கதைத்தொகுப்பு: தினமணி

577 கதைகள் கிடைத்துள்ளன.

அந்தராத்மாவின் ஆட்டம்

 

 “டக்கரடக்கரடக்கர” அந்தரத்தில் அந்தக் குழந்தை கயிற்றில் மிதந்தபடி வித்தையாடிக் கொண்டிருக்க கீழே குழந்தையின் தாயார் – அப்படித்தான் இருக்க வேண்டும் – ஒடிசலான உடல் அமைப்போடு சர்க்கஸ் பெண்ணின் உடையுடன். பம்பைக் கொட்டு ஒன்றை கழுத்தில் தொங்கவிட்டு தாளம் தப்பாமல் அடித்துக் கொண்டிருந்தாள். “இப்படி ஒரு காலை நேரத்தில், நட்டநடு வீதியில் அதுவும் பஸ் ஸ்டாண்டில் இந்த கூத்தை நடத்தவிடலாமா? பச்சை மண்ணை அந்தரத்தில் ஆடவிட்டு எப்படி ரசிக்க முடிகிறது?’ தலையை குலுக்கிக் குலுக்கி பதிவான காட்சிப்


இரு முகங்கள்!

 

 மகாதேவன் என்னுடைய நண்பன். நான் மதுரையில். அவன் சென்னையில், மேற்கு மாம்பல வாசி. சமீபத்தில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டான். வலது கண், சர்க்கரை நோய் இல்லை என்பது ப்ளஸ் பாயிண்ட். கண்களை இடுக்கிக் கொண்டுதான் சிஸ்டத்தில் வேலை செய்வான். நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேனேஜர். கை நிறைய சம்பளம். அதற்கு ஏற்றாற்போல அசுர வேலை. காலையில் வங்கி தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்பே செல்ல வேண்டும். வங்கியைச் சுத்தம் செய்து, குடிநீர் பிடித்து வைத்து,


மந்திரச் சொல்

 

 “”நான் பாட்டுக்கு செவனேன்னு வீட்லயிருந்தேன். முந்திரி பழம் பறிச்சு சாப்பிடலாம்ன்னு சொல்லி கூப்பிட்டுவந்து, என்னை மட்டும் சிக்கல்ல மாட்டிவுட்டுட்டு ஊர்க்காரப்பசங்க ஓடிட்டானுங்க. இதுக்குத்தான் அப்பவே துணைக்கு வரல்லன்னு சொன்னேன்” என்று முனகினான் மச்சராசு. பொறியில் சிக்கிக் கொண்ட எலி போல, குத்தகைக்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டான். தப்பி ஓட முடியாதபடி தேங்காய் நார் கயிற்றில் இறுக்கி பிடித்து மரத்தில் கட்டியிருந்தனர். வெயில் உச்சிக்கு ஏற ஏற எரிச்சல் தாங்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வார்களோ? ஏது செய்வார்களோ?


டவுன் பஸ்

 

 வாசலில் வந்து நிற்பவனைப் பார்த்த சுப்ரமணி, “”யாரோ ஆள் கெடச்சுட்டாங்க போலிருக்கு” என்றான். கோபால் பின் பக்கம் தலையைத் திருப்ப முயன்று பின் அக்கறையெடுத்துக் கொள்ளாதவன் போல் அப்படியே நின்றான். பனியன் கம்பனிக்கென்றான இயந்திரங்கள் ஓடும் சப்தம் ரீங்காரமாய் கேட்டது. உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடுகிறவனின் மூச்சிரைப்பு போல அது சுப்ரமணிக்கு இப்போதெல்லாம் படுகிறது. மூச்சிரைத்தபடி ஏதோ வாகனம் பின்பக்கம் ஓடிப்போயிற்று. “”என்ன நின்னுட்டே? உள்ளே வர்றது.. நீ யாரைக் கூட்டிட்டு வந்தாலும் வரவேற்க மொதலாளிதா இருக்காறே?”


சூடு

 

 “”இன்னும் பத்து நிமிடம் இருக்கு சார்” பரிமாறுபவர் சற்றே இளக்காரமாகச் சொன்னாரோ? எங்கள் கம்பெனியின் ஆண்டு விழா இந்தூரில் ஐந்து நட்சத்திர ஓட்டலொன்றில் ஏற்பாடு செய்திருந்தனர். எனது பிரிவின் கூட்டம் முடிந்ததும் பந்திக்கு முந்தும் பறக்காவெட்டியாய் முதல் ஆளாய் டின்னருக்கு வந்து நிற்கிறேன். நமது பிரிவின் ஆள் எவனாவது வரமாட்டானா? “”ஹலோ சார்” “”இது சோமசுந்தர் இல்லையோ… ஹைதராபாத் கிளை?” “”யெஸ் சார். நல்லா நினைவு வச்சிருக்கீங்க சார். எப்படி இருக்கீங்க சார்?” சோமசுந்தருக்கு வார்த்தைக்கு ஒரு


