கதைத்தொகுப்பு: தினமணி

577 கதைகள் கிடைத்துள்ளன.

கொள் எனும் சொல்ல்லும்மா

 

 - ஏ கிறுக்கு. அப்பாதாம்மா பேசறேன் . – வீட்டுக்குள்ளயா இருக்க? வாசலுக்கு வந்து பேசு. – எனக்கு நல்லா கேக்குது. – ம்… நல்லாருக்கே நல்லாருக்கேம்மா… பேரப்புள்ளீக சொகந்தான? – ம். இருக்கா. அவளுக்கென்ன? – நா வெளீல இருக்கேம்மா…. அம்மா வீட்லதே இருப்பா. – ஆமா… சலூன் கடைல பேப்பர் பாக்க வந்துருக்கேன். – ஆமாமா, வேல நாலுமணிக்கு முடிஞ்சிருதுல்ல. வீட்டுக்குப் போய்ட்டு வந்துட்டேன். சரி, நீங்கல்லாம் நல்லாருக்கீங்கள்ல? – மருமகெ? சரி சரி


கிணறு

 

 காலையில் கண்விழித்தபோது மழை பெய்யும் சத்தம் கேட்டது. கதவை திறக்காமல் ஜன்னலை மட்டும் திறந்து பார்த்தேன். மழையில் தெரு குளித்திருந்தது இந்த மழை இரவே துவங்கியிருக்க வேண்டும். தூக்கத்தில் கவனிக்கவில்லை மழையுடன் சேர்ந்து வந்த காற்றின் வாசனையில் சற்று நேரம் லயித்தேன். இரவு தூக்கத்தில் கண்ட கனவு நினைவு வந்தது. அந்த கனவிற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. ஆனால், கொஞ்ச நாளாகவே எனக்கு அந்தக் கனவு தொடர்ந்து வருகிறது. வெட்ட வெளி பொட்டல் காடு நட்ட


புகார்ப் புத்தகம்

 

 திருவரசு தம் மனைவியுடன் கடலூருக்குப் போவதற்காகக் கும்பகோணம் தொடர் வண்டி நிலையத்தில் காத்திருந்தார். கோடைகாலப் பகல். கேட்க வேண்டுமா? வெயில் தகித்தது. பாட்டிலில் தண்ணீர் தீர்ந்துவிடவே, நிலைய அண்டாவில் நிரப்பிக் கொள்ள எண்ணி, அருகில் போய்ப் பார்த்தால், காலி! பெருத்த ஏமாற்றம். பயணியர் சேவையில் இன்றியமையாததல்லவா குடிநீர் வழங்கல்? அதுவும் வெயில் காலத்தில்? கடமை தவறிய நிலையத் தலைவர்மீது கோபங் கொண்டார். துணைவியின் அருகில் வந்தமர்ந்து, “”தண்ணீர் இல்லை; கடமையைச் செய்பவர்கள் வரவரக் குறைந்துகொண்டே வருகிறார்கள். யாராவது


எல்லாமே ஸ்டண்ட்தான்!

 

  கோடம்பாக்கத்தின் அந்த குறுகலான தெருவில் ஒரே ஜனத்திரள். தெருவின் கோடியில் கண்ணாடி குளிர்சாதனப் பேழையில் ஸ்டண்ட் நடிகர் ராஜபாண்டியின் சடலம். பேழையின் மேல் குவியல் குவியலாக மலர் மாலைகள். தற்போது வசூல் வேட்டையில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் உன்னத நடிகரின் படத்தில் நடித்தவர் ராஜபாண்டி. ஒரு மாதத்துக்கு முன் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது உன்னத நடிகருக்கு “டூப்’ ஆக நடிக்கும் போது தலையில் பலத்த அடிபட்டு கோமாவில் விழுந்து… படம் “ஓகோ’வென்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று


அகிலாவும் அரசுப் பள்ளியும்

 

 அகிலாவை என் தம்பிக்காக பெண் பார்க்கப் போய் பூடகமாய் நிராகரித்துவிட்டு வந்து 30 வருடங்களுக்குப் பின் அவளது வீட்டுக்கு இன்று போகிறோம். இம்முறை எனது இரண்டாவது மகளுக்கு அவளது மூத்த மகனைச் சம்பந்தம் பேச. அந்தக் காலத்தில் அகிலாவைச் செய்ய வேண்டாமென்று சொன்னதில் அக்காவாகிய எனது அழுத்தம்தான் அதிகமிருந்தது என எல்லோருக்கும் தெரியும். எனக்குத் திருமணம் முடிந்து அப்போது ஒரு வருடமாகியிருந்தது. இருவருக்கும் வங்கிப் பணி. ஒரே ஊர். தம்பி அரசு பணிப் பொறியாளர். அகிலா தூரத்து


எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?

