கதைத்தொகுப்பு: தினமணி

577 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்வெளி

 

 சுந்தரமூர்த்தி, டேய் “”சுந்தரமூர்த்தி”… திரும்பத் திரும்ப யாரோ கூப்பிடுவது காதில் விழுவது போலிருக்கிறது. எங்கோ தூரத்தில் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல குரல். எனக்கு நான் படுத்திருக்கிறேனா, உட்கார்ந்திருக்கிறேனா என்று எதுவும் புரியாத ஒரு நிலை. மொத்த உடம்பும் இல்லாததுபோல் இருக்கிறது. இலேசாக அவ்வப்போது ஏதோ பேச்சு சத்தம் கேட்பதும் அது என்ன என்று யோசிக்கக் கூட முடியாமல் மெல்ல அது கனவுபோல களைந்து போவதும்… எத்தனை நாள்களாக என்று நினைவில் இல்லை. மீண்டும் சுந்தர், சுந்தர் என்ற


யதார்த்தம்

 

 அப்பா, லெட்ரீன் குழாய் ஒழுகுது” சொல்லிக் கொண்டே வேகமாய் வெளியே வந்தான் சதீஷ். கதவைப் படாரென்று சாத்தும் சத்தம். அதனைத் தொடர்ந்து டொக், டொக்கென்று விளக்குகளை சத்தமெழ அணைக்கும் சத்தம். ஒரே ஆர்ப்பாட்டம்தான். போவது கழிப்பறைக்கு. அதற்கு குளியலறை லைட்டையும் சேர்த்து ஏன் போட்டுக் கொள்ள வேண்டும். அதுவும் பட்டப் பகலில். போதுமான வெளிச்சம் உள்ள இடம்தான். ஆனாலும் லைட்டை எரிய விடுவது என்பது வழக்கமாகிவிட்டது. இவனுக்கும் சரி, இவன் அம்மாவுக்கும் சரி. ரெண்டு பேரும் சொன்னால்


கங்கைக் கரைத் தோட்டம்

 

 இந்த முறை எப்படியும் ஒரு பத்து அல்லது பதினைந்து நாள்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தன் கணவர் சுப்பிரமணியனோடு அலகாபாத் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடியே தீர வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு புறப்பட்டு விட்டாள் சப் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி. நினைத்தபடியே திரிவேணி சங்கமத்தில் நீராடிவிட்டு லோகேஷ்வர் ஆலயத்தையும் தரிசித்துவிட்டு அலகாபாத் கடை வீதி வழியே தன் கணவரோடு சென்று கொண்டிருந்தபோதுதான் அந்த உருவம் விஜயலெட்சுமியின் கண்களில் தென்பட்டது. காவி வேட்டியுடனும், காவி மேல் துண்டுடனும் வெற்று


தடுமாற்றம்

 

 பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. தெரு விளக்குகள் வழக்கம் போல் இருட்டுக்குத் துணையாக எரியாமல் நின்றிருந்தன. கோயிலுக்குப் போன அம்மா இன்னும் வரவில்லையே என்று வீட்டை விட்டு வெளியே வந்தேன். குளிர் காற்று முகத்தில் அறைந்தது. டிசம்பரில் போனால் போகிறது என்று எப்போதாவது தலை காட்டும் ஈரப் பசை கலந்த காற்று. “”உங்க மதுரைல வருஷத்துக்கு மூணு ஸீசன் தான். ஹாட், ஹாட்டர், ஹாட்டஸ்ட்” என்று என் நண்பன் மூர்த்தி சொல்லிச் சிரிப்பான். மூர்த்திக்கு அப்படி ஒன்றும்


ஏழாவது ஆள்

 

 “”ஒரு பெரிய அலை என்னை கிட்டத்தட்ட இழுத்துக்கிட்டே போயிடுச்சு”, ஏழாவது ஆள் சொன்னார். முணுமுணுப்பாகத்தான் இருந்தது. “”எனக்கு பத்து வயது இருந்தபோது ஒரு செப்டம்பர் மாதம் அது நடந்தது”. அந்த இரவில் கதை சொல்ல வேண்டியவர்களில் அவர்தான் கடைசி ஆள். கைக்கடிகாரத்தில் மணி பத்தைக் கடந்திருந்தது. வட்டமாக உட்கார்ந்திருந்த சிறிய குழுவினரால், வெளிஇருட்டிலிருந்து கிழித்துக்கொண்டு வரும் காற்று மேற்கு பாய்வதைக் கேட்க முடிந்தது. காற்று மரங்களை உலுக்கி, ஜன்னல்களைத் தடதடக்க வைத்து, இறுதியில் ஒரு சீட்டியொலியுடன் வீட்டைக்