பத்மநாபா தியேட்டரும்… நான்கு ரூபாயும்…

 

 நாகர்கோயில் பேருந்து நிலையத்திற்குள் பஸ் வந்தது. நேற்று இரவில் சென்னையிலிருந்து புறப்பட்ட பஸ். இனியும் இதே பஸ்சில்தான் குலசேகரம் செல்ல வேண்டும். பயணக் களைப்பு உடலைச் சோர்வடைய வைத்திருக்கிறது. ஓட்டுநரும், நடத்துநரும் இறங்கி டீ குடிக்கச் சென்றனர். எனக்கு டீ குடிக்க வேண்டுமென்று தோன்றவில்லை. ஊருக்கு வந்து ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. குடும்பத்தில் நல்லது கெட்டது என எதிலும் பங்கேற்கவில்லை. சினிமாவில் உதவி இயக்குநராக காலங்கள் போனது தெரியவில்லை. இயக்குநராகாமல் திருமணம் செய்து கொள்ளமாட்டேன்


மழை மேகம்

 

 ஜேஜியின் மனைவி வந்திருப்பதாக என்னுடைய மனைவி சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “”நீங்க சொன்னாத்தான்ணே கேப்பாக” “”சரிம்மா… என்னதான் பிரச்னை?” என்றேன். “”வருமானத்துக்கு ஒண்ணும் குறையில்லண்ணே… ஆனா முழுசும் குடும்பத்துக்கு வராம….” அதிர்ந்து போனேன். “”என்னம்மா சொல்ற நீ?” ஜேஜி என்று நாங்கள் சுருக்கமாக அழைக்கும் ஜே.கோவிந்தன் முகம் மனதுக்குள் வந்து போயிற்று. “”நீ சொல்றதுக்கு நிறைய அர்த்தம் இருக்குதே…. ஏதாவது பொண்ணுங்க விஷயத்துல காசு போகுதா? ” “”அய்யய்யோ இல்லண்ணே… அதுல அவரு மேல ஒரு


கறுப்பு ஆடு

 

 முதல் இரவில் கோவிந்தன் தன் மனைவியிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான். “”ஏன் ஒனக்கு தாமரைன்னு பேரு வைச்சாங்க?” இதைக் கேட்ட தாமரைக்கு அச்சம் வந்தது. தயக்கத்துடன் “”ஏங்க மாமா கேக்கறீங்க?” என்று கேட்டாள். “”ஒண்ணும் பயப்படாத; சும்மாதான் கேட்டேன்” என்றான் கோவிந்தன். “”எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பூவுன்னா ரொம்ப பிடிக்குங்க; மொதபுள்ளங்க ரெண்டும் ஆம்பளயா பொறந்ததால பூ பேர வக்க முடியலியேன்னு அவங்களுக்கு ரொம்ப கொறை. அதனாலதான் நான் பொறந்ததும் எனக்கு ஒரு பூவு பேர


பரிகாரம்

 

 சுப்பிரமணியன் இப்பத்தான்யா அரசு வேலையில சேர்ந்தான். சேர்ந்து ஆறுமாசம் கூட ஆவலப்பா, அதுக்குள்ள ஒரு நர்சு கூட காதல் பண்ண ஆரம்பிச்சிட்டான்னு செய்தி வந்திடுச்சி. இதான இன்னைக்கு நாட்ல சுலுவான வேல?. பெத்தவங்களுக்கு எப்படியிருந்திருக்கும்?. ஒரே புள்ள. முள் வேலியோ, சப்பாத்தி கள்ளியோ, ஆப்புட்றதை புடிச்சி படர்ந்துட்ற வயசாச்சே. எரியறதை புடுங்கிட்டா கொதிக்கிறது அடங்கிப் போவும்னு ஒரு சொலவடை உண்டு. .வூட்ல அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சிட்றதுன்னு அவசரடியா முடிவு கட்னாங்க. இவங்க முடிவு கட்னா


பெரிய தண்டனை

 

 சேது ஆட்டோவிலிருந்து இறங்கிய போது பார்த்தான். அந்த வீட்டு வாசலில் ஏகப்பட்ட கூட்டம். ஏன்,என்னவாயிற்று? “”என்ன ஆச்சு ஸார்?” அங்கே நின்று கொண்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தவரிடம் கேட்டான். “”வேதநாயகம் ஸார் இறந்து போயிட்டார்” சேது ஸ்தம்பித்துப் போனான். கைப் பையிலிருந்த கல்யாண அழைப்பிதழ் அவனைப் பார்த்துச் சிரித்தது. தன் திருமணத்திற்குப் பத்திரிகை கொடுத்து அழைக்க வந்தவன் இவன். ஆனால் அதற்குள் வேதநாயகத்திற்கு வேறொரு இடத்திலிருந்து அழைப்பு வந்துவிட்டதா? இனி? கூடிக் கூடி பேசியபடி ஜனங்கள் நின்றிருந்தனர்.