக்கு நிக்காஹ் முடிவாயிடுச்சு; உங்க மகளுக்கு ஆகலையேன்னு, நான் அல்லா கிட்ட மன்றாடிட்டு இருந்தேன்… அதுல பாருங்க, அல்லா என்னுடைய துவாவை நிறைவேத்தி தந்துட்டான்.” உண்மையான நண்பனின் சந்தோஷம் மட்டுமல்லாது,


எல்லாவற்றிலும் பங்கு!

 

 “”யாரு, யாருக்குடா அண்ணன்… போடா வெளில… இனிமேல் இதுமாதிரி அண்ணன், தம்பின்னு உறவு சொல்லிக்கிட்டு இங்கே வந்தே, நடக்கறதே வேற. வெளில போ…” என்று, கோபமான குரலில் கத்தினான் அசோகன். இவ்வளவு மோசமான எதிர்ப்பை எதிர்பார்த்திராத கணேஷ், வெல வெலத்துப் போனான். “போனதும் சிறிது எதிர்ப்பு இருக்கும். பிறகு சரியாகிப் போய் விடும்…’ என்று எண்ணித்தான், புறப்பட்டு வந்தான் கணேஷ். ஆனால், வெட்டி முறிக்கிற ஆவேசப் பேச்சாய் அல்லவா இருக்கிறது. நிறைய யோசனை செய்து, வேண்டியவர்களிடம் ஆலோசனை


அறிந்தும் அறியாமல்!

 

 அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினான் ராஜேந்திரன். வந்ததும் வராததுமாய், “”கனகா… கனகா… காபி கொண்டா…” என்று சொல்லிவிட்டு, பாத்ரூம் சென்றான். முகம் கழுவி, வேறு உடை மாற்றியவன் கூடத்தில் வந்து அமர்ந்தான். எப்போதும் அலுவலகத்தில், வேலை வேலை என்று இருக்கும் ராஜேந்திரன், இன்று சீக்கிரமாக வந்து இருப்பது கண்டு அதிசயமாய் பார்த்தாள் கனகா. “”இந்தாங்க…” காபி டம்ளரை நீட்டினாள். “”எங்க பிள்ளைங்க… அவங்க குடிச்சாங்களா?” கேட்டவாறே காபியை வாங்கி குடித்தான். “”ம்… அவங்க குடிச்சிட்டு, இப்பதான் படிக்கப்