பெண் பார்த்தல்

 

 “”பொண்ணு கெடைக்கறதே அருந்தலா இருக்கு. இதுல நாம நெனக்கிற மாதிரியெல்லா முடியாது முருகா” என்ற வீரம்மாள், “”நீ கொம்பு ஓவ்வார்த்த சுத்தமில்ல. தண்ணியடிச்சிருக்கியா?” என்று ஒரே மூச்சில் பேசினாள். வீரம்மாளின் வீட்டின் வெளித்திண்ணையில் குத்துக்காலிட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த முருகன், “”கஞ்சி குடிக்கவே காசக்காணம். காலையிலருந்து சும்மா கெடக்கேன். நீ வேற சும்மாருக்கவன ஆவுகப்படுத்தி விடாத” என்றான். “”அந்த மாதிரிதான புரியாம பேசிட்ருக்க. சொன்னா, ஒரு வார்த்தைல அடங்க மாட்டேங்கிறியே” “”ம் ஒடனே என்னையச் சொல்லு. நேத்தக்கி


தாரம்

 

 கதீஜா புலம்பத் தொடங்குவதற்கும் கல்யாணத் தரகர் காதர் பாய் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அன்வர் அவசரமாக எழுந்து காதர் பாயைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்துத் திரும்புவதற்குள் கதீஜாவின் புலம்பல் கூடத்தை எட்டி எதிரொலித்தது. “”நேத்து ராவெல்லாம் மூச்சு இரைப்பு…நேத்தே போய் அந்த சித்த மருத்துவர் கிட்ட சுவாச கல்பம் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன். உங்களுக்கும் கடை, வியாபாரம்னு ஆயிரம் வேலைகள்.. ஹும்..பாழாய்போன இந்த மூச்சு இரைப்பு..” “”இல்லை கதீஜா..நான் நேத்தே போனேன்.


கௌரவம்

 

 “பளார்’ என்று ஓர் அறை. பிரியாவின் இடது கன்னத்தில் மின்னல் தாக்கியது போலிருந்தது. “”காதல் திருமணமா – அதுவும் சாதிவுட்டு சாதி கேட்குதா உனக்கு?” என்று சொன்னபடி அவர் வெளியே போய் கதவை அறைந்து சார்த்தி பூட்டினார். அறைபட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு, “”மாமா மாமா ஏன் உள்ளே வச்சு பூட்றே?” என்று ஜன்னலருகே சென்று கதறினாள். அவர் காது கேளாதவர் போல் விரைந்தார். அவர் நின்ற இடத்தில் சாராய நெடி சுழன்று கொண்டிருந்தது. கன்னத்தைத் தடவினாள். நெருப்பு


தியாகம்

 

 வழக்கத்திற்கு மாறாக அன்று செசன்ஸ் கோர்ட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புரிசை கிராம மக்கள் வீர நரசிங்க அவதாரம் வேஷம் போடும் வீரபத்ரனின் கொலை வழக்கு நடக்கப்போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். “சைலேன்ஸ்’ என்று டவாலி கூற, நீதிமன்றமே அமைதியானது. நீதிபதி டயஸின் மீது ஏறி இருக்கையில் உட்கார, நின்றிருந்த அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். “வீரசிங்க-வீரபத்திரன்’ என்று மூன்று முறை அழைக்க கைகளில் விலங்கிடப்பட்ட வீரபத்திரன் குற்றவாளிக் கூண்டில் வந்து நின்றான். இப்பொழுது நீதிபதி பெஞ்ச்


தொடரும் பயம்!

 

 விடிய விடிய அடைமழை அடித்துக்கொண்டிருந்த ஐப்பசி மாதம் நான்காம் தேதி காலை ஆறு மணி. அழகர்சாமிக்குத் தன் கைபேசி ஒலிக்கும் சப்தம் கேட்டது. அழகருக்குப் பெரும்பாலும் காலை எட்டுமணிக்குப் பின்பே அழைப்புகள் வரத் துவங்கும். ஆறு மணிவாக்கில் அவ்வளவாக அழைப்புகள் வருவதில்லை. அதற்கு முன் அந்த நேரத்தில் அழகருக்கு வந்த அழைப்புகள் அநேகமாக ஏதாவது ஒரு துக்கச் செய்தியைத் தாங்கியே வந்திருக்கின்றன. ஆகையால் ஒருவித நடுக்கதினூடாகவே கைபேசியை எடுத்துப் பார்த்தான். பதிவு செய்து வைத்த எண்ணில்லை. அழைப்பை