 

 அன்று ஒரு புதிய முடிவோடுதான் படுக்கையிலிருந்து அவர் எழுந்தார். அவரது மனைவி ஊருக்குச் சென்றிருந்தாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று தனது திட்டத்தை நிறைவேற்றத் தீர்மானித்தார். முதலில் பல் துலக்கச் சென்றார். ஃப்ளோரைடு நுரை கொப்பளிக்கும் பற்பசையைப் பயன்படுத்தக்கூடாது என்று முடிவு செய்து சமையல் உப்பைக் கொஞ்சம் பொடி செய்து பல் துலக்கினார். இதுதான் பல்லுக்கும் ஈறுக்கும் நல்லதாம். அடுத்ததாக தண்ணீர் குடிக்கச் சென்றார். காலையில் எழுந்ததும் 4 முதல் 6 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லதாம்.


சட்டத்துக்குள் சில மான்கள்

 

 எனக்கு அஞ்சு வயசாகும்போதுதான் அந்த ஊருக்குப் போனோம். எங்கப்பாவுக்கு வேலை மாத்தலாயிட்டதால. ஊருன்னு சொன்னா அது ஒண்ணும் ரொம்பப் பெரிய ஊரெல்லாம் கிடையாது வடக்கு தெற்கா ஒரு ஒண்ணரை கிலோமீட்டரும், கிழக்கு மேற்கா ஒரு அரை கிலோமீட்டரும்தான் இருக்கும். இதுக்குள்ளயே ஒரு பிள்ளையார் கோவில், அதையொட்டி ஓர் அழகான குளம், ஊருக்கு வெளியிலே ஓர் ஏரின்னு எல்லாமே இருக்கும். அந்த ஊரைப்பத்தியல்ல இந்தக் கதை. நாங்க அந்த ஊருக்கு வந்து சேர்ந்த கொஞ்ச நாளிலே எங்கப்பா என்னை


உபகாரம்

 

 காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு லாகவமாக பைக்கை ஓட்டினாலும் அந்த இடத்தை அடைய முக்கால் மணி நேரம் ஆகலாம். ஸ்வேதாவின் கணவன் மகேஷ், “”கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பும்மா” என்று அவசரப்படுத்திக்கொண்டிருந்தான். அப்பொழுதுதான் ஸ்வேதா கண்ணாடி முன் நின்று நிதானமாக ஏதோ ஒரு கிரீமை முகத்தில் பூசிக் கொண்டிருந்தாள். “”இதோ பாரு ஸ்வே… நாம ஒன்னும் செல்ஃபி எடுத்துக்கப் போகலை. உனக்கு இப்போ


ஒரே ஒரு தடவை

 

 அம்மா”ஏதோ வேலையாக இருந்த சீதா திரும்பினாள். கிடார் வகுப்பிலிருந்து சரவணன் வீடு திரும்பி இருந்தான். “”காபி கொண்டு வரட்டுமா?” “”வேண்டாம்மா. இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னு கேளு” “”யாரையாவது லவ் பண்றியா?” “”போம்மா நீ. ஒரு அம்மா தன் பையன் கிட்டே கேக்கற கேள்வியா இது? அதுக்கும் மேலே” “”அதுக்கும் மேலே மேலே எனக்கு உத்தரம் தான் தெரியுது.” ”சரி நானே சொல்றேன். எங்க மாஸ்டர் இருக்கார் இல்லை”” “”உம்” “”ரகுவரன் ஸார்” “”உம்”


இழப்பு

 

 மரத்தடி மேடையில் உட்கார்ந்திருந்த நாகு, எதிர்மரத்தில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த குருவியை வியப்புடன் மறுபடியும் பார்த்தான். அவன் அதை விரட்டுவது போல் செய்த சைகைகளால் பாதிக்கப்படாதது போல அது உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்று, அது அவனது சைகைகளை அலட்சியம் செய்து இருக்க வேண்டும். அல்லது அது ஆழ்ந்த சிந்தனையில் இருக்க வேண்டும். அது கண்களை அப்படி இப்படி சுழற்றிக் கொண்டிருந்ததிலிருந்து அதற்குத் தெரிகிற கண்கள்தான் இருக்க வேண்டும் என்று